மல்க" (354)
என்றவிடத் துரைத்தவையும் பார்க்க. அன்றியும்,
மூன்றெரி என்னும் சைவயாகங்கள் மழைக்குக் காரணமாம்; மழையின்றி
உலகம் போற்றல்பெறாது என்பதனாலும் முழுதுல கிளையும் போற்ற
மூன்றெரி புரப்போர் என்றார் என்பதுமமையும். எரிபுரப்போர்
-
மறையவர்.
மலர்ச்சோலை
வேலி - மலர்ச்சோலைகள் நாற்புறமும் சூழ்தலால்
அவை அந்நகரத்துக்கு வேலியிட்டனபோல உள்ளன என்பது. 25
856.
|
காதலா லரச
னுற்ற வருத்தமுங் களிப்பி னோடு
தீதில்வன் சேனை செய்யுந் திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே யெய்த்து வீழ்ந்திளைப் பதுவு நோக்கி
மாதவக் கலயர் தாமு மனத்தினில் வருத்த மெய்தி, |
26 |
|
|
|
857
. |
சேனையு மானை
பூண்ட திரளுமெய்த் தெழாமை நோக்கி
"யானுமிவ் விளைப்புற் றெய்க்கு மிதுபெற வேண்டு"
மென்று தேனலர் கொன்றை யார்தந் திருமேனிப் பூங்கச்
சேய்ந்த மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்த
லுற்றார். |
27 |
856.
(இ-ள்.) வெளிப்படை. தான் கொண்ட ஆசையினால் அரசன்
அடைந்த வருத்தத்தினையும், யானைகளோடு குற்றமற்ற சேனைகளும் தாம்
செய்யும் திருப்பணி நேர்படாமையினால் நிலத்தின் மேலே களைத்து வீழ்ந்து
இளைப்பதனைபும் மாதவராகிய கலயனார் நோக்கி மனதில் வருத்தங்
கொண்டு, 26
857.
(இ-ள்.) வெளிப்படை. சேனையும், யானைகளைக்
கொண்ட
கூட்டமும் இளைத்து மேல் எழமாட்டாதிருக்கிற நிலையை நோக்கி, "நானும்
இந்த இளைப்பினைப் பொருந்தி மெலியும் இப்பேறு பெறவேண்டும்-" என்று
உட்கொண்டு, தேன் நிறைந்து அலர்கின்ற கொன்றை யணிந்த இறைவனது
திருமேனியிற் பூண்ட பூங்கச்சிற்பொருந்திய பெரியவலிய கயிற்றைப் பூட்டித்
தமது கழுத்தினால் வருந்தி இழுக்கத் தொடங்கினார். 27
இந்த
இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
856.
(வி-ரை.) காதல் - "அங்கணன் செம்மைகண்டு
கும்பிடக்கொண்ட ஆர்வம்" (853). காதலால் உற்ற வருத்தம்
- காதல்
நிறைவேறாததால் அக்காதல் காரணமாகப் பொருந்திய வருத்தம்.
வருத்தமும்
- இளைப்பதுவும் நோக்கி - அரசனாகிய
ஏவுதற்கருத்தாவும், யானை சேனைகளாகிய இயற்றுதற் கருத்தாவும் என்ற
இருதிறத்தாரின் வருத்தமும் சொல்லப்பட்டன.
களிற்றினோடு
- சேனை - யானைகளுடன் சேனைவீரர்களும்.
தீதில்வன்
சேனை - வலியசேனைகளேயாயினும் இங்குத் தமக்குரிய
கொலைப்போர் முதலிய தீங்கு ஒன்றும் செய்தில என்பார்
தீதில் - என்றார்.
நேர்படாமை - முற்றுப்பெறாமை. நேர்படல்
- பொருந்துதல்.
"காலநேர்
படுதல் பார்த்தய னிற்ப" (219) "காணு நேர்பா டெண்ணுவார்"
என்றவைகாண்க.
எய்த்து
வீழ்த்து இளைப்பதுவும் - கைவராத பணியில் மேலும்
மேலும் முயல்வதனால் எய்ப்பு உளதாம்; எய்ப்பு மிகவே உடல் விழும்;
பன்முறை வீழ்ந்ததனால் இளைப்பு உண்டாகும்; இளைப்பு அதிகரிக்கவே,
வீழ்ந்தவர் மீண்டும் மேல் எழாத நிலை உண்டாம். இதனையே வரும்
பாட்டில் "எய்த்து எழாமை நோக்கி" என்றார். நோக்கி
- கூர்ந்துபார்த்து.
வருத்தமும் இணைப்பதுவும் - இரண்டனுருபுகள்
தொக்கன.
|