எயிலுடைத்
தில்லை எல்லை - எயில் - மதில்.
தீமை உட்புகாத
காவல் குறித்தது. எல்லை - நாற்புறமும் காததூரத்தில் தில்லையைச் சூழ்ந்த
இடம். 238 - ல் உரைத்தனவும் பிறவும் பார்க்க.
தில்லை....தொண்டர்
- இது மேல்வரும் சரிதத்திற்குத் தோற்றுவாய்
செய்து அறிவித்தபடியாம். இதனால் அந்நாயனாரது பெயர்க்காரணமும் சரித
வரலாறும் கூறினார். 1060 - 1061 - 1062 திருப்பாட்டுக்கள் பார்க்க
முதனூலாகிய திருத்தொண்டத் தொகையினுள் இப்பெயராலே அவர்
துதிக்கப்பட்டமையின் இப்பெயர் கொண்டே தோற்றுவாய் செய்ததுமன்றித்,
தில்லை எல்லையில் - போவார்- என்று சரித விளைவுடன்கூட்டிப்
பெயர் விளக்கமுஞ்செய்தார். புறத்திருத் தொண்டர்
- கோயிற்புறத்திலே
யிருந்து தொண்டுசெய்பவர். அவர் மரபு குறித்தபடியாம். திருவந்தாதியும்
காண்க.
ஆசிரியர்
தமது மரபின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை முடித்துக்
காட்டிய திறமும், வருஞ்சரிதத்தை எடுத்துத் தோற்றுவித்த திறமும்
கண்டுகொள்க. 10
சரிதச்
சுருக்கம் :-காவிரி
பாயும் வயல் வளமுடைய சோழ
நாட்டில் குலத்தில் ஓங்கிய குறைவிலாக் குடிகள் நிறைந்த நலமுடையது
திருத்தலையூர் என்ற பதி. அதில் மறையவர்களின்
வேள்வியின் பயனாக
மழை பருவந் தவறாது பெய்யும். இனிய செழுஞ் சோலைகளால் அவ்வூர்
சூழப்பெற்றுள்ளது. ஆனைந்தாடும் சிவபெருமான் அருளிய நூல் வழியே
ஒழுகும் அவ்வூரின் குடிகள் தருமமும் நீதியும் சால்பும் நிறைந்தவர்கள்.
அவ்வூரில்
மறையவர் குலத் தில் அவதரித்த தூயவர்
சிவனடிமைத்
திறத்தை விரும்பி இடைவிடாது சொல்லும் பசுபதியார்
என்பவர். அவர்
வேத உருத்திர மந்திரங்கொண்டு அன்போடு இடையறாது நேய
நெஞ்சினால் இறைவன் றிருவடிகளைத் துதிக்கும் தொழிலிற் சிறந்து
விளங்கினார்.
தாமரைத்
தடத்தினுட் புகுந்து, தெளிந்த நீர், கழுத்தளவு செறிந்துள்ள
நிலையில் சென்று நின்று கைகளை உச்சிமேற் குவித்து அன்புடன்
சிவபெருமான் றிருவடிகளையே குறிவைத்து அருமறைப் பயனாகிய
திருவுருத்திரத்தினைப் பெரும்பகலும் எல்லியும் வழுவாமல் சில நாட்கள்
ஒருமை மனத்துடன் பயின்று வந்தனர்.
இவ்வாறு செய்துவந்த
தவப்பெருமையினையும், அதனுடன் கலந்த வேத
மந்திர நியதியின் மிகுதியினையும் விரும்பிச் சிவபெருமான் அமர்ந்து அருள்
புரிந்தனர். பசுபதியார் சிவபுரி எல்லையிற் சேர்ந்து இறைவரது எடுத்த சேவடி
யருகுற அணைந்து இனிதமர்ந்தனர்.
உருத்திரம் பயின்று
பேறுபெற்றதனால் அவருக்கு உருத்திர
பசுபதியார் என்ற பெயர் உலகம் போற்ற வழங்குவதாயிற்று.
தலவிசேடம்:-
திருத்தலையூர். (1) இத்தலம் தென்னிந்திய
இருப்புப்பாதை மாயவரம் - பேரளம் வழியில் கொல்மாங்குடி
நிலையத்திலிருந்து கிழக்கு 2 நாழிகையளவு கற்சாலை வழி சென்றால்
நாட்டுவாய்க்காலின் தென்கரையில் அடையத்தக்கது. மறையவர் விசேடமாய்
வாழும் பதி. இங்கு உருத்திரபசுபதி நாயனார் உட்புக்கு உருத்திரஞ்
செபித்ததாக வழங்கும் திருக்குளமும் உண்டு. மறையவர்களால் அவரது
திருவிழா அத்திருக்குளத்திற் கொண்டாடப்படுகின்றது. ஆலயத்தில்
நாயனாரது பழந் திருவுருவம் உள்ளது. நாயனார் பெயரால் திருமடமும்
உண்டு.
|