நம்நந்தி யாணையே"
(3 - 198) என்ற திருமூலர் திருமந்திரங்கள் யாவரும்
கருத்தில் வைக்கத்தக்கன. இங்குச் சிவனடியாரை அலைத்த பாதகன்
மாய்ந்திட நீற்று நன்னெறியரசனை இந்நாடு பெறுவதென்றோ? (985) என
மூர்த்தியார் எண்ணிய அன்றிரவே அக்கொடுங்கோலரசன்
இறந்துபட்டானென்ப துணரத்தக்க உண்மை. (991 - 992)
20.
கூழும் குடியும் முதலிய எல்லாச் சிறப்பும் பொருந்தியிருப்பினும்
மன்னவனது காவலின்றி வையகம் வாழும் தன்மையுடையதன்று. (995)
21.
வழிவழிவரும் அரசனில்லாத போது யானையைக் கண்கட்டி
விடுவதும் அதனால் மேல் கொள்ளப்பட்டாரை அரசனாகக்கொள்வதும்
முந்தையோர்மரபு.
22.
உலகந்தாங்கும் அரசாட்சி வந்து தம்மேல் நிற்பினும் அதனைத்
திருத்தொண்டினுக்குக் கீழ்வைத்தே காண்பர் பெரியோர் (1008 - 1013).
அரசாட்சியினை இன்னலென இகழ்ந்து விடுத்துச் சென்றனர் ஐயடிகள்
காடவர்கோனாயனார். கழறிற்றறிவார் அதனைத்திருத் தொண்டுக்
கிடையூறாம் என்று கருதினர். "தனக்குன்ற மாவையஞ் சங்கரன் றன்னரு
உளன்றிப்பெற்றான், மனக்கென்று நஞ்சிற் கடையா நினைவன்" (11 -
திருமுறை - பொன் - அந் - 43) என்ற அவர் திருவாக்கும், கண்டெந்தை
யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல், அண்டம் பெறினு
மதுவேண்டேன்" என்ற அம்மையார் திருவாக்கும் மக்கள் கருதத்தக்கன.
திருத்தொண்டின் பெருமையை நோக்க உலக அரசாட்சியைச் சிறிதாக
மதிப்பர் பெரியோர் (1015).
23.
அரசனது உட்கிடையைக் குறிப்பினாலறிந்து உலகளித்தல்
நல்லமைச்சர் பண்பு. (1012).
24.
சைவநெறி ஒன்றே உலகெங்கும் நிரம்பிய தன்மையுடையது (1012).
25.
தன்கீழ்வாழும் எவ்வுயிர்க்கும் உட்பகைபுறப்பகைகளால்
இடர்வராமற் காப்பது நல்லரசாட்சியின் இலக்கணம் (1010). உட்பகை ஐந்து;
அவை ஐம்புலங்களினின்பங்களுட்பட்டு மக்கள் கேடுறும் வகைகளாம்.
புறப்பகை ஐந்து; அவை "மாநிலங் காவலனாவான்" (121) என்ற திருப்பாட்டில்
"ஆனபயம் ஐந்து" என்ற அவை.
26.
மக்கள் உண்ணல், உடுத்தல், மகப்பெற்று வாழ்தல் முதலிய உலக
நிலையில் உடல் உடைமைகளின் காவலோடு அமைந்துபடும் இந்நாளின்
அரசாட்சியின் குறிக்கோள் தாழ்ந்த நிலையில் உள்ளது. மக்களின்
உயிர்களது உயர்நிலைபற்றியே காவல் அரசாட்சியின் உயர்ந்த
குறிக்கோளாகும்.
27.
உலகரசாளும் நிலையினும் மனம் திரியாது சிவன்பாற் பத்திசெய்து
திருத்தொண்டுசெய்து நிற்றல் ஞானிகளியல்பு (1015). இங்கு மூர்த்தியார்
அரசராகிய போதும் தமது சந்தனத்திருப்பணியை விடாதுதாமே செய்தனர்
என்பது உலகம் படி யெடுத் தொழுகத்தக்க பெருஞ்செயல். "எத்தொழிலைச்
செய்தாலு மேதவத்தைப் பட்டாலும், முத்தர் மனமிருக்க மோனத்தே" என்பது
குறிக்கோளாகக் கொள்ளத்தக்க பொன்மொழி. இடங்கழி நாயனார்,
கழறிற்றறிவார் நாயனார் முதலியோர் சரிதங்கள் சிந்திக்கத்தக்கன.
மூர்த்திநாயனார்
புராண முற்றும்.
குறிப்பு
:- 1005. சுடர் வன்னி - சூரியனிடத்திலிருந்து யாகத்துக்கு
நெருப்புக்கொள்வது என்பது சிவாக்கிர யோகீந்திரர் கிரியா தீபிகை
"பவித்திராதி வாசவிதி அரணே ஸூர்ய காந்தா........"(பக்கம் 117)
என்றதனாலுமறிக.
|