வில்ஒத்த
நுதல் - பெண்மை யுறுப்பிலக்கணங்களுட்டலையிற்
றலைமையாயினதைக் குறிக்கவே ஏனையவெல்லாம் உடன்குறிக்கப்பட்டன.
விளைவு
எல்லாம் - பொன்முதலிய பல வளங்களையும் குறிக்க
எல்லாம் என்றார். பொன்னும் நிலத்தினின்
விளைவு என்றே காணப்படும்.
என்கொல் - வந்த வரலாறு என்பது வருவிக்க.
அல்லொத்த
கண்டன் எம்மான் அருள் - சிவபெருமானது
திருவருட் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருநீலகண்டத்தினை
இங்குக் குறித்தார். நாயனாரும் மனைவியாரும் இதில் அன்பு
செலுத்தியவர்கள் போலும். திருநீலகண்ட நாயனார் புராணம் பார்க்க.
தேவமாதர்கள் தாலியிழக்காமற் காத்த நீலகண்டனே என் தாலியை நான்
நீக்காமற் காத்தவன் என்றதும் குறிப்பாம். அல் - இருள். இங்கு இது கரிய
நிறத்தினால் சிவபெருமானது கண்டத்தில் விளங்கும் விடத்தை
ஒத்திருத்தலின் அதனைக் குறித்தது. எம்மான் - யாவர்க்கும் தலைவனாதலின்
தன்னை அடைந்தோர்களது துன்பஞ் சகிக்கலாற்றாது விரைந்து அருள்பவன்;
ஆதலின் நமக்கு அருள் செய்தனன் என்தாம்.
அருள்தர - எம்மான் தர என்னாது எம்மான்
அருள்தர என்றது
சிந்திக்கத்தக்கது. திருவருட்சத்தியே தரவந்தது. மேல் அருளாம்
- (846)
என்றார். இப்பொருள்களில் எல்லாம் மனைவியார் அவ்வப்பொருள்களைக்
காணாது சிவனது திருவருளையே வெளிப்படக் கண்டார். "நந்தம்மை
யாளுடையா, டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு, முன்னி யவணமக்கு
முன்சுரக்கு மின்னருளே, யென்னப்பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்"
என்ற திருவாசகத்தில் உலகத்துன்ப நீங்கப் பொழியும் மழையினை அருளே
என்று கண்டு காட்டியபடி இவ்வம்மை யாரும் காண்கின்றார். நாயனார்
தாலியைக் குங்குலியத்துக்கு மாறியதும், திருக்கோயில் சேர்ந்திருந்ததும்,
இறைவன் ஆணைசெய்ததும் முதலியனவாக இடையில் நிகழ்ந்தனவொன்றும்
இவ்வம்மையார்அறிந்திலரேனும் இவ்வாறு கூறியது, என்றும் எல்லாம்
இறைவன தருளேயாகக் காணும் அவரது செம்மை பெற்ற திருமனத்தின்
இயல்பு காட்டியது. இதுபற்றியே அருள்தர என்று அருட்சத்தியைத்
துதித்தனர் என்க.
விளைவெல்லாம்
- வெயிலெல்லாம் என்பதுபோல ஒருமையிற்
பன்மை வந்தது; ஆதலின் வந்தது என்னும் ஒருமைவினை
கொண்டது. 19
850.
|
மின்னிடை
மடவார் கூற மிக்கசீர்க் கலய னார்தா
மன்னிய பெருஞ்செல் வத்து வளமலி சிறப்பை நோக்கி
"யென்னையு மாளுந் தன்மைக் கெந்தையெம் பெருமா னீசன்
றன்னரு ளிருந்த வண்ண" மென்றுகை தலைமேற் கொண்டார். |
20 |
(இ-ள்.)
வெளிப்படை. மின்போன்ற இடையையுடைய மடவாராகிய
அம்மையார் இவ்வாறு சொல்லச் சிறப்புமிக்க கலயனார் நிலைபெற்ற
பெருஞ்செல்வங்களின் வளம்மிக்க சிறப்பை நோக்கி, "என்னையும்
ஆட்கொண்டருளுகின்ற தன்மைக்கு எந்தையும் எமது பெருமானும்
ஈசனுமாகிய சிவபெருமானது திருவருள் இருந்த வண்ணம்தான் என்னே?"
என்று கைகளைத் தலைமேற் கொண்டு துதித்தார்.
(வி-ரை.)
மின்இடை - இடைசிறுத்துத் துவளுதல் பெண்களின்
சிறந்த
உடலிலக்கணங்களுள் ஒன்று. மடவர் - மடமையையுடையார்.
மடம் -
"கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" யாகிய நாற்குணத்துள் ஒன்றாய
குணம்பற்றி மகளிர்க்குப் பெயராயமைந்தது. கணவனார் வினவியபோது தாம்
அறிந்ததனைச் சொல்லும் கடமைபற்றி உரைத்தனர் என்ற குறிப்புப்பெற
இங்கு மடமை என்ற தன்மைபற்றிக் கூறினார்.
"கைவருகற் புடைநெறியாற்
கணவனுரை காவாமை, மெய்வழியன் றென விளம்பல் விடமாட்டார்" என்ற
காரைக்காலம்மையார்
|