பக்கம் எண் :


முருகநாயனார்புராணம்1317

 

புழிப்போலக்கொள்க. பூங்கமலவாவியினாற் சூழப்பட்டு அதனடுவிற்
பூத்தகமலம் போல இத்திருக்கோயில் விளங்குவதனால் இவ்வாறு கூறினார்
என்க.

     பொய்கை சூழும் என்ற கருத்தும் அது. "பூம்புகலூர் மேவிய
புண்ணியனே" என்ற திருத்தாண்டக ஆட்சியினை நினைப்பிக்க இவ்வாறு
கூறினார் என்பதுமாம்.

     புகலூர் - பிறவிக்கஞ்சிய உயிர்கள் வந்து புகலடையச் (சரணடையத்)
தக்க ஊர் என்பதை "தன்னைச் சரணென்று தாளடைந்தேன்" என்ற
திருவிருத்தத்தானுமறிக.

     இத் திருப்பாட்டால் நாடு, நகரம், ஆறு, அரசு, மூர்த்தி என்ற
சிறப்புக்களை ஒருங்கே கூறியதனோடு சரிதச்சிறப்பும் உடன் குறித்துக்
கூறிய அமைதியும் அழகும் காண்க.

     குழன் மடவாள் - என்பதும் பாடம்.          1

1018.



நாம மூதூர் மற்றதனு ணல்லோர் மனம்போ லவரணிந்த
சேம நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
யாம விருளும் வெளியாக்கு மிரவே யல்ல; விரைமலர்மேற்
காமர் மதுவுண் சிறைவண்டுங் களங்க மின்றி விளங்குமால்.
2

     (இ-ள்.) நாமம்......அதனுள் - புகழினையுடைய பழமையான
அத்திருப்பதியினுள்; நல்லோர்......ஒளியால் - நல்ல அடியார்களது
மனங்களைப் போலவே அவர்கள் திருமேனிமேல் அணிந்த காவலுடைய
திருநீற்றினது வெள்ளிய திருத்தம் செய்கின்ற ஒளியினாலே; யாம
இருளும்.
...அல்ல - நடுயாமத்தினிருளினையும் வெளியாக்கும் இரவு
மட்டுமல்ல;
விரைமலர்.......வண்டும் - மணமிக்க மலர்களின்மேல் தங்கும்
அழகான தேன் உண்கின்ற சிறையுடைய கருவண்டுகளும்; களங்கம்
இன்றி விளங்கும்
- கருமையின்றி விளங்குவன. (ஆல் - அசை).

     (வி-ரை.) நாமம் மூதூர் - நாமம் - புகழ். நாமம் - பெயர்
எனக்கொண்டு, முன் பாட்டிற்கூறிய திருநாமத்தைக் கொண்ட பழம்பதி
என்றலுமாம். நாமம் - அச்சம் எனக்கொண்டு ஆன்மாக்களிடத்து வினைகள்
வந்தடர அஞ்சும் என்றுரைப்பினுமாம். "ஆலமிடற் றானடியா ரென்றடர
வஞ்சுவரே" "இயமன் றூதரு மஞ்சுவர்" முதலியவை காண்க.

     நல்லோர் - நன்மையுடையவர். நன்மையே செய்பவர். நல்லடியார்கள்
என்க. நன்மை - இயற்கைப் பண்புமொழி.

     மனம் போல் - மனம் அதன் ஒளிக்கு ஆகுபெயர். "மாசி லாத
மணிதிகழ் மேனிமேற், பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்" (141) என்றபடி
நல்ல அடியார் மனமும் அவர்கள் பூசும் திருநீறும் கூடி உள்ளும் புறமும்
ஒரு தன்மையாய தூய ஒளியுடன் விளங்குவன என்க.

     சேம நிலவு திருநீறு - தன்னையணிந்தோரைக் காக்குந் தன்மை
நிலவுகின்ற நீறு. "மந்திர மாவது நீறு", "சேணந் தருவது நீறு",
"ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு" முதலிய தமிழ்மறைத்
திருவாக்குக்கள் காண்க. இது பற்றியே இதனைத் திருநீற்றுக் காப்பு
என்பது மரபு. "வேறுபல காப்புமிகை யென்றவை விரும்பார், நீறுதிரு
நெற்றியினிறுத்திநிறை வித்தார்" (திருஞான - புரா - 43). "இறைவர்திரு
நீற்றுக்காப் பேந்தி" (மேற்படி 262) முதலியவை காண்க. இரட்சை என்ற
பெயரும் கருதுக. வசுதேவர் கண்ணனுக்கு நீறிட்டார் என்பது
விஷ்ணுபுராணம்.

     திருந்து ஒளி - உயிர்கள் திருந்துவதற்குக் காரணமாகிய சிவ ஒளி.
திருத்தும் ஒளி என்க. பிறவினைப் பொருளில் வந்தது. சேமநிலவு -
இன்பநிலவும் பொருட்டு என்றலுமாம்.