யெறிந்து ஆளுடைத்
தொண்டர் செய்த ஆண்மையும் (606), இன்னுமோர்
அன்பர்க்காக வாளினைத் தம் கழுத்திற் பூட்டி அரிந்திடலுற்ற நேர்மையும்
(596) முதலிய பல புகழ்களும் அடங்க எல்லையில் புகழ்
என்றார். இது
கொண்டன்றே "இலைமலிந்த வேல் நம்பி" என்று தேற்றம்பெறக் கூறியது
திருத்தொண்டத்தொகை.
ஆசையால்
- அதனைச் சொல்லவேண்டும் என்னும் விருப்பத்தால்.
ஆசை மிக்க போது இது இயலுமோ? இயலாதோ என்று பாராது
இயலாதாயினும் அதில் முயலச் செய்யும். "ஆசை வெட்கமறியாது" என்பது
பழமொழி. ஆயின் இவ்வாசை விலக்கி ஒதுக்கித் தள்ளத்தக்க பிற ஆசைகள்
போலாது ஆன்றோர்கள் விரும்பி மேற்கொள்ளத் தக்கதாகலின் ஆசையாற்
சொல்லலுற்றேன் என்றார் ஆசிரியர். "நின் பழவடியார்
கூட்டம் அத்தா!
காண ஆசைப் பட்டேன் கண்டாயம்மானே" என்பது
திருவாசகம்.
இவ்வாசைதானும் உலகத்தை வழிப்படுத்தும் அருள் நோக்கத்துடன்
எழுந்தமையும், "இவ்வுலகத்து மாக்கள் சிந்தையுட் சார்ந்துநின்ற பொங்கிய
இருளைப்" போக்கும் என்று பாயிரத்துரைத்தமையும், பிறவும் உன்னுக.
என்னால்
- சொல்லலுற்றேன் - என்பனவும் பாடங்கள். 1
552.
|
பொன்மலைப்
புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப்
போற்று
மந்நெறி வழியே யாக வயல்வழி யடைத்த சோழன்
மன்னிய வநபா யன்சீர் மரபின்மா நகர மாகுந்
தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி முதூர். 2 |
(இ-ள்.)
வெளிப்படை. பழைமையாகிய நெடிய கருவூர் என்று
சொல்லப்பெறும் ஒளியும் அழகுமுடைய வீதிகளோடு கூடிய பழைய ஊர்,
வெற்றியின் அடையாளமாக இமயமலையினுச்சியில் புலிக்கொடி ஓங்கி நிற்க,
அம்மலையினை இடித்துக் காவல் பொருந்தும்படி அமைத்த புதிய வழியே
வழியாய் வழங்க ஏனை வழிகளை யடைத்த, கரிகாற் சோழர் முதல்
அநபாயச் சோழர் வரை சிறப்பில் நிலைபெற்ற முடிசூட்டு மரபின்வரும்
தலைநகரங்களில் ஒன்றாகும்.
(வி-ரை.)
கருவூர் என்னும் மூதூர் - சோழன் - அநபாயன் -
சீர்மன்னிய - மரபின் மாநகரமாகும் என மாற்றிப் பொழிப்புரைத்துக்கொள்க.
பொன்மலை -
இமயமலையையும் பொன்மலை என்பர். "பொன்னின்
வெண்டிரு நீறுபுனைந்தெனப், பன்னு நீள் பனி மால்வரை" (11) என்று
உவமை முகத்தால் முன்னர் உரைத்தது காண்க. இமயத்துச்சி வரை
சோழர்கள் தமது அரசு நடாத்தி இமயத்துச்சியிற் புலிக்கொடி நாட்டிய
செய்தி நம் பழந்தமிழ் நூல்களானும், பிற சரித்திர ஆதரவுகளானும்
பெறப்பட்ட செய்தியாம். இதுபற்றிக் "கோட்டுயர் பனிவரைக் குன்றினுச்சியிற்
சூட்டிய வளர்புலிச் சோழர்" (51) என்ற இடத்துக் கூறியவையுங் காண்க.
இவ்வாறு முதலிற் செய்தவர் கரிகாற்சோழர் என்ப. "பொன்னிமயக் கோட்டுப்
புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்"
(சிலப் - 17 - ஆய்ச் - உள்வரி - 2) என்றது காண்க.
சோழன்
அநபாயன் சீர்மன்னிய என்றது புலிக்கொடி பொறித்த
சோழர் முதல் நீடித்து நிகழ்காலத்து அநபாயர்வரை சிறப்பால் நிலைபெற்று
வருகின்ற என்றதாம். மரபின் முந்தையோர் புகழொடு புணர்த்திப்
பின்வருவாரைக் கூறுதல் கவியியல்பென்க. "துலையிற் புறவி னிறையளித்த
சோழர்" என்பதும் பிறவும் காண்க. இவ்வாறன்றி மூதாதையர்செயலை
அநபாயருக்கே ஏற்றிப் புகழ்ந்தார் என்றுரைகொள்வாருமுளர். முன்னர்
வளர்புலிச் சோழர் என்றபடி இங்கும் சீர்மன்னிய
என்று கூறியது காண்க.
சீரால் மன்னிய என்று விரித்துரைக்க.
வென்று
பொன்மலை புலி ஓங்க என்க. வென்று
- வென்றதனாலே.
புலி பொன்மலையில் ஓங்குதற் குளதாய காரணங் கூறியவாறு.
புலிநின்
றோங்க என்று
|