கோல்ஆறு
..... கமழ்சாறு ஊர் - சிறு கொம்புகளில் ஈட்டிய
கோற்றேன்கள் நிறைந்து கூடுகிழிய, அத்தேன் அக்கொம்புகளின் வழியே
மெல்லவழிந்து பொழிந்தன. அத்தேனொடு அக்கொம்புகளிற் பறிப்பாரின்றிப்
பழுத்துக் கொழுத்து வெடித்த கனிகளின் சாறு ஒழுகிக் கூடின. தேன்,
கனமுடையதாய் இளகி வழிவதாதலின் கீழே விழாமல் கொம்புகளின் வழியே
வழியும் தன்மையால் தேன் கோலாறு பொழிய என்றார்.
கொழுங்கனியின்
சாறு தேனிலும் சிறிது அதிகமாகிய இளக்கமுடையதாய்ச் சொட்டவும்
விரைந்து ஒழுகவும் கூடியதாதலின் சாறு ஒழுகும் என்றார்.
"வரம்பில்வளர்
தேமாவின் கனிகிழிந்த மதுநறுசெய், நிரந்தரநீ ளிலைக்கடையால்
ஒழுகுதலால்" என்ற (திருஞான - புரா 7)தும், "முக்கனியின் நாறொழுகிச்
சேறுலரா ... முது குன்றமே" என்ற (ஆளுடைய பிள்ளையார் தேவா)தும்
காண்க. மெல்லப் பொழியும் தேனுடன் அதனினும் விரைந்து ஒழுகும்
கனியின் சாறு கூடிடவே இரண்டும் சேர்ந்து கால்வாய்போல ஒடின.
கரும்பின்
சாறு ஆறு - கருப்பஞ்சாறு இவ்விரண்டினும் மிக்க
நீர்போல ஓடும் தன்மையுடையதாதலின் அதனை ஆறு என்றார்.
"கட்டிக்கால் வெட்டித்தீங்கரும்பு தந்த பைம்புனல் காலேவாரா மேலேபாய்
கழுமலவளநகரே" (திருஞான தேவா - திருத்தாளச்சதி - 10) பார்க்க.
கரும்பின் சாறு
ஆறாகப் பெருக, அந்த ஆற்றினுள் மேற்கூறிய
தேனும் கனிச் சாறும் கூடிய கால்வாய் வந்து சேர்ந்து அதனைத் தேன்
மணமும் கனிகளின் மணமும் கமழச்செய்தது என்பதாம். சிறு கால்வாய்கள்
ஆறுகளிற் கூடுவதும் அவற்றால் ஆறு வளம் பெறுவதும் ஆகிய
இயற்கையிற் காணப்படும் உண்மையினையும் இங்கு வைத்துக் காண்க.
இதனால் இந்நாடு ஆற்றின் வளமுடைய மருதநிலத்தின்பாற் பட்டதென்பதும்,
மருதக் கருப்பொருள்களாகிய சோலைகளும் கனிகளும் கரும்புகொழுத்துச்
செழித்து விளையும் வளமுடையதென்பதும் பிறவும் அறிவிக்கு முகத்தால்
ஆறு, நாடு, நிலம், நகர், பொருள், குடி முதலிய பல சிறப்புக்களையும்
இவ்வொரு பாட்டின் ஒரு பகுதியிற் பெறும்படி அமைத்த இலக்கியச் சுவையும்
கவிநயமும் குறிக்கத்தக்கன. நூலாறு நன்குணர்வோர் தாம்பாடும்
நோன்மைக்கு இவையே எடுத்துக்காட்டாய் விளங்கும் தன்மையும் காண்க.
கமழ்சாறூர்
கஞ்சாறூர் - நாயன்மார்களது திருத்தலப் பெயர்களைச்
சந்தம்பெற அமைத்து அணிபடுத்திச்சொல்வது ஆசிரியரது மரபுகளில் ஒன்று.
"தெய்வநெறிச் சிவம்பெருக்கும் திருவாமூர் திருவாமூர்" (திருநா - புரா 12),
"எய்தும் பெருமை யெவ்வுலகு மேறூ ரேமப் பேறூரால்" (நமிநந்தி - புரா - 1),
"மறைத்திரு வாக்கூ ராக்கூர்" (சிறப்புலி - புரா - 1), உள்ளுறையூரா முறையூர்
(புகழ்ச்சோழர்-புரா-1) "செல்ல நீடூர் திரு நீடூர்" (முனை - புரா - 1)
முதலியவை காண்க. இப்பாட்டிலும் வரும் பாட்டுக்களிலும் ஆசிரியர் இச்சரித
நிகழ்ச்சியின் குறிப்புப்பட நாடு நகரங் குடிவளம் முதலியவற்றைக்கூறும் சுவை
கருதுக.
மேலாறு
செங்சடைமேல் வைத்தவர் தாம் விரும்பியது என்பது
"வேண்டுதல் வேண்டாமை" யில்லாராய், ஒரு பொருளையும் விரும்பாத
இறைவர், பிறர் எவரும் விரும்பாத தலையிற் கழித்த மயிரை "இவள் தன்
மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆம்" என விரும்பிய சரிதம் குறிப்பது.
"தலையின் இழிந்த மயிரணையர்" எனத் திருவள்ளுவனார் இதனை ஒழுக்க
இழிவுக்கு உதாரணமாகக் கூறியவாறு தலையினின்றும் கழித்த மயிர்
பண்புடைய மக்கள் விரும்பார். மனிதர் கழித்த மயிரையும் விலைப்படுத்தவும்
முடியாகத் தலைக்கு மகளிர் கொண்டு முடிக்கவும் உள்ள வழக்கம் நாகரிகம்
என்னும் அநாகரிகக் கோரங்களின் ஒன்றாதலின் அது வீதியும்
ஆன்றோரொழுக்கமும் ஆகாது. தாம் விரும்பியது என்றதனால் அவர்
தாமேயன்றிப் பிறர் விரும்பாதது என்ற தொனியும்
காண்க. இவ்வாறு
|