சடையவர்
பொற்றாளில் ஆனாத காதல் அன்பர் - முன்னர்
எம்பிரான் அன்பரான என்ற விடத்துக் கூறியவை
காண்க.
வானாளுந்
தேவர் - பெருந் தேவர்களான இந்திரன், பிரமன்,
மால் முதலியோர். இவர்கள் சிவபெருமா னருள்வழி நின்று வானுலகங்கள்
ஒவ்வொன்றின் ஆட்சி புரிவோர். ஆதலின் ஆளும் என்றார்.
போற்றும்
- போற்றும் மன்று எனவும், போற்றும் மன்றுளார் எனவும்,
போற்றும் நீறு எனவும் கூட்டியுரைக்க நின்றது. "வானவர் மேலது நீறு"
முதலிய திருவாக்குக்கள் காண்க. போற்றும் மன்று -
"தில்லையுட் செம்
பொன்னம்பலம் போற்றி" முதலிய திருவாக்குக்களானறிக.
நீறு
போற்றும் - தம்முயிரினுஞ் சிறந்த பொருளாக எஞ்ஞான்றும்
திருநீற்றின் மேல் வைத்த அன்பினைக் காப்பாற்றும், இஃது இவர் சரிதத்திற்
போந்த உள்ளுறையாதல் காண்க. வானாளுந் தேவர்கள் தவஞ்செய்து அமுத
முண்டும் இறத்தல் பிறத்தலாதி துன்பங்களுக் காளாகி யுழல்கின்றார். அது
நீங்க ஒரோவழித் துதிப்பர். ஆயின் ஏனாதி நாயனார் திருநீறு
போற்றியதனாலே இறைவன் திருவருளாற் பாசமறப் பெற்று என்றும் பிரியா
அன்பினை பெற்றார் என்ற அவர் சரித முடிபினை (649) இங்குத்
தோற்றுவாய் செய்து இந்நினைவுடனே நாம் இச்சரிதத்திற் பயிலுமாறு
குறித்துக் காட்டினர். எறிபத்த நாயனார் சரித உள்ளுறை அன்பர் பணியாம்;
அஃது அவர் செய்த ஆண்மையால் விளங்குவது என்ற பயனை மேற்பாட்டில்
வடித்துக் காட்டிய ஆசிரியர் இங்கு அதற்கு அடி நிலையானது அரன்பாற்
காதலன்பாம் என்பார் தாளில் ஆனாதகாதல்
என எடுத்து முடிந்த
முடிபாகக் காட்டினார்.
அடிகள்
போற்றி - செய்த திருப்பணி - என்பனவும் பாடங்கள்.
57
சரிதச்
சுருக்கம் :- அநபாயரது மரபினராகிய சோழர்களது
தலைநகரங்களில் ஒன்று கருவூர் என்ற செழிப்புடைய பழவூராகும். இதில்
இறைவன் பசுபதீசர் என்ற திருப்பேருடன் திருக்கோயில்
கொண்டெழுந்தருளி யுள்ளார். அக்கோயில் திருவானிலை
என்ற பெயர்
பெறும். இக்கோயிலில் நியதியாக இறைவரை வழிபட்டு அடியார்களுக்குத்
தொண்டு செய்து வருபவர் எறிபத்த நாயனார். அவர்
உலகிலே சைவம்
ஓங்கும்படியாகிய ஒழுக்கமுடையார். அடியார்களுக்கு வரக்கூடாத
இடையூறுகள் நேர்ந்த போது சிங்கம்போலத் தோன்றி அவ்விடையூற்றினை
நீக்கும் மழுவாயுதத்தை ஏந்தி வருவார்.
இத்
திருநகரிலே இறைவருக்கு விதிப்படி பூப்பறித்து மாலை சாத்தும்
திண்ணியஅன்பு கூர்ந்த சிவகாமி யாண்டார் என்ற
புண்ணிய மறைமுனிவர்
ஒருவர் உளராயினர், அவர் தம்வழக்கப்படி ஒருநாள் வைகறை எழுந்து,
நீர்முழுகி, வாய்கட்டி, நந்தனவனஞ் சென்று, இறைவனுக்கான அன்றலர்ந்த
பூக்களைக் கைப்பழக்கத்தாற் றெரிந்து, கொய்து, பூங்கூடை நிறைத்து,
அதனைக்கோலிற்றாங்கி மிக்க அன்போடு திருவானிலையாருக்குச்
சாத்துங்காலை உதவ வேண்டி விரைய வாராநின்றார். அந்நாள் மகாநவமியின்
முன்னாளாம். அன்று புகழ்ச்சோழனாரது பட்டவர்த்தனம் என்னும் பட்டத்து
யானை மங்கல விழாக்கொண்டு நதித்துறை நீராடி மிக்க களிப்புடன் மதம்
பொழியச் சென்று ஓரு தெருவில் முட்டியது. அதன்மேல் நின்று கடவிய
பாகர் இருவர். பக்கங்களினும் முன்னும் ஓடி அதனை நன்கு செலுத்தும்
பரிக்கோற்காரர் மூவர்.
இவ்வாறு
சென்ற அந்த யானை அத்தெருவில் முன் சென்று
கொண்டிருந்த சிவகாமியாண்டாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் கையிற்
கோலிற்றூங்கிய பூக்கூடையைப் பறித்துக் கீழே சிந்தியது. அது தணகண்டு
பாகர் அதனைக் காற்றினுங் கடிதாகச் செலுத்திப் போயினர். சிவகாமியார்
பதைத்துப் பொங்கி, யானைபின் போய்த் டினாலே அதனை அடிக்க வந்தார்.
|