பக்கம் எண் :


1252 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

பிரித்துக், கூட்டி அமணர்க்குள்ளாகிச், சிவன்பணி செய்யமாட்டாது
வீணேவாணாள் போக்குவதினும், "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே"
என்பது முதலாகத் தமிழ்மறைகள் விதித்தபடி, சாதல் நன்று
என்றுரைத்தலுமாம். திருமேனிக்குச் செஞ்சந்தனமாக - சிவனுக்குத்தாம்
நியதியாகச் சாத்தும் செஞ்சந்தனக் காப்பாக எண்ணி. சந்தனத்தில்
உயர்ந்தது செஞ்சந்தனம் என்ப. இது மலாக்காச் சந்தனம் எனவும்படும்.
"காசில் பனி நீர்பச்சைக் கற்பூரங் குங்குமப்பூ, மாசிலுரோ சனைபுழுகு
மான்மதநா வியுங்கலந்த, வாசிகந்த மலாக்காச்சந்தனமிலே பனம்"
(மருதவரைப்படலம் - 34) என்ற பேரூர்ப் புராணங்காண்க. முழங்கை
தேய்த்தலால் குருதி பெருகுமாதலின் அதனைப் புலால் கமழும் ஊன்
பண்டமாகக் கருதாது அந்தச் செந்நிற வொற்றுமையே கருதிச்
செஞ்சந்தனமாக எண்ணினர் என்ற கருத்தும் காண்க.

     செழுமுழங்கை - திருமேனியின் செழுமை குறித்தது. சிவனது
மெய்ப்பூச்சுக்குரிய சந்தனமரைத்துப் பணிசெய்த செழிப்புடைய கை என்ற
குறிப்புமாம். "தேய்க்குங் கை" -(987). உவந்து தேய்த்து - உடல் வருத்தம்
சிறிதும் மனங்கொள்ளாது மகிழ்ந்து செய்த மனநிலை குறித்தது. பாறை -
சந்தனம் அரைக்குங்கல். உலகாண்ட - தேய்த்த காரணத்தால் இறைவன்
அருளியபடி உலகாளப்பெற்ற வரலாறு (985, 986, 987) விரிநூலுட் காண்க.

     ஒண்மை - ஒள்ளியனவாகிய மனநிலை - வாக்குநிலை -
செய்கையின் நிலைகள் சரிதம் காண்க. மூர்த்தி - நாயனாரது பெயர் (976).
ஊர் நீள்பதியே என்று முடிக்க. பொன் மாடம் - பொன்னணிந்த சிகர
முதலிய பகுதிகளையுடை மாடங்கள். "கதிர் மாமணி மாடவைப்பு" (968)
என்பது விரிநூல். பொன் - அழகிய என்றலுமாம். "பொற்பதி" (975).
மதுராபுரி
- விரிநூலினுள் இப்பெயரையே எடுத்தாண்டது காண்க (971).
நீள்பதியே
- புகழாலும் பெருமையாலும் காலத்தாலும் நீளும்.
முக்காலத்துக்கும் பொதுவாகிய வினைத்தொகை - 974 பார்க்க.

     968. (இ-ள்.) பாண்டிநாடு - பாண்டிய நாடானது; சீர்மன்னு.....
வைப்பு - சீரினால் நிலைத்த செல்வமுடைய குடிகள் நிறைந்த சிறப்பினால்
ஓங்கும், மேகங்கள் நிலைத்துத் தங்கும் உச்சியிடங்களையுடைய ஒளி
பொருந்திய மணிகளைக் கொண்ட மாடங்கள் நிறைந்தது; நார்மன்னு....
பூண்டது - அன்பு பொருந்திய மனத்தையுடைய பல நல்ல துறைகளில்
வாழ்கின்ற மாந்தர்கள் துதிக்கும்படிஉலகில் நிலைத்த பழமை பொருந்திய
புகழையுடையது.

     (வி-ரை.) சீர்மன்னு செல்வம்- சீரினால் நிலைத்தலாவது
நல்வழியின் ஈட்டப்பட்டதனால் நிலைபெற்றிருத்தல். அவ்வாறல்லாத
பொருள்களாயின் விரைவில் அழிந்துபோம் என்பது நூற்றுணிபு.
செல்வக்குடி மன்னு சிறப்பு
- குடிகள் நிறைந்திருப்பதும் நல்ல
செல்வம் பெருகியிருப்பதும் மாடங்களுக்குச் சிறப்பாவனவாம். சீர் -
அறம்; செல்வம் - பொருள்; குடி - இன்பம்; சிறப்பு - வீடு என நான்கு
உறுதிகளும் தரும் என்ற குறிப்பும் காண்க.

     ஓங்கும் கார்மன்னு சென்னி - மேகங்கள் தங்கும் உச்சிஎன்பது
மாடங்களின் உயர்ச்சியைக் குறித்தது. "செல்வ நெடுமாடஞ் சென்று
சேணோங்கிச், செல்வமதி தோயச் செல்வ முயர்கின்ற, செல்வர் வாழ்"
(குறிஞ்சி - கோயில் - 5) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தின்
கருத்தையும் காண்க. ஓங்கும் மாடம் என்று கூட்டலுமாம்.

     வைப்பு - மாடங்களின் நிறைவாகிய சேமநிதி போல்வது என்றபடி.

     நார்மன்னு.....போற்றும் - எந்த நற்றுறைக்கும் அன்புடைய
மனம் இன்றியமையாது வேண்டப்படுவ தென்பதாம். அன்பும்
நல்லொழுக்கமுமுடைய நல்லோரால் போற்றப்படுவதே நன்மதிப்பாகும்;
ஏனைய வெல்லாம் மதிப்பாகா என்பதும் குறிப்பு. பலநற்றுறை -
பலவகையின் நல்லொழுக்கங்கள்குறித்தது. மாந்தர் - பழஞ் சங்கப்
புலவர்களும் மற்றும் பெரியோர்களும். பார்மன்னு தொன்மைப்