விதந்து எடுத்தோதினர்.
இதுபற்றித் திருவள்ளுவர் திருக்குறளில்
வகுத்தோதியனவும், மற்றும் நீதி நுல்களான் விதித்தனவும் காண்க.
இப்பெருமை கருதியே மேலும் மா மனைவாழ்க்கை
என்றார்.
தொன்மையில்
தொக்க மாநிதியில் என்க. வழிவழியாக ஈட்டித்
தொகுத்த பெருஞ்செல்வம். இதனை "வழிவந்த செல்வம்" (909) என்றதும்
காண்க.
ஓங்கிய
மிக்க செல்வம் - முன் சொன்னது வழிவழி வந்ததும், இது
இவர் தாம் தேடியதும் ஆம். ஓங்கிய - என்றது ‘மேழிச் செல்வங்கோழை
படாது' என்றபடி வேளாண் செல்வத்தின் விருப்பமும், மிக்க என்றது அதன்
மிகுதியும் பரப்பும் குறித்தன. தக்க மாமனை அறநெறி வாழ்க்கை
எனக்கூட்டுக.
தலைமையார்
- முதன்மை பெற்றவர் என்பதாம். இது வேளாண்
வகுப்பில் இவரது, முதன்மை என்ற குடியை உணர்த்தியது
போலும். 4
907.
|
தாய னாரெனு
நாமந் தரித்துளார்;
சேய காலந் தொடர்ந்துந் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதவத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார். |
5 |
(இ-ள்.)
வெளிப்படை. (அவர்) தாயனார் என்ற
பெயரைத் தாங்கியவர்;
நெடுங்காலம் தொடர்ந்திருந்தும் தெளிதலிலாத திருமாலானவர் மண்ணைத்
தோண்டித் தேடியும் அறியாத அந்தத் தூய புதியமலர் போன்ற பாதங்களைத்
தொடர்ந்துள்ளவர்.
(வி-ரை.)
அவர் என எழுவாய் வருவிக்க. அவர் தரித்துளார்.
தொடர்ந்துளார் என்க.
நாமம்
தரித்துளார் - பெயரைத் தாங்கினார் என்றதனால்
பெற்றோராலிடப்பட்ட அப்பெயருக்குத் தக்கபடி ஒழுகி அதனைத்
தாங்கியவர் என்றதாம். தாய் அனார் -
எவ்வுயிர்க்கும் தாய் போன்ற
அன்புடைமை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பு.
சேயகாலம்........மாயனார்
- நெடுங்காலம் பிரியாத தொடர்புடையராய்
இருந்தும் "இவன் இறைவன்" என்று தெளிவு படாத விட்டுணு. இவர்
இறைவனுக்குச் சத்தியாகவும் கூறப்படுவர். இவ்வாறு நெடுங்காலம் நெருங்கிய
தொடர்புடனிருந்தும் மாயையான் மயங்கித் தெளிவுபடாது "யான் தேடிக்
காண்பேன்" என்று மண்கிளைத்துத்தேடியும் அறியாது நின்றவர் என்க.
"தாவியவ னுடனிருந்தும் காணாத தற்பரன்" (திருஞான - தேவா -
திருக்கோளிலி) என்ற கருத்தும், இலிங்கபுராணத் திருக்குறுந்தொகைக்
கருத்துக்களும் இங்குச் சிந்திக்கத்தக்கன.
மாயனார்
- மாயத்துட்பட்டு மயங்கியவர் என்பது குறிப்பு. சேய
-
நீண்ட.
தொடர்தல்
- இடைவிடாத தொடர்ச்சியுடையராதல். தெளிவு
- அவர்
இறைவன் என்றும் தாம் அவரால் ஆளாகக் கொள்ளப்பட்ட அடிமை
என்றும், அவர் அறிவித்தாலன்றி அறியப்படாதவர் என்றும் தெளிவுபட
உணர்தல்.
தெளிவிலா
மாயனார் மண் கிளைத்து அறியா - மாயனார்
ஆதலின் தெளிவிலர்; தெளிவிலாராதலின் கிளைத்தனர்; கிளைத்தனராயினும்
அறியார் என்க.
மண்கிளைத்து
- நிலத்தைப் பிளந்து - தோண்டி. இவ்வாறன்றித்
தெளிவிலா மாயனார் மண்கிளைத்துச் சேயகாலம் தொடர்ந்தும் அறியாத
என்று கொண்டு கூட்டி உரைப்பினுமமையும்.
அத்தூய
நாண்மலர்ப் பாதம் - அ - அந்த. பண்டறிசுட்டு.
தூய்மை - இயல்பாகவே பாசங்களின் நீங்கும் இறைமைத்தன்மை.
நாண்மலர்
- "புதியையா யினியை யாம் பூந்தென்றால்" (திருநா - தேவா - பழந்தக்க -
திருப்பழனம் - 4) என்றபடி பதுமையும் இனிமையும் குறித்தது. இறைவன்
திருவடி "பின்னைப் புதுமைக்கும்
|