பக்கம் எண் :


1110 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

1/2 நாழிகையளவில் இது அடையத்தக்கது. இத்திருத்தலம் தருமபுர
ஆதினத்திற்குச்
சொந்தமாய் அவ்வாதீனக் கர்த்தர்களின் மேற்பார்வையில்
நன்கு பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாதீனத்தைச் சேர்ந்த கட்டளை
மடமும் தெற்கு மாடவீதியில் அமைந்துள்ளது. இத்தலத்தில்
அமிர்தநாராயணப் பெருமாள் அமர்ந்திருக்கும் ஒரு வைணவ ஆலயமும்
சிவாலயத்தின் தெற்கு வீதிக்குத் தென்பாகத்தில் இருக்கிறது.

     2. திருப்பனந்தாள் : - இது சோழவளநாட்டில் காவிரிக்கு
வடகரையில் தேவாரப் பாடல் பெற்றதலங்களுள் 39-வது திருத்தலம்.
இங்குப் பனை தலவிருக்க மாதலாலும் பனையின் அடியில் (தாளில்)
இறைவன் எழுந்தருளியிருத்தலாலும் பனந்தாள் எனப் பெயர் பெற்றது.
இந்த ஆண்பனைமரங்களிரண்டும் திருக்கோயில் திருமாளிகை இரண்டாவது
சுற்றுக்குள் அம்மையார் ஆலயத்துக்கெதிரில் இருக்கின்றன. இவற்றின்
பக்கத்தில் இறைவன் தாடகைக்குத் தலைசாய்ந்து அருளளித்த உருவமுளது.
தாடகேச்சுரம் என்பது திருக்கோயிலின் பெயர். தாடகை என்ற பெண்
பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் இது இப்பெயரால் வழங்கப்படும்.
"பனந்தாட் டாடகை யீச்சுரமே" என்ற முடிபு அமைத்து ஆளுடைய
பிள்ளையார் திருப்பதிகம் அருளினர்.

     தாடகை பூசித்த வரலாறு :- தாடகை என்ற அசுர மாது
புத்திரப்பேற்றை வேண்டிப் பிரமதேவர் ஆணைப்படி இத்தலத்து வந்து
வழிபட்டு வருங்கால், ஒரு நாள் மாலைசாத்தும்போது ஆடைநெகிழ்ந்துவிட,
அதனை இரண்டு முழங்கைகளினாலும் இடுக்கிக்கொண்டு, மாலை சாத்த
இயலாது வருந்திய அவளுக்கிரங்கிச் சுவாமி திருமுடி சாய்த்து மாலையை
ஏற்றருளினர் என்பது தலபுராணம் தாடகைச் சருக்கத்தில் கண்டது.
இத்தாடகை இத்தலத்தில் வாழ்ந்த சிவப்பிராமணப்பெண் என்றும் அவள்
பொருட்டு மேற்கண்டவாறு சுவாமி சாய்ந்தருளினர் என்றும் வரலாறு கூறுவர்
மகாலிங்கையர். இது பற்றி 853-ல் உரைத்தவையும் பார்க்க.

     தாடகையம்மையாருக்காகச் சாய்ந்ததிருமேனி, யாவர்க்கும் அவ்வருள்
புலப்படுமாறு பின்னரும் சாய்ந்தேயிருந்ததும், பின்னர், இறைவனை நேர்கண்டு
கும்பிட எண்ணி யானை சேனைகளுடன் வருந்திய சோழமன்னன் பொருட்டு
வந்த குங்குலியக் கலயனாரது அன்புக்காக இறைவன் நிமிர்ந்தருளியதும்
இப்புராணத்துட் பேசப்பட்டன.

     பிரமாவினாலும், வெள்ளையானையாலும், யட்சகன்னிகையான
தாடகையாலும், சூரியனாலும், சந்திரனாலும், வாசுகியின் பெண்ணாகிய
நாககன்னிகையாலும், சங்கு என்ற பெயருள்ள வேடஅரசனாலும்,
யஞ்ஞகுப்தன் என்ற வியாபாரியாலும், வீரசோழ மகாராசாவினாலும்,
குங்குலியக்கலய நாயனாராலும் பூசிக்கப்பட்டது என்பது வடமொழிச்சுவடி.
இத்தலத்தில் உமாதேவியார் ஐந்துகிளையுடைய பனைமரத்தடியில் விளங்கிய
இறைவனைப் பூசித்து ஞானோபதேசம் பெற்றனர். பிரமதேவர், ஐராவதம்,
இந்திரன், தாடகை, அகத்தியர், விட்டுணு, சூரியன், சந்திரன், ஆதிசேடன்,
நாககன்னிகை முதலியோர் பூசித்து வரம் பெற்றனர். நாகுகன்னன்,
தருமசேனன், சங்குகன்னன், காகம் எஞ்ஞகுப்தன் முதலியோர் இதிற்
பேறுபெற்றனர். பொய்கை - எனப்படும் பிரமதீர்த்தம் முதலியபல
தீர்த்தங்கள் பூசித்து வழிபட்டார் பெயரால் விளங்குகின்றன. இவற்றுள்
பிரமதீர்த்தமும், அம்மையார் ஆலயத்தின் முன்புறமுள்ள காலதீர்த்தமும்
மண்ணியாறும் சிறப்பாயுள்ளன. ஒவ்வொராண்டிலும் பங்குனி மாதத்தில்
மூன்று நாள்வரை சூரியபூசை தவறாது நிகழும். திருச்செந்தில்
முருகப்பெருமாள் திருவருளால் ஊமை நீங்கிக் கலைஞானம் நிறைந்து
விளங்கிய ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் (1642) திருக்கயிலாய பரம்பரைத்
திருத்தருமபுரம் ஆதீனம் நான்காவது பட்டம் குருமூர்த்தமா யெழுந்தருளிய