|
காண்க. இது
திருப்புன்கூருக்கு வடக்கில் ஒரு நாழிகையளவில்
மட்சாலையில் உள்ளது. திருக்கோயிலும் அதில் ஏயர்கோனாரது
திருவுருவமும் உண்டு. சைவர் பூசை. நாயனாரது உற்சவம்
கொண்டாடுகின்றனர். பன்னிருவேலி என்ற
கிராமமும் உண்டு. தலச்சிறப்பும்
பிறவும் விரிவாய் ஏயர்கோனார் புராணத்திற் கண்டு கொள்க.
பொழித்த
- என்பதும் பாடம். 36
| 902. |
ஒருமகள்
கூந்த றன்னை வதுவைநா ளொருவர்க் கீந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமையென் னளவிற்
றாமே?
மருவிய கமரிற் புக்க மாவடு விடே!லென் னோசை
யுரிமையாற் கேட்க வல்லார் திறமினி யுரைக்க லுற்றேன். |
37 |
(இ-ள்.)
வெளிப்படை. ஒரு மகளாரின் கூந்தலினை அவரது
மணநாளில் ஒருவராகிய மாவிர தியர்பால் அரிந்து நீட்டிய பெருமையுடைய
மானக்கஞ்சாறனாரது திறத்தினைத் துதிக்கும் பெருமை எனது அளவில்
அடங்குவதாகுமோ? ஆகாது. பொருந்திய நிலத்தின் வெடிப்பிலே சிந்திய
மாவடுவினை இறைவர் ஏற்றுக்கொண்ட "விடேல்" என்னு மோசையினை
உரிமையினால் கேட்கவல்லாராகிய அரிவாட்டாயநாயனாரது சரிதத்தினை
இனிப்பேசத் தொடங்குகின்றேன்.
(வி-ரை.)
இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது மரபின்படி இதுவரை கூறி
வந்த சரிதத்தை முடித்துக்காட்டி இனிப் பேசப்புகும் சரிதத்துக்குத்
தோற்றுவாய் செய்கின்றார்.
ஒருமகள்
- ஒருவர் - இரண்டிடத்தும் ஒப்பற்றதன்மை குறித்தது
காண்க. ஒருமகள் சில நாட் பிள்ளைப்பேறின்றிச் சிவபெருமானை வழுத்திப்
பெற்றெடுத்து அரிதின் வளர்த்த மகளார் என் முன் (875-876) விரித்தோதிய
அருமைப்பாடுகள் எல்லாம் தோன்ற ஒருமகள்
என்றார். ஒருமகள் - ஒரே
மகள்; இரண்டாவது மகளாதல் மகனாதல் இல்லாதவர் என்ற குறிப்புமாம்.
ஒருமகள் - கலிக்கமனாருக்கு மணவாட்டியாகக்
கொடுக்க இசைவு
தந்துவிட்டபடியால் தமது மகள் என்ற உரிமை நீங்கி, அவருக்கு
உரிமையாயினர்; ஆதலின் தம்மகள் என்னாது ஒருமகள்
என்றார் என்ற
தொனியும் காண்க. திலகவதியம்மையார் சரித நிகழ்ச்சியினை உன்னுக.
இவ்வாறு பிறர்க்குரியவராயினவரின் கூந்தலை அரிந்து கொடுத்ததும்
செயற்கரியதாம் என்க.
கூந்தல்
தன்னை - தன்னை - என்றது கட்டுரைச் சுவைபட வந்தது.
சிறப்பும்மை தொக்க தென்றலுமாம்.
வதுவைதாள்
- பெண்களின் கூந்தலரிந்து முண்டிதமாக்குதல்
வைதவியம் குறிக்கும் நிலைகாட்டுமாதலின் அதனை ஒருவரும் செய்யார்;
மேலும் மங்கலஞ் செய்வதாகிய மணநாளில் அதனைச் செய்ய
ஒருப்படுவாரிலர்; இன்னும் இது உயிர் கொடுத்தலினும் கொடியதாய் ஆயுள்
உள்ளனவும் அவ்வம்மையாரைத் துன்ப நிலையில் வைப்பதாகுமாதலின்
எவரும் இது செய்யத் துணியார் என்ற குறிப்புக்கள் காண்க.
ஒருவர்
- சைவ மாவிரத முனிவர் என்ற திருநீற்றுநெறித் தொடர்பு
ஒன்றல்லாது வேறு ஒரு தொடர்ச்சியும் பற்றாத ஒருவர் என்பதும்
குறிப்பு.
அவரே ஒப்பற்றவர் - சிவபெருமான் என்பதும் குறிப்பாம்.
ஈந்த
பெருமையார் - ஈந்த - ஈதல் என்பது சொல்லாற்றலால்
இழிந்தோனிரப் புரை குறிக்கும். 1"ஆவிற்கு நீரென் றுரைப்பினு நாவிற்,
கிரப்பி னிளிவந்த தில்" (குறள்) என்பது நீதியாதலின் மாவிரதியார் கூந்தலைக்
கேட்ட இரப்பின்
1"நல்லரர்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே" என்ற நீதி நூலும் காண்க.
|