பக்கம் எண் :


1098 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     861. (இ-ள்.) வெளிப்படை. என்று இவ்வாறு மெய்த்தொண்டராகிய
நாயனாரைத் துதித்து அத்தலத்தில் இறைவர்க்குப் பொருந்திய மற்றும்
திருப்பணிகள் பலவற்றையுஞ் செய்து, பின்னர், நிலைத்த வெண்கொற்றக்
குடையுடைய அவ்வரசன் தனது நகரத்துக்குப் போயினான்; அதன் பின்னும்,
ஒப்பற்ற அன்பராகிய கலயனாரும் அம்பலத்தினில் ஆடல்புரிகின்ற
மலர்போன்ற பாதங்களை வாழ்த்தி அங்குத் தங்கி, 31

     862. (இ-ள்.) வெளிப்படை. சில நாள்கள் கழிந்த பின்பு அங்கு
நின்றும் போந்து திருக்கடவூரிற் சேர்ந்து நிலைபெற்ற தமது திருப்பணியில்
ஒழுகி வருகின்ற நாட்களிலே ஒப்பற்ற சீர்காழித் தலைவராகிய
ஆளுடைய பிள்ளையாரும் தாண்டக வேந்தராகிய மிக்குப் பெருகும்
புகழுடைய ஆளுடைய அரசுகளும் ஒன்றாக
அங்கு எழுந்தருளக் கண்டு,
32

     863. (இ-ள்.) வெளிப்படை. நிகரில்லாத மகிழ்ச்சி பொங்க அவர்களை
எதிர் கொண்டு சென்று அழைத்து வந்து, தமது திருமனையில் எய்தி,
எல்லையில்லாத அன்பின் மிக்க ஆறு சுவைகளும் பொருந்த அமைத்து
ஊட்டி, அவர்களது திருவருளினைப் பெற்றதேயன்றி, மணமுடைய அழகிய
கொன்றைமல ரணிந்த இறைவருடைய திருவருளினையும் பெற்றார். 33

     இந்த ஆறு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     858. (வி-ரை.) ஒருமை நண்ணிய அன்பின் நார் உறு பாசம் -
என்று கூட்டுக. ஒன்றிய சிந்தையினாற் பொருந்திய அன்பாகிய நார்
இழைகளால் முறுக்கப்பட்ட கயிறு. "ஒன்றியிருந்து நினைமின்கள்" என்ற
திருவிருத்தம் காண்க. ஒன்றுதல் வேறொன்றிலும் செல்லாது அதனிலே
பொருந்துதல். "உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால், முறுக வாங்கிக்
கடையமுன் னிற்குமே" என்பது முதலியனவும் இக்கருத்துப்பற்றியன.

     அன்பின்தார் உறுபாசத்தாற் பூட்டி என்க. நாயனார் பூங்கச்சிற்
கட்டிய கயிற்றினைக் கழுத்திற்பூட்டி வருந்தலுற்றாராயினும், உண்மையில்,
அவர் பூட்டி ஈர்த்திளைத்தது அன்புநார்ப் பாசமேயாகும் என்பது. இறைவன்
நேரே நின்றது புறத்திலே பூண்ட கயிற்றுக் கன்று, அகத்திற் கட்டிய அன்புக்
கயிற்றுக்கேயாம் என்பது கருத்து. புறக் கயிற்றுக்கு நிமிர்வராயின் முன்னர்
யானை சேனைகளின் முயற்சிக்கே பயன் தந்திருத்தல் வேண்டும்.
அவ்வாறன்றி யானை சேனைகளின் வருந்திய முயற்சிகளின் மிக்கு
நாயனார்பாற் கண்டது அன்புநார்ப் பாசமொன்றேயாம் என்று காட்டுவார்,
ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே பூட்டி யிளைத்தபின் திறம்பி
நிற்க ஒண்ணுமோ?
என்று வற்புறுத்தி எதிர்மறை வினாவின் வைத்துக்
கூறினார். இவ்வாறன்றி, அன்பினார் - அன்பராகிய நாயனார் பொருந்திய
கயிற்றினாலே என்று கொண்டுரைப்பாருமுளர்.

     திண்ணிய - திண்மை - அன்பின் மிக்க திருத்தொண்டின் வலிமை.
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார், திண்ணிய ராகப் பெறின்"
என்றதன் கருத்தினை இங்குச் சிந்திக்க. தாமும் மனைவியார் மக்கள் சுற்றம்
என்றிவரும் இருபகல் உணவின்றி வருந்தியும் அதற்காக நெற்கொள்ளக்
கொண்டு சென்றதாலியை இறைவர்க்குக் குங்குலியங் கொண்ட திண்மை
குறித்தது.

     பூட்டி இளைத்த - எய்க்கும் இவ்விளைப்பு யானும் பெறவேண்டு
மென்ற மனவொருமைப்பாட்டினாலே பூட்டியிழுத்து இளைத்த. ஒருப்பாடு
கண்டபோதே
என்ற கருத்தும் அது.

     பின் - பின்னும். ஒண்ணுமோ? - எண்ணாது. வினா எதிர்மறை
குறித்தது. கண்ட பின்னும் திறம்பி நிற்க ஒண்ணாதாயின் நேர்நிற்றல்
வேண்டுமே? எப்போது நேர்நின்றார் எனில்? ஒருப்பாடு கண்டபோதே
நேரே நின்றார்
என்க.