16.
முருக நாயனார் புராணம்
|
தொகை
"முருகனுக்கும்
(உருத்திர பசுபதிக்கும்) அடியேன்"
-
திருத்தொண்டத்தொகை
வகை
"பதிகந்
திகழ்தரு பஞ்சாக் கரம்பயி னாவினன்;சீர் மதியஞ் சடையாற் கலர்தொட்
டணிபவன்; யான்மகிழ்ந்து துதியங் கழற் சண்பை
நாதற்குத் தோழன்;வன் றொண்டனம்பொ னதிகம் பெறும்புக
லூர்முரு கன்னெனு மந்தணனே"
(18) |
|
-
திருத்தொண்டர் திருவந்தாதி
விரி
1017.
|
தாது சூழுங்
குழன்மலையா டளிர்க்கை சூழுந் திருமேனி
மீது சூழும் புனற்கற்றை வேணி நம்பர் விரும்புபதி
சோதி சூழு மணிமௌலிச் சோழர் பொன்னித் திருநாட்டுப்
போது சூழுந் தடஞ்சோலைப் பொய்கை சூழும் பூம்புகலூர். 1 |
புராணம்
:- முருகர் என்ற பெயருடைய நாயனாரது
சரிதவரலாறும்
பண்பும் கூறும்பகுதி. இனி, நிறுத்த முறையானே மும்மையாலுலகாண்ட
சருக்கத்தில் இரண்டாவது முருகநாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார்.
தொகை
:- முருகர் என்ற பெயருடைய பெரியோர்க்கும் (உருத்திர
பசுபதியாருக்கும்) நான் அடியேன் ஆவேன். முருகனாராம்
(1016)
என்றவிடத்துரைத்தவை பார்க்க.
அன்றியும், முருகன்
என்பது என்றும் மாறாத "மணங்கமழ் தெய்வத்
திள நலம்" உடைய செவ்வேளின் பெயர். தாம்தாம் வழிபடு கடவுளரின்
பெயரை மக்களுக்கு இட்டு வழங்குதல் நமது நாட்டின் பண்டைய
நல்வழக்கங்களுள் ஒன்றாகும். இந்நாயனாரின் முந்தையோர்
முருகப்பெருமானிடத்து மிக்க அன்பு செலுத்தியமையால் இவர்க்கு
அப்பெயரிட்டனர் என்று கருத இடமுண்டு. நம்பி யாரூரர் "திருவாரூர்ச்
சிவன்பேர்ச் சென்னியில் வைத்"து வழங்கப்பெற்றனர் என்பது இங்குக்
கருதத்தக்கது. கடவுளர் பெயர்களேயன்றி அடியார்களின் பெயர்களையும்
மக்கட்குஇட்டு வழங்கினர் என்பதும் அறியப்படும். முன்னிரண்டு
சருக்கங்களினிறுதியிற்றொகுக்கப்பட்ட சரிதஆராய்ச்சியுரைபார்க்க.
இவ்வழக்கு நல்ல திருநாமங்களை அடிக்கடி நினைக்கவும் சொல்லவும்
காரணமாகி நற்பயன் விளைப்பதாம் என்பது கொண்டே நம்பெரியோர்
இதனைக் கையாண்டனர். ஒரு பொருளுமின்றி மரம் கல் செடி கொடி பூ
முதலியவற்றின் பேர்களை மக்களுக்கு வைத்து வழங்கி வருதல் இந்நாளிற்
புதிதாய்ப் புகுந்த பயனற்ற வழக்கங்களுளொன்றென்றொழிக.
|