குங்குலியப்
பொங்குதூபம் என்க. பொலிவுற -
தூபத்துக்குப்
பொலிவாவது மிக்க நன்மணம் பொருந்திச் செறிந்திருத்தல். "சாலவே
நிறைந்து விம்ம" என முன்னர்க் கூறியது மிது.
போற்றி
- சோர்வுபடாமற் பேணி. செல்ல
- செலுத்த. இவ்வாறு
நடத்த.
அங்கு - அந்நாளில். அங்கு இடச்சுட்டு காலங்
குறித்தது.
அருளினாலே
வறுமை வந்து அடைந்த பின்னும் - இதுபற்றி
445-ம் திருப்பாட்டினும் பிறாண்டு முரைத்தவை பார்க்க. அடியார்களுக்கு
வறுமையாகிய துன்பம் வரச் செய்தலும் அருளாமோ? எனின், இஃது
உண்மைநிலை யறியாதார் வினாவேயாமென்க. என்னை? செல்வ வறுமைகளும்
இன்பத்துன்பங்களும் ஒன்றுபோலவே அவ்வவர் வினைக்குத் தக்கபடி
இறைவன்தர வருவன. "விரைந்தாளுநல்குரவே", "நோவுளார் வாயுளான்" என்ற
தேவாரத் திருவாக்குக்களின்படி வறுமை முதலிய துன்பங்கள் அடிமையை
அளக்கும் கருவிகளாகவும் இறைவன் தருவன. "ஓடும் செம்பொனும் ஒக்கவே
நோக்குவார்" என்றபடி இன்பத்துன்பங்களிரண்டையும் ஒன்று போலவே
காணுவதாகிய இருவினையொப்பு என்ற பக்குவநிலை வரும்படி செய்து,
அடியார்களை ஆட்கொள்ளுதல் அருளேயாதல் காண்க.
பின்னும்
- உம்மை உணர்வு சிறப்பொடு எச்சமுமாம். வறுமையினும்
திருப்பணிதவாது உய்த்தலின் அருமை குறித்தது. பின்னும் தவாமை உய்த்தார்
என்க. "வளஞ்சுருங்கவும், முன்னை மாறில் திருப்ப ணிக்கண் முதிர்ந்த
கொள்கையராயினார்" (446) என்றதும் காண்க. தவாமை
- குறைவில்லாத
தன்மை. உய்த்தல் - கொண்டு செலுத்துதல்.
முன்
செய்பணி - வறுமை வருவதற்குமுன் சாலவே நிறைந்து விம்மக்
கமழ் தூபமிட்டுச் செய்தபடி என்பார் முன்செய் என்றார்.
செய்தபடி என்க. 7
838.
|
இந்நெறி
யொழுகு நாளி லிலம்பாடு நீடு செல்ல
நன்னில முற்றும் விற்று நாடிய வடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கண் மாளப் பயின்மனை வாழ்க்கை
தன்னின்
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள். |
8 |
(இ-ள்.)
வெளிப்படை.
இந்நெறியிலே ஒழுகுகின்ற காலத்தில் வறுமை
மிகவும் முடுகியதாதலின், தமது நல்ல நிலங்களையெல்லாம் விற்றும்,
நாடியுள்ள அடிமைகளை விற்றும் இவ்வாறு தமது பல அரிய செல்வங்கள்
எல்லாம் தீர்ந்து போயினவாகவே, பயின்ற இல்வாழ்க்கையிற் பொருந்திய
சுற்றத்தார்களுடனே மக்களும் வருந்தினார்கள்.
(வி-ரை.) இந்நெறி - மேற்பாட்டிற்
கூறியபடி வறுமை வந்தடைந்த
பின்னும் முன் செய்பணியில் தவாமை உய்த்த ஒழுக்கம்.
இலம்பாடு
- இல்லாமை - வறுமை. நீடு செல்லுதல் -
மிக முடுகுதல்.
நன்னிலம்
- நன்செய். உணவுக்கு
இன்றியமையாத நெல்லினை நேரே
தருதலால் இவற்றை நல் என்ற அடைமொழி தந்து வழங்குவது மரபு.
ஏனைநிலங்கள் தரும் விளைவுகள் நெல்லைப்போல அத்துணைச் சிறப்பில
ஆகலான் அவற்றைப் புன்செய் என வழங்குவர்.
நன்னிலம் - சிறந்த
விலையுயர்ந்த நிலம் என்றலுமாம்.
முற்றும்விற்றும்
- முற்றும் - என்ற முற்றும்மை நல்ல நிலங்களினும்
ஒன்றும் எஞ்சாமை குறித்தது. புன்செய்கள் இன்றியமையாதனவல்ல
ஆதலானும், வருவாய் குறைந்தனவாகலானும் பல நிலங்களுமுடையவன்
விற்கவேண்டிவரின் அவற்றையே முதலில் விற்பன். அதன் பின்னரே ஏனை
நல்லனவற்றில் தனக்கு உணவுக்கு வேண்டும் அளவுமட்டில் வைத்துக்
கொண்டு, ஏனையவற்றை விற்பன். இங்கு அவ்வாறன்றி நல்ல நில முழுதும்
விற்றனர் என்பதாம்.
|