9.
ஏனாதிநாத நாயனார் புராணம்
|
தொகை
"ஏனாதிநாதன்ற
னடியார்க்கு மடியேன்"
-
திருத்தொண்டத்தொகை
வகை
பத்தனை யேனாதி
நாதனைப் பார்நீ டெயினைதன்னு
ளத்தனைத் தன்னோ டமர்மலைந் தானெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளு
நித்தனை யீழக் குலதீபனென்பரிந்
நீணிலத்தே
-
திருத்தொண்டர் திருவந்தாதி
|
விரி
608.
|
புண்டரிகம்
பொன்வரைமே லேற்றிப் புவியளிக்குந்
தண்டரள வெண்கவிகைத் தார்வளவர் சோணாட்டில்
வண்டறைபூஞ் சோலை வயன்மருதத் தண்பணைசூழ்ந்
தெண்டிசையு மேறியசீர் மூதூ ரெயினனூர். 1 |
புராணம்:
- ஏனாதிநாதர் என்ற பெயருடைய நாயனாரது
சரிதவரலாறும் பண்புங்கூறும் பகுதி. நிறுத்த முறையானே இலைமலிந்த
சருக்கத்தில் இரண்டாவதாய் ஏனாதிநாத நாயனாரது சரிதங் கூறத்
தொடங்குகின்றார்.
தொகை:-
ஏனாதிநாதநாயனாருடைய அடியவர்க்கு
நான்
அடியேனாவேன்.
வகை:-
பத்தரும், ஏனாதிநாதர் என்ற பேருடையவரும், உலகத்தில்
நீடிய எயினனூரின் அத்தராகியவரும், தம்முடன் அமர் செய்தானது
நெற்றியில் திருநீற்றினைக் கண்டதனாலே தாம் முன்னர் அவனைக் கொல்ல
ஏந்திய வாளினை (ப் பயன்படுத்தாது விட்டதனோடு) எறிந்துவிடாமல் நின்று
அவன் நினைந்த படியே தம்மைச்செய்யும்படி நின்றருள்கின்ற நித்தரும்
ஆகிய பெரியாரை இப் பெரிய உலகத்தே ஈழக்குலச் சான்றவர் என்று
சொல்வர்.
முதனூல் நாயனாரது
பெயர் கூறிற்று. வகை நூல் அவரது பண்பும்,
ஊரும், பேரும், குலமும், வரலாறும் கூறிற்று. இவை விரிந்த வகை
விரிநூலினுட் கண்டு கொள்க.
எயினை
- எயினனூர், வீடொழிந்து -
விடுவதை யொழிந்து, வீடு -
பகுதி முதனீண்ட முதனிலைத் தொழிற் பெயர். இரண்டாம் வேற்றுமைத்
தொகை. கைவிடாமல் என்றபடி. வாளினால் அமர்செய்ய நின்றவர் அது
செய்யாது நின்றார்; அதனோடொழியாது வாளினை விடாமல் மலைவார்போல்
- நின்றார்; நெற்றியில் நீறு கண்டதனால் அவ்வாறு நின்றார்; அவன் தம்மைக்
கண்டிக்குமிறுதிவரை நின்றார்; நிராயுதரைக் கொன்றானெனும் தீமை அவனுக்
கெய்தாமை வேண்டுமென்னு மருளால் நின்றார் - என இச்சரித நிகழ்ச்சி
பலவும் உட்கொண்டுணர
|