பக்கம் எண் :


1312 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

மின்மினித் தீக்காய்தல்" போலும். "கரும்பிருக்க விரும்புகடித் தெய்த்தல்"
போலும் பயனற்ற செய்கையாம். நற்பயன் றராதொழிவது மட்டுமேயன்றிக்கேடு
தருவதுமாகும். (980)

     11. அரசராயினர் நற்சமயச் சார்புபற்றி ஒழுகுதல்வேண்டும். அது
நாட்டுக்குப் பலவழியிலும் நலஞ் செய்யும். (980)

     12. அவ்வாறு அரசன் தான் நற்சமயச் சார்புபற்றி ஒழுகும் நல்லூழ்
பெறாவிடினும், தன் கீழ்வாழும் மக்களை மிகையும் பகையுமின்றி அவ்வவர்
சமயச்சார்பில் நின்றமையும்படி பணித்து நிறுத்துதல் வேண்டும் (981). அரசன்
தான் கொண்டொழுகும் சமயச்சார்பினுக்குள்ளாகும்படி வேறெந்தச்
சமயத்தாரையும் மிறை செய்தலும், வன்மை செய்தலும், அவ்வவர்
சமயவாழ்க்கையின் ஒழுகுதற்கு எவ்வகையாலுந் தடைசெய்தலும் தகாது.
அவ்வாறு செய்தல் கொடுங்கோன்மையாம். (982)

     13. தத்தமது பெருமைக்களவாகிய சார்பில் ஒழுகி நிற்கும்
பெருமக்களை அந்நெறியில் நிற்கவொட்டாமற் றடுக்க எவரும் வலியிலார்.
(983)

     14. பொய்ச்சமய நெறியிற் போது போக்கி நல்லோரை வன்மை
செய்யும் பாதகர் மாயவும், நன்னெறி ஓங்கவும் தமது தூய உள்ளத்தில்
இறைவன்றிருவருளை நாடி எண்ணுவதும் பெரியோர் இயல்பாம் (985).
அதனால் அவர்களது பரந்த கருணைக்கு இழுக்கில்லை. இது உலகை
நன்னெறியில் உய்விக்கும் கருணைத் திறமேயாகும். "ஆழ்கதீயது; எல்லாம்
அரனாமமே சூழ்க", "வளர்க நம்பத்தர்கள் வஞ்சகர் போயகல" முதலிய
திருவாக்குக்களிற் கண்டபடி தீமை ஒழியவும் நன்மை ஓங்கவும் கடவுளைப்
பிரார்த்திப்பது கருணைத்திறம்.

     15. தமது நியதியாகிய திருப்பணிக்கு முட்டு நேரும்போது தம்
உடலையும் உயிரையும் பொருட்படுத்தமாட்டார் பெரியோர் (987). இங்கு
நாயனார் சந்தனப் பாறையில் முழங்கை தேய்த்த செயல் அன்பின்
துணிவாலாகியது. "ஆராலு மென்னை யமட்டவொண்ணாதினிச், சீரார்
பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்; சீராடி யங்கே திரிவதால் லாதினி,
யார்பாடுஞ் சாரா வறிவறிந்தேனே" (9 - 312) என்ற திருமந்திரம் உணர்ந்து
உள்வைக்கத்தக்கது.

     16. உலகப்பற்றும், உடற்பற்றும், உயிர்ப்பற்றும் விட்டபோது இறைவர்
வெளிப்பட்டு உறுதிகொடுத் தருள்செய்வர். (989)

     17. யாக்கை நிலையாமையுடையது. அது மின்போற் றோன்றி மறைவது.
சிவனடிச்சார்வில்லோர்க்கு அதனினும் விரைவில் மறையும்
நிலையாமையையுடையது. (991)

     18. சிவன்றிருப்பணிக்கு இடையூறு விளைத்தல் பெரும்பாவம்.
சிவனடியாரை அலைத்தல் பெரும்பாதகம். இவை கழுவாயில்லாத
சிவாபராதங்களாம். இவற்றைச் செய்தோர் வெவ்வாய் நரகத்தில் விரைந்து
வீழ்ந்து அலகையாய் நெடுங்காலம் கொடுநரகத்துன்பம் அநுபவிப்பர் (992).
"நாணர கத்து நிற்கும், அலகா முறுவீர் சிவனடியாரை யலைமின்களே"
(11 - ம் திருமுறை - பொன் - அந்.) என்ற கழறிற்றறிவார் திருவாக்குச்
சிந்திக்கற்பாலது.

     19. அடியார்களது திருவுள்ளம் வருந்தச் செய்வோருடைய ஆயுள்
சுருங்குவதுடன் செல்வமும் அழியும். அடியாரை வருந்தச் செய்தால் அரசும்
நாடும் சிதைவுறும். (985 - 991) "பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்,
சித்தங் கலங்கிடச் சிதைவுகள் செய்தவர், அத்தமு மாவியு மாண்டொன்றின்
மாய்ந்திடும். சத்தியமீது சதாநந்தி தாளே" (9 - 196), "ஈச னடியா ரிதயங்
கலங்கிடத், தேசமு நாடுஞ் சிறப்பு மழிந்திடும், வாசவன் பீடமு மாமன்னர்
பீடமும், நாசம தாகுமே