|
குலத்தின்....குழுமி
என முன்பாட்டிற் கூறியதனைத் தொடர்ந்து
அவ்வாறு குழுமிய குலக்குடிகளுட் சிறப்புடைய வேதியர்கள் தாம்
செய்யத்தக்க வேள்விகளைச் செய்தனர்; அதன் பயனை வெளிப்படையாய்க்
காண உலகம் மழையினாற் சிறந்தது என்று முதலிற் கூறினார். ஏனை
எல்லாக் குடிகளும் அவ்வாறே தங்கள் தங்கள் நெறிகளிற் சரித்து
அறத்தின்வழி நீதியின் ஒழுகும் சால்புடையராயினர் என்பர் அவ்வூர்
என்று
தொகுத்துக் கூறினர்.
தருமம் இறைவனது வடிவம்; நீதியும் அதன் வழித்தாய சால்பும்
அவனது தொக்க உருவம். "தனிப்பெருந் தருமம்" (107) "அறவாழி யந்தணன்"
முதலியவையும், "இன்னவுரு வின்னநிற மென்றுணர்வ தேலரிது நீதிபலவும்,
தன்ன துருவாமென மிகுத்ததவ நீதியொடு தானமர்விடம்" (சாதாரி -
திருவைகா - 4) என்று ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் காண்க.
இவற்றால் அவ்வூரினுள்ளார் இறைவனாணை வழிநின்று அவன்றன்மை
பெறுதற்கணியராய் ஒழுகினர் என்பது குறிப்பார், ஆடுவார்க்குத்
தருமமும்
நீதியும் சால்பும் அவ்வூர் அளிப்பன என்றார். "தர்மம் சர" என்பது
வேதம்.
தேன்
அளிப்பன - தேன் - வேள்விக்குரிய பொருள்களுள் ஒன்று.
அன்றியும் அது இறைவனை ஆட்டும் திருமஞ்சனப் பொருள்களுள்ளும்
ஒன்று. மக்களின் உணவுப் பொருள்களுள்ளும் அது சிறந்தது என்பது
"செந்தினை யிடியுந் தேனும் அருந்துவார் தேனிற் றோய்த்து, வெந்தவூ
னயில்வார் வேரி விளங்கனிக் கவளங்கொள்வார்" (684) என்பன
முதலியவற்றிற் காண்க.
வேள்வியின் வளர்தீ....ஆனைந்தாடுவார் என்றதனால்
அவ்வூர்
இறைவன் வழிபாட்டில் நிற்பது என்பதும், தருமமும் நீதியும்
சால்பும்
என்றவற்றால் அவ்வூர் உலகியல் நீதி ஒழுக்கத்தின் நிற்பது என்பதும்
கூறினார். அவ்வாறு வாழும் தரும நீதியொழுக்கமும் இறைவன்
வழிபாட்டினையே உட்கொண்ட தென்பதனை ஆடுவார்க்குத் தருமமும்
நீதியும் சால்வும் அளிப்பன என்றதனால் தேற்றமாகக்
கூறினார். உலக
வாழ்க்கை இறைவன் சார்பினை உட்கொண்டு வாழப்படாதபோது
பயனற்றதென்பது அறிவிக்கப்பட்டமை காண்க. இது மறையவர்
புராணமாதலின் அவர்கள் செய்யத்தக்க வேள்விச்சிறப்புடன் தொடங்கிய
நயமும் காண்க. "நீரிடை நெருப்பெழுந் தனைய" (1035) என்ற உவமையின்
உட்குறிப்பும் அது. 492 - 832 - 867 - 904 முதலியவற்றிலும், பிறாண்டும்
உரைத்தவை பார்க்க.
ஆனுகந்து
ஆடுவார் என்றதனாற் பசுக்களின் சிறப்பும் உணரப்படும்.
பசுக்களுக்குப் பதியாவார் இறைவன் என்பதும், அவரது அடிமைத்திறம்
புரியும் அப்பெயர்கொண்ட பெரியவரது சரிதம் இதுவாகும் என்பதும் ஆகிய
குறிப்புப்படக் கூறிய சிறப்பும் காண்க. 2
1033.
|
அங்கண் மாநக
ரதனிடை யருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினிற் றோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்கி னாரடி மைத்திறம் புரிபசு பதியார்.
3 |
(இ-ள்.)
வெளிப்படை. அங்கண்மையுடைய பெரிய அந்நகரத்தில்
அருமறைகளின் வாய்மையினிற்கும் உயர்ந்த மறையவர் மரபில் தோன்றிய
தூயவர், செங்கண்ணுடைய பெரிய இடபத்தை ஊர்ந்து வருபவரும் செழித்த
இமயமலையின் மகளாராகிய கொடிபோன்ற பார்வதியம்மையாரை ஒருபங்கிற்
கொண்டவரும் ஆகிய சிவபெருமானது அடிமைத்திறத்தை விரும்பும்
பசுபதியாரென்ற பேருடையவர்.
|