புகலூர் முருகநாயனாருடைய
உண்மைத் திருத்தொண்டின்
திறத்தினைத்துதித்து, இனிக், கரவில்லாதவரிடத்து வருவாராகிய
சிவபெருமானை மனத்துட்கொண்டு திருவுருத்திரத்தினால்
துதித்த
அன்பராகிய பசுபதியார் சிவனைப் பணிந்த பெருமையினைச்
சொல்லப்புகுகின்றேன்.
(வி-ரை.)
அரை அரவு அணிந்தாரை - சிவபெருமான் அரவத்தை
அரை ஞாணாகவும் அற்றத்தை மறைக்கும் மறைப்பாகவும் பூண்பர் என்பது
மரபு. "பைவாய் பாம்பரை யார்த்த பரமனை" (அரசுகள் - திருவங்கமாலை),
"அற்றமறைப்பது முன்பணியே" (ஆளுடைய பிள்ளையார் - பழம்பஞ்சுரம் -
திருவியமகம் - கழுமலம் - 1), "அரையார்த் திட்டதும் பாம்பு" (நம்பிகள் -
கோத்திட்டை - 1) முதலியன காண்க.
அருச்சித்துக்
- கழற்கீழ் - விரவு என்று கூட்டுக. அருச்சித்ததனால்
எனக் காரணங்கூறியபடி. "முன்செய்த பூசையதனாற் புக்கருளி" (1029)
என்றது பார்க்க.
அருச்சித்த
முறைகள் முன்னுரைக்கப்பட்டன.
மெய்ம்மைத்
தொண்டு -
"மெய்ம்மைத் தவம்" (1022) என்றது
காண்க. "தன்னெஞ்சறிவது பொய்யற்க" (குறள்) என்றபடி
நெஞ்சறிந்தவகையில் ஒன்றானும் பிறழாதவண்ணம் செய்த திருத்தொண்டு.
தொண்டின்திறம் - தொண்டினை முழுதும் போற்றுதல் இயலாது; அதன்
திறம் - தன்மை - ஒரு சிறிது மட்டும் போற்றப்பட்டதென்பது குறிப்பு.
காவு
இல்லவர்பால் வருவார் - "கரவார்பால் விரவாடும்
பெருமானை" என்றும், "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை" என்றும்
அப்பர் சுவாமிகள் அருளியவை காண்க.
கருத்திற்கொண்டு
உருத்திரம் பரவும் என்க. உருத்திரத்தினாற் பரவும். (அன்பராகிய)
பசுபதியார் என்க. இதனால் இனி அடுத்துவரும்
புராணத்திற்குரிய நாயனாரது பெயரும் அவர் செய்த திருத்தொண்டும்
கூறியவாறு.
பணிந்த
பெருமை - தொண்டுசெய்த பெருமையுடைய வரலாற்றினை.
இதனால் ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை
வடித்தெடுத்து முடித்துக்காட்டி, இனிவரும் சரிதத்தையும் குறிப்பித்துத்
தோற்றுவாய் செய்கின்றார்.
பரவுற்றேன்
- என்பதும் பாடம். 14
சரிதச்சுருக்கம்
:- சோழர்களது காவேரித் திருநாட்டில்
மலர்ச்சோலைகள் சூழ்ந்த அழகுடைய சிறந்த நகரம் திருப்புகலூர்.
அதிற்
பெரியோர் வாழ்வர். அவர்களது திருமேனிகளிலணிந்த திருநீற்றுப் பூச்சின்
வெள்ளிய ஒளி உள்ளும் புறம்பும் ஒளி பரப்பி விளங்கும். சோலைகளில்
பூவைகள் தாம்கேட்ட பழக்கத்தால் திருப்பதிகங்களைப் பாடுவன;
அதுகேட்ட அன்பர்கள் மனமுருகிக் கண்ணீர் அரும்பாநிற்பர்.
இத்தகைய
வளம் பொருந்திய புகலூரில் மறையவர் மரபில் வந்தவர்
முருகனார். அவர் சிவஞானம் சிறந்தவர். சிவபெருமான் றிருவடியில்
நிறைந்த அன்பினால் உருகும் மனமுடையவர். முன்னை மெய்த்தவத்தினால்
அவர் சிவபெருமானுக்குத் திருப்பள்ளித் தாமம் பறித்துச்சாத்தும்
திருப்பணியை மேற்கொண் டொழுகினார்.
விடிவதற்கு
முன் எழுந்து நாட்கடன் முடித்துத் தூயநீரின்
மூழ்கிப்போய், மலர்ச் சோலைகளிலும் மலர் வாவிகளிலும் புக்குப்
பெருமானுக்குச் சாத்தும் சமயத்தில் அலரும்படியான பருவத்திற் பறித்த
மலர்களை வெவ்வேறு திருப்பூக் கூடைகளில் அமைப்பார். கோட்டுப்பூ,
கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ என்ற நால் வகை மலர்களில் சிவபெருமானுக்குச்சாத்துதற்கு
ஆகும் மலர்களைத் தெரிந்து
|