பக்கம் எண் :


1160 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     வந்தனர். அப்பெரியவர்க்கு முன் சிலகாலம் பிள்ளைப்
பேறில்லாமலிருந்ததனால் மகப்பேறு கருதிச் சிவபெருமானை வழுத்தினார்.
அவரது திருவருளினாலே இப்பிறவிக் கொடுஞ்சூழலினின்றும் பிழைக்கும்
நெறியைத் தமக்குத் தேடித்தரும் ஒரு பெண்மகவை அவர் பெற்றெடுத்தார்.
நகரமெல்லாம் களி சிறந்து மகிழ, எல்லார்க்கும் பெருங்கொடையளித்து
அப்பெண்மகவைச் சிறப்பாக வளர்த்து வந்தனர். மகவும் வளர்ச்சியடைந்து
உரிய வயதில் மணப்பருவ மடைந்தது.

     அந்தப் பெண்கொடியை ஏயர்கோனாருக்கு மணம் செய்ய
முதியோர்கள் வந்து மகட்பேசினர். மானக்கஞ்சாறனாரும் "எந்தம்
மரபினுக்குத் தகும் தன்மையில் இது பொருந்தும்" என்று மணமிசைந்தனர்.
இதனை அம்முதியோர்கள் அறிவிப்ப ஏயர்கோனாரும் மிகவிரும்பி
மகிழ்ந்தனர். இருதிறத்தார்க்கும் பொருந்தக் கலியாண நாளினை மதி நூல்
வல்லவர் வகுத்தனர். மானக்கஞ்சாறனாரது திருமனையிலும் நகரிலும் மண
அணிகள் செய்தனர். ஏயர்கோனாரும் தமது சால்பு நிறை சுற்றம் நிறைந்து
சூழ மணவெழுச்சியின் அணி விளங்கக் கஞ்சாறூரின் மருங்கு
அணைவாராயினார்.

     மணஎழுச்சி கஞ்சாறூரில் வந்து அணைவதற்கு முன், மகளைப்பெற்ற
வள்ளலாரது உள்ளநிலைப் பொருளாகிய சிவபெருமான் ஒரு மாவிரத
முனிவராகக்
கோலம் பூண்டு உலக முய்யும் பொருட்டு அங்கு
வருவாராயினர். அவரது நெற்றியில் மூன்று கீற்றாக இட்ட திருநீறு - குடுமி
வைத்து ஒழுங்கின் மயிர்களைந்த திருமுடி - அக்குடுமி நுனியிற் கோத்த
எலும்புமணி - காதில் வெள்ளெலும்பாலாகிய குண்டலம் - மார்பில்
எலும்புமணித் தாழ்வடம் - தோளில் யோகப் பட்டிகையும் மயிர்க்கயிற்றின்
பூணூலும்
- ஒருகையில் திருநீற்றுப் பொக்கணம் - ஒரு முன்கையில்
எலும்பு மணி ஒன்று கோத்த கயிறு - இடையில் கோவணமும் அதன்மேல்
அசைகின்ற உடையுமாய் - இவ்வாறு நிலந்தோய்ந்த எழுதரிய திருவடியும்
அதில் திருப்பஞ்சமுத்திரையுமாக விளங்கத், திருமேனி முழுதும்
நெருப்பை மறைத்த பொடி போலத் திருநீற்றினைப் பரக்கப் பூசிக்கொண்டு,
தமது திருவடிகள் நீடும் மனமுடைய அன்பரது திருமனையினுட் புகுந்தனர்.
அதுகண்ட பெருந்தொண்டனார் மகிழ்ந்து எதிர் எழுந்து "தேவரீர்
இவ்விடத்தே வருகையினால் அடியேன் உய்ந்தேன்" என்று அன்போடும்
பணிந்தார். அவர் "இங்கு மங்கலம்நிகழ்வதென்ன?" என்று கேட்க, அன்பர்
"அடியேன் பெற்ற பெண்கொடியின் மணம்" என்றனர். அவர் " மற்றுமக்குச்
சோபனம் ஆகுக" என்று ஆசி கூறினர். உடனே மானக்கஞ்சாறனார்
பணிந்து, மனையினுட் சென்று, மணக்கோலம் புனைந்திருந்ததிருமகளாரைக்
கொணர்ந்து, அவரது திருவடியிற் பணிவித்தனர். மாவிரதியாராகிய பெருமான்
மணமகளாரது மேகந்தழைத்தது போல நீண்டு வளர்ந்த மலர்க்கூந்தற்புறம்
நோக்கித், தொண்டரைப் பார்த்து, "இவளது மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு
ஆகும்"
என்றார். அது கேட்ட தொண்டனார் "இவர் இதனைப்
பொருட்படுத்தி 'நமக்கு ஆம்' எனக் கேட்கும் பேறு பெற்றேன்" என்று
கொண்டு, உடனே உடைவாளை உருவி அக்கூந்தலை அடியில் அரிந்து
அவர் கையில் நீட்டினார். அதனை வாங்குவார் போல் நின்ற அவர்
அந்நிலையின் மறைந்து, தமது பழைய மழவிடைமேல் பார்வதியம்மையாருடன்
ஆகாயத்தில்வந்து காட்சி தந்தனர். தொழும்பனார் தொழுது வீழ்ந்தெழுந்து
மெய்ம்மறந்து நின்றனர். கங்கைசடையிற் சூடிய அருட்கூத்தனார்.
"நம்மிடத்தில் உனக்குள்ள அன்பின் தன்மையை உலகமெலா
மறியச்செய்தோம்" என்று மெய்யன்பர்க்குத் தமது திருவருளினைச் செய்தனர்.
அவரை எஞ்ஞான்றும் துதித்திருக்கும் மீளாநெறியாகிய பெரும்பேற்றினை
அன்பனார் நேரே பெற்றனர். இறைவரும் இமையோர் சூழ்ந்து துதிக்க
மறைந்தருளினர்.

     இதுபோழ்தில், காண்பவர் கண் களிகொள்ள மணமகனாராகிய
கலிக்காமனார் மணமனையினிற் புகுந்தனர். மனத்தாலும் நினைத்தற்கரிய
அச்செயலை கூடியிருந்தவர்பாற்