இழிபும்,
இரப்புப் பொருளாகிய கூந்தல் தலையின் இழிந்த மயிர்
எனப்படும் இழிபும், கருதி ஈந்த என இழிந்தோ னிரப்புரைக் குறிப்புப்படக்
கூறினார் போலும்.
ஈந்த
அருங்கொடையினாற் போந்த பெருமை என்பார் ஈந்த பெருமை
என்றார். பெருமையார் - ஈந்த செயற்கரியதாகிய
செயல் செய்த பெரியர்.
போற்றும்
பெருமை - பெரியர் தன்மையைப் போற்றுவது பெருமை
தருவதாம் என்றுணர்த்தியவாறு, பெருமையார் பெருமை போற்றும்
தன்மை யென் னளவிற்றாமே? என்று கூட்டி யுரைப்பதுமாம்.
என்
அளவிற்று ஆமே? - ஆகாது என ஏகார வினா எதிர்மறை
குறித்தது.
இவ்வாற்றால்
இதுவரை கூறிய மானக்கஞ்சாறனாரது சரிதத்தைச்
சாரமாக வடித்து எடுத்து முடித்துக்காட்டிய அழகு கண்டுகளிக்க.
மருவிய.....வல்லார்திறம்
- இஃது மேல்வரும் அரிவாட்டயனார்
சரிதசாரத்தை முகவுரையாகச் சுருக்கி அறிவித்தபடியாம். இதனையே
அனுவாதமுகத்தால் அப்புராண முடிவில் "முன்னிலை கமரேயாக
முதல்வனார் அமுது செய்யச், செந்நெவினரிசி சிந்தச்செவியுற வடுவி னோசை,
யந்நிலை கேட்ட தொண்டர்" (925) என்றது காண்க. இங்கு "மாவடு" விடேல்
"என்னோசை உரிமையாற் கேட்க வல்லார்"
என்று எதிர்காலத்திலும்,
"வடுவின் ஓசைகேட்ட தொண்டர்" என்று பின்னர்
(925) இறந்த
காலத்திலும் கூறியதும் குறிக்கொள்க.
மருவிய
கவர் - மருவிய - பொருந்திய. இறைவரை ஊட்டக்கொண்டு
போயின செந்நெல்லரிசி முதலிய சிவ சாதனங்கள் மருவிய
(916) எனவும்,
அன்பரது கழுத்தரியும் அரிவாளைப் பற்றும் ஐயரது வீசிய திருக்கையும்
மாவடு "விடேல் விடேல்" என்னும் ஓசையும் ஒக்கவே எழுதற்கிடமாய்
மருவிய (920) எனவும், முதல்வர் அமுதுசெய்யும் முன்னிலையாக மருவிய
(925) எனவும் வரும் சரித நிகழ்ச்சிகள் பலவும் மருவ
மருவிய என்ற அழகு
காண்க.
"விடேல்"
- என் ஓசை - 920 பார்க்க. இது மாவடுவை விசையிற்
கடித்தலின் உளதாம் ஓசை. "வடுவின் ஓசை" (925), மாவடு "விடேல் விடேல்"
என்றோசையும் (920) என்றவை காண்க.
உரிமை
- அவ்வோசையினைக் கேட்கும் தகுதி. இத்தகுதி 918 - 919
பாட்டுக்களில் விரித்துரைக்கப்பட்டது காண்க.
கேட்க
வல்லார் திறம் - கேட்கும் உரிமையும் கேட்டற்குரிய
வன்மையும் உடையவர். அன்பினால் உரிமையும், அன்பு முறுகிய நிலையில்
வன்மையும் உளவாவன என்க. திறம் - சரித
வரலாறு. வல்லார்
என்றதற்கேற்ப இதனைத் திறம் என்றார். வல்லாராயின செய்தி என்க.
பெருமையார்
தம்மை - என்றதும் பாடம். 37
சரிதச்
சுருக்கம் :- சோழ வளநாட்டில்
கஞ்சாறூர் என்பது செழித்த
மருதநில ஊர்களிற் சிறந்து விளங்குவது. அவ்வூரில் வயல்களும் வாவிகளும்
மிளிர்வன. வள மிகுதியால் நெற்பயிர் கமுகளவும் உயர்ந்துவளரும்.
மாடங்கள் மதில்களாற் சூழப்பட்டுக் கொடி தோரணம் நிறைகுடம்
முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வழிவழியாய் உழவு தொழிலிற்
சிறந்த வேளாண் பழங்குடிகள் அங்கு விளங்கின. வீதிகளில் திருவிழா
முழக்கங்களும் மிக்கன.
அவ்வூரில் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தாராய், வேளாண்
குலத்தின் சேமநிதி போன்றாராய் அரசர் சேனாபதிக்
குடி விளங்க
மானக்கஞ்சாறனார் அவதரித்தார். அவர்,
அரனடியார்களே தம்மையும்
தமது உடைமைகளையும் உடையவர்களென்று உணர்ந்து, அவர்களுக்கே
ஏவல் செயும் தொழில்பூண்டு, அவர்கள் வேண்டுவனற்றைக் கூறுவதன் முன்
குறிப்பறிந்து கொடுத்து
|