11.
குங்குலியக்கலய நாயனார் புராணம் |
தொகை
"கடவூரிற்
கலயன்ற னடியார்க்கு மடியேன்"
- திருத்தொண்டத்தொகை
வகை
"ஏய்ந்த கயிறுதன்
கண்டத்திற் பூட்டி யெழிற்பனந்தாட் சாய்ந்த சிவனிலைத்
தானென்பர் காதலி தாலிகொடுத் தாய்ந்தநற்
குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன் காய்ந்த வரற்கிட்ட
தென்கட வூரிற் கலயனையே." |
|
-
திருத்தொண்டர் திருவந்தாதி
விரி
831.
|
வாய்ந்தநீர்
வளத்தா லோங்கி மன்னிய பொன்னி நாட்டில்
ஏய்ந்தசீர் மறையோர் வாழு மெயிற்பதி யெறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் பண்டு தொண்டர்மேல் வந்த
கூற்றைக்
கய்ந்தசே வடியார் நீடி யிருப்பது கடவூ ராகும். |
1 |
புராணம்
:- இறைவனுக்குக் குங்குலியத் தூபமிட்டுத் திருப்பணிசெய்த
கலயர் என்னும் பெயரினையுடைய நாயனாரது சரிதவரலாறும் பண்புங் கூறும்
பகுதி. நிறுத்த முறையானே இலைமலிந்த சருக்கத்து நான்காவது கலய
நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார்.
தொகை
:- திருக்கடவூரில் அவதரித்த கலயனாரது அடியவர்களுக்கு
நான் அடிமையாவேன் இந்நாயனாரது ஊரும் பேரும் பேசிற்று.
வகை
:- காதலியின் தாலியைக் கொடுத்துக் குங்குலியங் கொண்டு,
காலனைக் காய்ந்த அரனுக்கு அனற்புகையிட்ட தென்கடவூரிற் கலயனாரைக்,
கயிற்றினைத் தன் கண்டத்திற்பூட்டிப் பனந்தாட் சிவனை நிலைப்பித்தவர்
என்பர் எனக் கூட்டி உரைத்துக்கொள்க. காதலி
- தம்மாற்
காதலிக்கப்பட்டவள். தாலி கொடுத்து 842
- பார்க்க; ஆய்ந்தநற்
குங்கிலியம் - ஒப்பில் குங்குலியம் - (840); அங்கணர் பூசைக்கான
நாறுகுங்குலியம் ஈதேல் (841); என விரித்தவை காண்க. நற்குங்கிலியம்
-
சிவபூசைக்காயினமையும் நறுமணமுடைமையும் குறிக்க நல் என்றார்.
கொடுத்து - கொண்டு - விலையாகத் தாலியைக் கொடுத்து வாங்கிக்
கொண்டு. அனற்புகை - அனலால் விடும்புகை.
முன் - முன்னாள்; பண்டு
- (831); அந்தணரைக் கொண்டுபோவதற்கு முன் என்றலுமாம். காய்ந்த -
சினந்த - உதைத்துருட்டிய. கூற்றைக் காய்ந்த (831); தென் - தென்றிசையில்
உள்ள, கடவூர் - அமிர்தகடத்தில் இறைவர்
எழுந்தருளியவூர். கடக்கும்
ஊர். கடப்பிக்கும் ஊர் என்றலுமாம். தென்றில்லை தென்றமிழ் என்புழிப்
போல இயைபின்மை நீக்கிய அடை. வடநாட்டில் உள்ள காசியும் காலனை
உதைத்த ஊர் எனப்படுதலால் அதனின்றும் வேறுணரத் தென்
என்றாரென்றலுமாம். கலயர் - நாயனாரது பேர். 835 பார்க்க. ஏய்ந்தகயிறு -
திருமேனிப் பூங்கச் சேய்ந்த மான வன் கயிறு - (857).
ஏய்ந்த - பொருந்திய.
சிவலிங்கத் திருமேனியிற் பூங்கச்சிற் பூண்ட. சாய்ந்த
- முன் சாய்ந்திருந்த.
853-ல் உரைத்தவையும் தலவிசேடமும்
|