15.
மூர்த்தி நாயனார் புராணம்
|
தொகை
"மும்மையா
லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்"
-
திருத்தொண்டத்தொகை
வகை
"‘அவந்திரி
குண்டம ணாவதின் மாள்வ'னென் றன்றாலவாய்ச்
சிவன்றிரு மேனிக்குச் செஞ்சந் தனமாச்
செழுமுழங்கை
யுவந்தொளிர் பாறையிற் றேய்த்துல காண்டவொண்
மூர்த்திதன்னூர்
சிவந்தபொன் மாட மதுரா புருயென்னு நீள்பதியே"
|
|
-
திருத்தொண்டர் திருவந்தாதி - (17)
விரி
968.
|
சீர்மன்னுசெல்
வக்குடி மல்கு சிறப்பி னோங்குங்
கார்மன்னுசென் னிக்கதிர் மாமணி மாட வைப்பு
நார்மன்னுசிந் தைப்பல நற்றுறை மாந்தர் போற்றும்
பார்மன்னுதொன் மைப்புகழ் பூண்டது பாண்டி நாடு.
1 |
மும்மையாலுலகாண்ட
சருக்கம் :- இது, நிறுத்த முறையானே,
நான்காவது திருத்தொண்டத் தொகையினுள் "மும்மையா லுலகாண்ட"
என்று தொடங்கும் மூன்றாவது திருப்பாசுரத்தினுள் துதிக்கப்பட்ட
அடியார்களின் சரிதங்களைக் கூறும் பகுதி. அந்த அடியவர்களாவார்
மூர்த்தியார், முருகர், உருத்திரபசுபதியார், திருநாளைப் போவார்,
திருக்குறிப்புத்தொண்டர், சண்டீசர் என்ற அறுவர்.
புராணம்
:- அவ்வறுவருள் மூர்த்தியார் என்ற பெயருடைய
நாயனாரது சரித வரலாறும் பண்புங் கூறும் பகுதி. இனி, மேல்வகுத்த
முறையே மும்மையாலுலகாண்ட சருக்கத்தில் முதலாவது மூர்த்திநாயனார்
சரிதங் கூறத் தொடங்குகின்றார்.
தொகை
:- (சிவசாதனங்களாகிய) மூன்றினால் உலகத்தை
அரசாண்டமூர்த்தியாருக்கு நான் அடியேன். ஆவேன். மும்மை
- திருநீறு,
உருத்திராக்கக் கண்டிகை, சடை என்ற சிவசாதனங்கள் மூன்று. இவற்றால்
உலகாண்ட திறம் 1008 - 1013-ல் விரிக்கப்பட்டது.
வகை
:- "வீணேதிரியும் குண்டமணர்களுக்குள்ளாவதின் மாள்வன்"
என்று அன்று ஆலவாய்ப்பெருமானது திருமேனிக்கு உகந்த
செஞ்சந்தனமாகக் கொண்டு தமது செழித்த முழங்கையினை மகிழ்ச்சியுடன்
பாறையில் தேய்த்து, (இறைவனருளால்) உலகாண்ட ஒண்மையுடைய
மூர்த்தியாரது ஊர், ஓங்கிய பொன் மாடங்களையுடைய
மதுராபுரி
என்று சொல்லப்படுகின்ற நீள்பதியேயாகும்.
அமணாவதின்
மாள்வன் - இது, பாறையில் முழங்கையை எலும்பு
திறந்து மூளை காணத் தேய்க்கத் துணிந்தபோது மூர்த்தியாரது திரு
உள்ளத்தில் எழுந்த துணிபு. அவம் திரி அமண்
என்க. குண்டமணாய்
அவந்திரிவதின் என்று விகுதி
|