வகை
:- வன்தொண்டன்.........அந்தணனே - அழகிய பொன்னை
வன்றொண்டர் மிகவும்பெற்ற தலமாகிய திருப்புகலூரில் அவதரித்துத்
திருத்தொண்டுசெய்து வாழ்ந்த முருகர்
என்ற பெயருடைய அந்தணரே;
பதிகம்.......நாவினன் - பதிகந்திகழ் தருகின்ற திருவைந்தெழுத்தினைப்
பயிலும் நாவினையுடையவர்; சீர்......அணிபவன் - சிறப்புப்பொருந்திய
பிறைச்சந்திரனையுடைய அழகிய சடையாருக்குகந்த பூக்களைத் தொடுத்து
அணிகின்றவர்; யான்......தோழன் - நான் மகிழ்ச்சியோடும் துதிக்கும்
அழகிய திருக்கழல்களையுடைய திருஞானசம்பந்தநாயனாருக்குத் தோழர்.
பதிகம்
திகழ்கருபஞ்சாக்கரம்- "பரமர்பதிகப்
பற்றான ஓங்கிச்
சிறந்த வஞ்செழுத்து" (1026) என இதனை விரிநூல் விரித்தது. பதிகம் -
திருஞானசம்பந்த நாயனார் அருளிய "துஞ்சலும் துஞ்ச லிலாத போழ்தினும்"
என்ற பதிகம். அத்திருப்பதிகம் நுதலிய பொருளாயும், அதற்கு மகுடமாயும்
விளங்குகின்ற "அஞ்செழுத்து" என்பார் திகழ்தரு பஞ்சாக்கரம்
என்றார்.
அதற்குப் பஞ்சாக்கரப் பதிகம் என்று பெயர் வழங்குதலும் காண்க. "செந்தழ
லோம்பிய செம்பை வேதியர்க் கந்தியுண் மந்திர மஞ்செ ழுத்துமே" என்று
அத்திருப்பதிகத்தைச் "சிந்தை மயக் குறுமையந் தெளிய வெல்லாஞ்
செழுமறையோர்க் கருளியவர் தெளியு மாற்றால்" (திருஞான புரா - 266)
ஆளுடையபிள்ளையார் அருளினர். அத்திருப்பதிகக் கருத்தினையே மிக
உட்கொண்டு அதனுள் எடுத்துச்சொல்லப்பட்ட அஞ்செழுத்தினையே
அவரது நண்பருமாம் பெருமை பெற்ற முருகனார் ஓயாது பயின்றனர் என்க.
பயில்நாவினன் - மந்திரம் செபிக்கும்
வகைகளாகிய உரை - உபாஞ்சு -
மானதம் என்றமூன்றனுள் வாக்கினால் ஓசைபடச்சொல்லாது நாவசைதலானும்
மனத்திற் கணித்தலானும் விடாது பயின்றார். "ஓவா நாவின் உணர்வினார்"
(1026) என்றது காண்க. அலர்தொட்டு அணிபவன்- விதிப்படி உரிய
பூக்களை எடுத்து விதிப்படி தொடுத்து உரிய காலத்தில் உரியபடி சாத்தி
மகிழ்பவர். தொட்டு- தொடுத்து. இதனைவிரிநூல் 1022 - 1025
பாட்டுக்களில்விரித்தது. மான்..........தோழன் யான்
-
இத்திருவந்தாதியினை அருளிய ஆசிரியரான நம்பியாண்டார் நம்பிகள்
இவர் ஆளுடைய பிள்ளையாரைத் தமது உபாசனா மூர்த்தியாகக்கொண்டு
திருவந்தாதி, கலம்பகம், திருத்தொகை முதலிய பல பிரபந்தங்களாற்
றுதித்தனர். அவற்றைப் 11 - ம் திருமுறையிற் காண்க. தோழன்
- நண்பர்.
1027 - 1029 பாட்டுக்கள் பார்க்க. சண்பைநாதன் - ஆளுடைய பிள்ளையார்.
வன்றொண்டர்........புகலூர்- ஆளுடைய நம்பிகள் செங்கல் செழும்
பொன்னாகப்பெற்ற செய்தி குறித்தது. ஏயர்கோன் - புரா - 46 - 52 -
பார்க்க. முருகன் - நாயனாரது பெயர்; அந்தணன்
- அவரது மரபு.
முதனூல் நாயனாரது
பெயரும் (அதனாற்) சரிதக்குறிப்பும் உணர்த்திற்று.
ஊரும், பேரும், மரபும், திருத்தொண்டும், சரிதவரலாறும் வகைநூல் வகுத்தது.
விரிநூலுள் இவை விரிந்தபடி மேலேகாட்டப்பட்டது. பின்னும் கண்டுகொள்க.
1017. (இ-ள்.)
தாது........நம்பர் - தாதுக்களையுடைய பூக்கள் சூழும்
கூந்தலையுடைய பார்வதியம்மையாரது தளிர்போன்ற கைகளாற் சுற்றித்
தழுவப்பட்ட திருமேனியையும், மேலே கங்கைசூழும் கற்றையாகிய
சடையையுமுடைய சிவபெருமான்; விரும்பும் பதி - விரும்பி அமர்கின்ற
திருப்பதியானது; சோதி......நாட்டு - ஒளி சூழும் மணிமுடி சூடிய
சோழர்களது காவிரிபாயும் திருநாட்டிலுள்ள; போது.....பூம்புகலூர் -
மலர்கள் நிறைந்த பெரிய சோலைகளையுடைய பொய்கையினாற் சூழப்பட்ட
திருப்பூம்புகலூர் என்பதாகும்.
|