எல்லா வுயிர்களும்
எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார். நூல்
விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழலின் தனித்துளையில்
ஆனாயர் மணியதரம் பொருந்த வைத்து, ஏழிசை முறைப்பட,
இசையிலக்கணம் எல்லாம் அமையச்செய்து, திருவைந் தெழுத்தை
உள்ளுறையாகக் கொண்ட குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார்.
அது கற்பகப்பூத்தேனும் தேவாமுதமும் கலந்து வார்ப்பதுபோல எல்லா
வுயிர்களுள்ளும் புகுந்து தேக்கிற்று.
ஆனிரையும்
கான்விலங்கும் இசைவயப்பட்டுத் தம் உணவும் மறந்து
மயிர் முகிழ்துவந்தணைந்தன. ஆடும் மயிலினமும் மற்றைப்புள்ளினமும்
தம்மைமறந்து இசை நிறைந்த உள்ளமொடு படிந்துவந்தணைந்தன. ஏவல்புரி
கோவலரும் தம் தொழில் செய்தலை மறந்து நின்றனர். பாதலத்தின் நாகர்கள்
- மலையின் வாழ் அரமகளிர் - விஞ்சையர், கின்னரர் முதலிய
தேவகணங்கள் - தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின்
வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களினின்று வந்து அணைந்தனர். நலிவாரும்
மெலிவாரும் தம்மியல்பு மறந்து இசையுணர்வினாகிய உணர்ச்சி ஒன்றேயாகிய
நயத்தலினால், அரவும் மயிலும், அரியும் கரியும், புலியும், மானும்
என்றித்திறத்தனவாகிய உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து ஒன்று
கூடிவந்து கூடின. காற்றும் விசையில் அசையா, மரமும் சலியா,
மலைவீழருவிகளும் கான்யாறும்கலித்தோடா. வான்முகிலும் ஆழ்கடலும்
அசையா. இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் ஆகிய எல்லாம் இசை மயமாகிப்
புலனும் கரணமும் ஒன்றாயின.
ஆனாயர்
இசைத்த குழலிசையானது வையத்தை நிறைத்தது;
வானத்தையும் தன்வசமாக்கிற்று; மேல் ஐயரது திருச்செவியினருகணையவும்
பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடனே
எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனைகேட்க,
"இந்நின்ற நிலையே நம்மிடத்தில் அணைவாய்" என்றருளிச் செய்தனர்.
தேவர்கள் பூமழைபொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே
அந்நின்ற நிலைபெயர்ப்பாராய் ஆனயநாயனார் உடன்செல்லச் சிவபெருமான்
பொன்னம்பலத்துள் எழுந்தருளினர்.
தலவிசேடம்
:- திருமங்கலம் - இத்தலம்,
தென்னிந்திய
இருப்புப்பாதை. திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் வழியில், லால்குடி என்ற
நிலயத்தினின்று வடமேற்கில் கற்சாலை வழியாய் 2 நாழிகையில் உள்ள
பூவாளூரை அடைந்து, அங்கு நின்றும் மேற்கே மட்சாலைக் கரை வழியாய்
ஒருநாழிகை யளவில் அடையத்தக்கது. காவிரிக்கு வடகரையில் உள்ளது.
பூவாளுரிலிருந்து செல்லும் மட்சாலைக்கரை வழியில் ஆறு குறுக்கிடுவதனால்
மழைக்காலத்திற் செல்வது கடினம். லால்குடி என்பது திருத்தவுத்துறை என்ற
தலமாகும். இரதிக்குப் பதியளித்த தலமாகிய இத்திருத்தவத்துறையைத்
திருஞானசம்பந்த சுவாமிகள் தரிசித்துப் பதிகம் பாடியருளினார் என்பது
பெரிய புராணத்தினாலறியப்படும் (திருஞான - புரா - 347). திருமங்கலம்
கோயிலினுள் உட்சுவற்றில் வடமேற்குப் பாகத்தில் ஆனாயர் சிவப்பேறு
பெற்ற இடம் தனியாக வகுக்கப்பட்டுள்ளது. அங்குக் கொன்றை நீழலில்
நாயனார் குழலிசை வாசிக்கும் திருவருவங்கள் அமைக்கப்பட்டுப்
பூசிக்கப்படுகின்றன. ஆனாயர் திருவுருவம் செப்புப்படிமமும் உண்டு. அவரது
உற்சவமும் கொண்டாடப்படுகின்றது. இத்தலத்தில் இரயிக்குவ முனிவர் தமது
மூதாதைகளின் நற்கதியின்பொருட்டுத் தவஞ்செய்ய இறைவ னாணையால்
உத்தரகயா பற்குனி ஆறு இங்கு இறங்கிவந்தது. இரயிக்குவரது ஆச்சிரமத்தில்
இருந்த மானைச் சுவேதகிரி அரசனான சுந்தரன் வேட்டையிற் கொன்றுவிட
அவர் அவனைச் சாம்பராகும்படிசாபமிட, அவன்சாப நீக்கம்பெறவேண்டிக்
கொள்ள அவரும் இரங்கி, மறு பிறவியில் மன்மதனாகப் பிறந்து சிவபிரானது
நெற்றிக் கண்ணினாற் சாம்பராகி, மனைவி இரதி வேண்ட மீள
வுருவமடையும்படி அருளியபடியே இங்கு
|