திருக்கண்ணப்ப
நாயனார் புராணம்.
பெயர்
விளக்கம்
(எண்கள்
பாட்டுவரிசை எண்களைக் குறிக்கும்)
ஆகமம்
- 784,
804. ஆகமவிதி 801. சிவபெருமானால் ஈசான
முதலிய ஐந்து திருமுகங்களினின்றும் அருளப்பெற்றவை. மூவகைப்
பந்தமுடைய எல்லாவுயிர்களும் பாசநீங்கிச் சிவனையடையும் சரியையாதி
நால்வகை நெறிகளையும் வகுத்துக் கூறுவன. சிவாலய அமைப்பும்
பிரதிட்டையும், ஆன்மார்த்த - பாரார்த்த, நித்திய - நைமித்திய
பூசையியலும்; பவித்திர விதிகளும் என்ற மூன்று பிரிவுடையன. சிவாலய
பூசைக்கெல்லாம் இவையே பிரமாணம். காமிக முதல் வாதுளமீறாக இவை
இருபத்தெட்டென்பர். இவற்றின் வழிவந்த 207 உபாகமங்களும் உண்டு.
இவை பதி - பசு - பாச மென்ற மூன்று பொருள்களையும் காட்டி
ஞானத்தை விளக்குவனவாம். வேதம் பொது என்றும், இவை சிறப்பாகிய
முடிந்த முடிபென்றுங் கூறுப. வேதம் உலகர்க்கென்றும், சிவகாமம்
சத்திநிபாதர்க்கு என்றும் அறியப்படும். 784 உரை காண்க.
ஆசிரியன்
- 686. விஞ்சைத்தனுத் தொழில் வலவர் 689. வில்வித்தை
முதலியன பயிற்றும் உபாத்தியாயன்.
இருசுடர்
- 672. சூரியனும் சந்திரனும். இவர்கள் சிவபெருமானுக்கு
முறையே வலது கண்ணும் இடது கண்ணுமாவர். இவர்கள் தலையுவா
நாட்களிற் கூடுவர் என்ப.
இறவுளர்
- 665. வேடர்கள் - மலைவாணர். இப்பெயர் கோயமுத்தூர்
சில்லாவிலும் வேறு சில இடங்களிலும் இப்பொழுதும் வழங்கப்படுகிறது.
உடுப்பூர்
- 651. கண்ணப்ப நாயனார் அவதரித்த ஊர். சரிதக்
குறிப்புக் காண்க.
எண்ணிறந்த
கடவுளர் - 796. சிவபெருமானல்லாத ஏனை விட்டுணு
பிரமன் இந்திரன் வருணன் இயமன் முதலிய தேவர்கள். (796 உரை பார்க்க)
ஒற்றர்
- 723. காடாய்பவர். போரில் பகைவரது உளவறிந்து சொல்லும்
தூதர்போல் வேட்டைக் காட்டில் மிருகங்கள் தங்கும் நிலையினை
முன்சென்று அறிவர்.
ஓசை
ஐந்து - 750. ஐந்து வகையான தேவவாத்தியங்களின் முழக்கு.
கங்கை
- 671, 830. கயிலையில் உள்ள ஏழு புண்ணிய தீர்த்தங்களுள்
ஒன்று. பெருநதிகளுள் ஒன்று. மிகப்புனித முடையது. தன்னுட் படிந்தாரைப்
புனிதமாக்குவது. வான நதியாதலின் இது ஆகாய கங்கை எனப்படும்.
பகீரதன் வேண்டச் சிவபெருமான் இதனை ஒரு சடையிற்றாங்கிச்
சிறிதளவாகப் பூமியில் விட்டருளினர்.
கடவூர்
- 830. தல விசேடம் பார்க்க.
கண்ணப்பர்
- 650. கண்படாவில்லியார் 810, வண்ணவெஞ்சிலையார்
813, பைந்தழை யலங்கல்மார்பர் 814, வள்ளலார் 824, கொள்கையி னும்பர்
மேலார் 824, அன்பனார் 804, கண்ணப்ப! 827, கானவர்பெருமானார் 828,
தலைவர் 830, கருங் கதிர் விரிக்கு மேனிக் காமரு குழவி 665, அண்ணல்
666, புண்ணியப் பொருளாயுள்ள பொருவில்சீ ருருவினான் 666, மைந்தனார்
677, நாகனார் பயந்த நாகர்குலம்விளங் கரிய குன்றின் கோலமுன் கை 682,
பொங்கொளிக் கரும்போரேறு 689, கானவர்க் கரிய சிங்கம் 690,
எல்லையில்லாப் புண்ணியந் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு
போல்வார் 691, பானற்குல மாமலரிற் படர் சோதியார் 714, அல்லேறு
போல்வார் 713, வள்ளல் 715, அண்ணலார் 717, சார்வலைத் தொடக்கறுக்க
ஏகும் ஐயர் 719, வேணியார் தமைக் கண்ணினீடு பார்வையொன்றுகொண்டு
காணுமன்பர் 720, குரிசில் 731, மறவர்களரியேறாமவர் 737, மலை காவலர்
738, குலமறவர்கள் தலைவர் 740, வேடர்தங் கரிய செங்கண்
|