பக்கம் எண் :


1318 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     யாம இருளும் வெளியாக்கும் இரவு - நடு இரவின் திணிந்த
இருளினையும் வெளி என ஆக்கத்தக்க புலரிக்காலம் என்பர். உம்மை
உயர்வு சிறப்பு. இரவு களங்கமின்றி விளங்குதலாவது - வெண்மை
ஒளிமிக்கதனால் இருளின் தன்மை காணப்படாது நிற்றல்.

     காமர் வண்டு என்று கூட்டுக. காமர் என்பதை மதுவுக்கும்
சிறைக்கும் அடையாக்கி அதற்குத்தக உரைப்பினுமாம். வண்டு இங்குக்
கருவண்டு குறித்தது.

     மதுவுண் வண்டு- முன் பாட்டிற் போது சூழந் தடஞ்சோலை
என்றதைத் தொடர்ந்து வரும் பொருளியைபு காண்க.

     களங்கம் - கருமை. வண்டு களங்க மின்றி விளங்குதலாவது -
கருமை நிறங்காட்டாது தோன்றுதல்.

     இரவேயல்ல; வண்டும் களங்கமின்றி விளங்கும். வண்டும் -
உம்மை சிறப்பொடுகூடிய இறந்தது தழுவிய எச்சவும்மை. மேல்வரும் இரண்டு
பாட்டுக்களினும் இவ்வாறே முடித்துக் கண்டு கொள்க.

     இரவு களங்கமின்றி விளங்கும் - இரவு தீய எண்ணங்களுக்கும்
தீயசெயல்களுக்கும் காமமுதலிய மனநிகழ்ச்சிகளுக்கும் உரியதாய் நிகழும்
காலப்பகுதியாகிய பொருள். அது, நல்லோர் மனச்செயலாலும் திருநீற்றுச்
சார்பினாலும், தனது தீமை செய்கின்ற சத்தி நீங்கி நிற்கும் என்பது குறிப்பு.
இது சிவஞான போதம் 12 - ம் சூத்திரத்துள் உணர்த்தப்பட்ட உண்மையை
விளக்கி நிற்பதும் காண்க.

     இப்பாட்டில் யாமஇருளும், வெளியாக்கும் இரவும் என்று
எண்ணும்மையாக வைத்து இரண்டு பொருள்களாகக் கொண்டுரைத்து, இருள்
- இரவு - வண்டு என்ற மூன்றும் முறையே ஆணவம் மாயை கன்மம் என்ற
மும்மலங்களையும் குறிப்பாலுணர்த்துவன என்றும், இவை திருநீற்றுச்
சார்பினால் தமது வலிமைகெட்டுச் சிவானுபவத்துக்குத் துணை செய்வனவாகித்
தோன்றும் என்றும் இங்கு விசேடவுரை காண்பாருமுண்டு. 2

1019.






நண்ணு மிசைதேர் மதுகரங்க ணனைமென் சினையின்
                                 மருங்கலைய
வண்ண மதுரத் தேன்பொழிவ வாச மலர்வா யேயல்ல;
தண்ணென் சோலை யெம்மருங்குஞ் சாரு மடமென்
                                 சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந்தேன்
                                 பொழியுமால். 3

     (இ-ள்.) நண்ணும்.....பொழிவ - பொருந்திய இசை தேர்கின்ற
வண்டுகள் மலரும் பருவத்து அம்புகளையுடைய மெல்லிய கிளைகளின்
பக்கங்களில் பறக்கவே நிறமும் மதுரமுமுடைய தேனினைப் பொழிவன;
வாச மலர்வாயே அல்ல
- மணமுடைய மலர்களின் அலர்ந்த வாய்கள்
மட்டுமே அல்ல; தண்ணென்.....மணிவாயும் - குளிர்ச்சி பொருந்திய
சோலைகளில் எல்லாப்பக்கங்களிலும் சார்கின்ற இளமையும் மென்மையும்
உடைய நாகணவாய்ப் புட்களின் பண்பொருந்திய இனிய மொழியைச்
சொல்லும் வாயும்; பதிகச் செழுந்தேன் பொழியும் - திருப்பதிகங்களாகிய
செழிய தேனினைப் பொழியும். (ஆல் - அசை)

     (வி-ரை.) மதுகரம் - வண்டு. நண்ணும் - மதுகரங்கள் என்று
கூட்டுக. இசை தேர் மதுகரங்கள். வண்டுகள் இயற்கையுணர்வினால்
இசைகளைத் தேர்ந்து பண்பாடுவன என்பதனை "கள்ளார், வண்டு பண்செயும்
புகலூர் வர்த்தமா னீச்சரத்தாரே", "சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு
சிவந்த வண்டு, வேறாய வுருவாகிச் செவ்வழி நற் பண்பாடு மிழலை யாமே"
(பண் - மேகராகக் குறிஞ்சி - மிழலை - 7.)