8.
எறிபத்தநாயனார் புராணம்
|
தொகை
"இலைமலிந்த
வேனம்பி யெறிபத்தர்க் கடியேன்"
-திருத்தொண்டத்தொகை.
வகை
"ஊர்மதின்
மூன்றட்ட வுத்தமர்க் கென்றோ ருயர்தவத்தோன்
றார்மலர் கொய்யா வருபவன் றண்டின் மலர்பறித்த
வூர்மலை மேற்கொளும் பாக ருடறுணி யாக்குமவ
னேர்மலி மாமதில் சூழ்கரு வூரி லெறிபத்தனே"
-திருத்தொண்டர்
திருவந்தாதி.
|
விரி
551.
|
மல்லனீர்
ஞாலந் தன்னுண் மழவிடை யுடையா னன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை யுற்றிடத் துதவு நீரா
ரெல்லையில் புகழின் மிக்க வெறிபத்தர் பெருமை யெம்மாற்
சொல்லலாம் படித்தன் றேனு மாசையாற் சொல்ல லுற்றாம். 1
|
இலைமலிந்த
சருக்கம் :- திருத்தொண்டத்தொகையில் ‘இலைமலிந்த'
என்று தொடங்கும் திருப்பாட்டிற் கூறிய எறிபத்தர் - ஏனாதிநாதர் -
கண்ணப்பர் - கலயர் - கஞ்சாறர் - தாயர் - ஆனாயர் என்ற அடியார்களது
சரிதங் கூறும் பகுதி. இம்முறையே இச்சருக்கத்து முதலில் ஆசிரியர் எறிபத்த
நாயனார் புராணங் கூறத்தொடங்குகின்றார்.
எறிபத்த
நாயனார் புராணம் :- அவ்வெழுவருள்ளே எறிபத்த
நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி.
தொகை
:- இலைவடிவினதாய்ப் புகழ்மலிந்த மழுவாயுதத்தை எந்திய
நம்பியாகிய எறிபத்த நாயனார்க்கு நான் அடியேனாவேன்.
இலைமலிந்த
- வேலுக்கு அடைமொழி. இலைவேல் எனக் கூட்டுக.
வேல் - ஆயுதப் பொதுப்பெயர். ஈண்டு மழுவைக் குறித்தது. நம்பி
-
புருடரிற் சிறந்தோன்.
எறிபத்தர்
- காரணங் குறித்து வந்த பெயரென்பர். அடியார்க்கு உறும்
இடரைப் பரசு எறிந்து தீர்க்கும் வகையால் இறைவனிடத்துப் பத்திசெய்பவர்
என்பது பொருள். தமது இயற்பெயரும் மரபும் முதலிய பிறவரலாறுகளால்
விளங்காது பத்திச் செயலால் மட்டில் விளங்கிய பெருந்தொண்டர் என்க.
அவர் ஏந்திய படையும் அது கொண்டு தொண்டு செய்து பேறு பெற்றமையும்
பெயரும் தொகை நூலிற் கூறியபடி.
வகை
:- ஊர்மதில் மூன்று - பறந்து
செல்லுமியல்புடைய, மதில்
சூழ்ந்த மூன்று நகரங்கள்; திரிபுரங்கள். ஊர்மதில்
- வினைத்தொகை.
இருப்புமதில் - வெள்ளிமதில் - பொன்மதில் என்பவற்றாற் சூழப்பட்டவை
இம்மூன்று புரங்கள் என்பர். மதில் ஊர் மூன்று என மாற்றி உரைத்தலுமாம்.
அட்ட உத்தமர் - சிவபெருமான். இங்குக் கருவூர்த்
திருவானிலையில்
எழுந்தருளிய பசுபதீசரைக் குறித்தது. அட்டது அருள் என்பது.
மாதவத்தோன்- சிவகாமியாண்டார். பூப்பறித்துச் சாத்துதல்
மாதவமெனப்பட்டது. "தவமுயல்வோர் மலர்பறிப்ப" என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரங் காண்க. சரியையாதிகள் தவமெனப்படும்.
|