| திருவாரூர்த் திருநகரச் சிறப்பு | 99 |
Periya Puranam
சூழ்ந்து பிணைக்கப்பெற்ற
மாலைகள். எங்கும் - எங்கும் அணிந்த.
துணைவர் சூழ்மாலை - காதலர் காதலிகள் தொடர்ந்து உள்ள வரிசை.
இவைகள் எங்கும் உள்ளன.
அம்மனை
- மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்று. இஃது இறைவன்
புகழ்களை வாயினாற் பாடிக்கொண்டே அம்மனைகளைக் கையில் ஏந்தி
மேலே மேலே மாற்றி மாற்றி எறிந்து விளையாடுவதாம். அம்மனைகள் மூன்று
முதல் ஐந்து வரை கொள்வர். ஏனைக்கழல் -
பந்து முதலிய ஆட்டங்கள்
போலவே அம்மனையும் பாடலுடன். சேர்ந்து பயிலப் பெறுவதென்பது,
“தருந்தடக்கை
முத்தழலோர் மனைகடொறு மிறைவனது தன்மை
பாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே” |
என்பனவாதி திருவாக்குக்களால்
உணரப்பெறும். இதுபற்றியே “பாடும் அம்
மனைகள் எங்கும் பயிலும் அம்மனை” என்று உடன் சேர்த்துக் கூறினார்.
மேற்பாட்டிற் கூறிய சோலைகளிற் பயிலும் வீணை குழல்
- இசைகளும்
இவ்வாறே இறைவனைப் பற்றியன என்பதைத் தொண்டர் தம்மிருக்கை என்ற
குறிப்பாற் காண்க.
இப்பாட்டிலும் குறித்த பொருள்கள் தொடர்பு பெற்று
ஓரிடத்து
நிகழ்வன. யானைக்கன்றுகள் வளருமிடங்களும், மலர்ச் சோலைகளும்
நிறைந்து, இவற்றிற் கிடையே தோன்றும் மனைகள் மாளிகைகள் பல
வளங்களும் நிறைந்தனவாய்ப் பெண்கள் விளையாடுமிடங்களாகவும், நாயகர்
நாயகிகள் இன்ப வாழ்வுகொள்ளுமிடங்களாகவும் உள்ளன.
யானைப்பந்திகள் ஊருக்கு வெளியே உள்ளன என்பதை மேலே
கண்டோம். யானைக்கன்றுகள் மாளிகைகளின் பக்கம் சோலைகளில்
வளர்க்கப் பெறுவன.
கேதனம்
- “வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்”,
“விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்” என்றபடி கொடிகள் மனைகளின்
மேலும் மற்றும் நகரங்களின் பல இடங்களிலும் காணப்படும் மங்கலப்
பொருளாம். 33
| 84.
|
வீதிகள்
விழவி னார்ப்பும் விரும்பினர் விருந்தி
னார்ப்புஞ் |
|
| |
சாதிக
ணெறியிற் றப்பா தனயரு மனையிற் றப்பா
நீதிய புள்ளு மாவு நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய வெழுத்தா மஞ்சு முறுபிணி வரத்தா
மஞ்சும். |
34 |
(இ-ள்.)
வெளிப்படை. விழவு + இன் + ஆர்ப்பு - கோயிற்
றிருவிழாக்களில் எழும் இனிய முழக்கங்களும்; விரும்பினர் விருந்தின்
ஆர்ப்பும் - விரும்பி வருவோர்களுக்குச் செய்யும் விருந்தின் சிறப்பு;
இவ்விருவகை ஆர்ப்பும் வீதிகளில் மிக்கன; சாதிகள் நெறியில் தப்பா -
எவ்வெச் சாதியில் உள்ளோரும் தத்தமக்கு விதித்த ஒழுக்க நெறிகளிலிருந்து
தவறமாட்டார்கள்; தனயரும் மனையிற்றப்பா - வீடுகள் தோறும் (தப்பாமல்)
தனயர் உளர்; நீதிய புள்ளும் மாவும் - (பகை முதலிய குண
பேதங்களையுடைய) பறவைகளும் விலங்குகளும் அவற்றை ஒழித்துத் தத்தம்
வரம்பிலேயே நிற்கும்; நிலத்து இருப்பு உள்ளும் ஆவும் - தேவ உலகத்தில்
உள்ள காமதேனுவும் இந்நாட்டிலே இருக்க நினைக்கும்; ஓதிய எழுத்து ஆம்
அஞ்சும் உறுபிணி - வர - தாம் - அஞ்சும் - எல்லா உயிர்களும்
எழுத்தாகிய ஐந்தையும் (ஐந்தெழுத்தையும்) ஓதின; வரக்கடவனவாகிய
சென்மப் பிணியும் உயிர்களைப் பீடிக்க வருவதற்குத் தாம் (அக்காரணத்தால்)
அஞ்சும்.
(வி-ரை.)
விழவு - விழா என்பது குறியதன் கீழ் ஆக் குறுகியது.
விரும்பினர் விருந்தின்
- விரும்பினராகிச் செய்யும் விருந்து
என்றலுமாம். விருந்து - புதுமை. இது ஆகுபெயராய், புதிதாய் வருவோரை
உணர்த்தும். உலக
|
|
|
|