|
காலத்தைப் போக்காதே"
என்ற திருவாசகங்கள் காண்க. இக்கொடியவன்
தனது கொடுஞ்செயலினால் தன் நாளை அன்றைக்கு முடித்துக்கொண்டான்
என்பது பின்னர்க் காணப்படும். 991 பார்க்க.
வன்மைக்
கொடும் பாதகன் - தனது சமயமாறுபாடு ஒன்றே பற்றிச்
சிவாபராதமாகிய பெரும்பாதகத்தைக் கொடுமையாக வலிந்து செய்தவன்.
மாய்ந்திட
- இறந்துபட. "மாய்ந்திட - தன்மை மன்னரைச் சார்வது
என்று? " எனக்கூட்டுக.
வாய்மை
வேதம் - ‘சத்தியமே உறுதியாவது' என்று அறையும்
வேதம் - வாய்மையே பேசும் மறை என்றலுமாம்.
வேத
நன்மைத் திரு நீறு - வேதங்களில் விதந்து பேசப்படுவதும்
நன்மையே தருவதுமாகிய திருநீறு. திருநீற்றுப்பதிகம் பார்க்க.
திருநீற்று
உயர் நன்னெறி - திருநீற்றினை உறுதிப்பொருளாய்க்
கொண்டு உயர்வு தரும் நன்னெறி - சைவ நெறி. "நீற்றின் சார்பு" (980),
"மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கமாகும், நன்னெறி" (திருஞான -
புரா - 600) "தேனவில் கொன்றையார்தந் திருநெறி" (மேற்படி 859),
என்பவை காண்க. உயர் - உயர்த்தும். பிறவினைப் பொருளில் வந்தது.
உயர்வாகிய என்றலுமாம்.
நெறிதாங்கும்
தன்மை - நெறியினை மேற்கொண்டு செலுத்தும்
தன்மையுடைய.
தன்மை
மன்னரைப் புவி சார்வது என்க. புவி சார்வது
-
உலகம் அரசரது சார்பிலே நிற்கக்கடவது என்ப. "மன்ன னெவ்வழி மன்னுயி
ரவ்வழி" என்பது பழமொழி. சார்வார் -
மனத்தினுட் கொள்வாராகி.
முற்றெச்சம். சார்வார் - வந்தனர் என
வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. 18
986.
(வி-ரை.) காய்வுற்ற செற்றம்
- ஒரு பொருளை நடுநிலையில்
வைத்துக் காணமுடியாது காய்தலையுடைய சினம். செற்றம் - கோபம் -
பகைமை. "காய்தலுவத்த லகற்றி யொருபொருட்கண், ஆய்த லறிவுடையார்
கண்ணதே - காய்வதன்கண், உற்ற குணந்தோன்றா தாகும்" என்பது
நீதியுரை.
கண்டகன்
- கொடியவன். கண்டகம் - கொடுமை.
கண்டகம் -
முள் என்று கொண்டு முள்ளினைப்போன்ற துன்பஞ்செய்பவன்
என்றுரைப்பாருமுண்டு.
செற்றங்கொடு
காக்கவும் - மேலெழுந்த செற்றத்தினால் சந்தனங்
கொள்ளுந் துறையை அடைத்து, அது கிடையாமற் காவல்செய்து. உம்மை
இழிவு சிறப்பு. காக்க என்றது வாராமல் காவல்புரிய என்ற பொருளில்
வந்தது.
ஆய்வுற்ற கொட்பு - பல வழியாலும் ஆராய்ந்து
திரியும்
மனச்சுழற்சி. கொட்பு -
கருத்து என்றலுமாம்.
ஏய்வுற்ற
நல் சந்தனம் - ஆலவாய்ப் பரமனாருக்குச் சாத்தத்தகுந்த
நல்ல மணமும் குணமும் உடையதாய் முற்றிய உயர்ந்த சந்தனக்கட்டை.
சிந்தை
சாய்வுற்றிட - மனம் ஏக்கம் பொருந்த. "அன்பரும் சிந்தை
நொந்து" (984) என்றவிடத் துரைத்தவை பார்க்க. சிந்தை
- தமக்கு அந்தம்
இலவாம் மிறை செய்யவும் அவ்விடுக்கண் ஒன்றினுக்கும் அஞ்சாது
உறைப்புடன் பணிசெய்து வந்த திண்ணிய மனம். திருப்பணிக்குரிய சந்தனம்
பெறாமையால் திண்மை சாய்ந்தது என்க. 19
987.
|
நட்டம்புரி
வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோனரம் பென்பு கரைந்து தேய. 20
|
(இ-ள்.)
வெளிப்படை. "அருட் கூத்தப் பெருமானார் அணியும் நல்ல
திரு மெய்ப்பூச்சுத் திருப்பணிக்கு இன்று முட்டுவந்து நேரும் தன்மை
உண்டாயினும்,
|