பக்கம் எண் :


1246 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     குறிப்பு:- இப்புராண முழுவதினும் தன்மையணி முதலிய பலவும்
சிறக்கக் காணலாம். எல்லா அணிகளையும் குறித்தற் கிடந்தாராமையின்
உவமை. உருவகம், தற்குறிப்பேற்ற முதலிய சில பொருளணிகளும், சிற்சில
சொல்லணிகளும் மட்டுமே இங்குத் திரட்டப்பட்டன.

           (2) கண்ணப்பநாயனார் புராணத்தினிற் காணும்

               ஞானசாத்திரக் கருத்துக்களுட் சில

     1. நல்ல புதல்வரைப் பெறுதல் முன்னை நற்றவத்தால் வரும். (8)
     2. முருகன் வழிபாடு மகப்பேறு முதலிய எல்லா வரங்களையும்
கொடுக்கும். வேண்டுவோர் வேண்டுவதே யீவது இறைவனியல்பு. (12)
     3. வனதெய்வங்கள் பலியூட்டலின் மகிழும். (47)
     4. ஆவேச பக்கத்தால் மனிதர்மீது தெய்வம் நிகழ்தல் உண்டு.(52-65)
     5. புறத்தொழில் பிறவேயாயினும் அகச்செயலால் பாச
வலைத்தொடக்கறுக்க நிகழும் பெரியோர் உளர். முன்னைத்
தவமுடையோர்க்குப் புறச்செயல்களே தவப்பயனைத் தரும் செயல்களாக
மாறும் (70 - 71)
     6. நல்வினை தீவினை என்ற இரண்டும் மக்களை வசப்படுத்தி
மீளப்பிறவியிற்றள்ளுவன. இவையிரண்டினையும் ஒன்றுபோலவே கண்டு
கழிப்பர் அறிவுடையோர். இவற்றுட் சிக்குண்டு கலங்கும் மனம்
இவற்றினின்றும் விடுதிபெற நன்னெறியிற் சேர முயலும். அதனைப்
புலன்வழிச் செல்லுமாறு தடைசெய்து ஐம்பொறிகள் பற்றி ஈர்க்கும்
இயல்புடையன. (85)
     7. சத்திநிபாத நிலைபெற்ற பக்குவமுடையார்க்கு அத்தீவிரம் மிகவே,
உடற்பாரங் குறைவது போலத் தோன்றும். நெஞ்சினில் அதுவரை இருந்தமுன்
விருப்பங்கள்போக வேறு ஓர் விருப்பமும் விளையும், உலகை மறந்து
இறைவனைக்கண்டு அடையும் வேகம் மிகும். (97)
     8. ஓசையைந்து எனப்படும் தேவவோசைகள் உள்நாட்ட மிக்கோர்க்குப்
புலப்படும்; உலகநாட்ட நிலையுடையோர்க்குப் புலப்படா. (101)
     9. முன்னைப் பிறவியிற்செய்த தவத்தின் ஈட்டம் முடுகி விளைந்து
பயன்றருங் காலையில் முடிவிலா இன்பமான அன்பை எடுத்துக் காட்டும். (102)      10. தத்துவப்படிகளையேறி மேற்சென்றால் முடிவில் ஆணையாம்
சிவத்தைச்சார அணைதல் பெறலாம் (103)
     11. இறைவனது கருணைகூர்ந்த அருட்டிரு நோக்கம் எய்தினோர்
பிறப்பின் முன்னைச் சார்புகளினீங்குவர்; சிவவொளி நிழலில்
அன்புருவமாகுவர்.(104)
     12. மேற்கூறியவாறு சீவன் முத்தநிலை யடைந்தோர் உலகை மறந்து
பாலர்பித்தர் பசாசர் போன்ற நிலையடைகுவர். தம்மை மறப்பர்.
     13. தரிசனவேதி என்னும் குளிகை எதிர்ப்பட்ட மாத்திரையில் இரும்பு
பொன்னாவது போல இறைவனது அருணோக்கம்படவே ஆன்மாக்கள்
யாக்கையின் பரிசும் வினையிரண்டும் மல மூன்றும் அறப்பெற்று அன்பே
உருவமாகுவர். (154)
     14. பெருந்தவஞ்செய்து பெருமுனிவரும் தேவரும்காணமுடியாத
கடவுளை ஆர்வமுன் பெருகும் ஆராவன்பினில் வெளிப்படக் காணலாகும்.
(128)
     15. இறைவனது பூசைமுறைகள் அவரே இயம்பிய சிவாகமங்களில்
விதிக்கப்பட்டன. இவை அன்போடும் சிந்தை நியமத்தோடும்
செய்யத்தக்கனவாம். இவை தவம் எனப்படும். இவையும் முன்னைத் தவத்தாற்
கிடைப்பன. (135)
     16. இறைவர் தேறுவார்க் கமுதமாகத் தித்திப்பர். (162)
"அன்பிற்குமுண்டோ அடைக்குந்தா ழார்வலர், புன்கணீர் பூச றரும்"
என்ற உண்மையும் இங்குக் காணப்படும். சிவனிடத்து அன்பே உருவமாய்ச்
சிவசாயுச்சியம் பெற்றுச் சிவனோடொருங்கிருக்கும் பேற்றினுக்குமேற் பேறு
பிறிதொன்றில்லை. (185)