யாவர்க்குங் கடன்.
அதனினும் அரசரிடத்து அக்கடமை மிகப் பெரிது.
121 - ம் பாட்டிற் கூறியன இங்குக் காண்க. மேலும் இப்பிழைகள்
சிவாபராதமாயினபோது பெரிதும் அஞ்சித் தம் உயிரையும் அதற்கீடாகக்
கொடுக்க முற்படுவது பேரன்பர்களின் தன்மை.
(16) சிவப்பணிவிடையிலும்
அடியார் பணிவிடையிலும் பயன்படுகின்ற
கருவிகள் மங்கலமுடையன. அவற்றாற் றண்டிக்கப்படுவோர்
புனிதமுடையோர். அடியவர்களை எதிர்கொள்ளுங்கால் எடுத்தேந்தப்படும்
ஏனைய மங்கலங்களுடன் சேர்த்துத் திருக்கோயிற் றிருவலகு முதலியனவும்
மங்கலப் பொருள்களாய் ஏந்தப் பெற்ற சிறப்பும் காணத் தக்கதாம்.
(17) அன்பர்களது
மனத்தில் அவர்க்கு ஊறு செய்வதாக ஓர் எண்ணம்
உண்டாக்கத்தக்க செகை
ஒருவர்செய்தல், அவ்வாறு தாம் நினையாது
செய்யினும் பெரும் பாவமாம்.
(18) அடியார்கள்
செய்யும் உண்மைப் பணிவிடைக்கு
இடையூறுபோலநேர்வன யாவும் இறைவனதருள்வழி நேர்வனவாம். அவற்றை
இறைவன் முன்னின்று தீர்ப்பன்.
(19)
அடியார்களின் அன்பு அளவிடப்படாது. "அம்பலநிறைந்தார்
தொண்ட ரறிவதற் கறியார்." "அளவிலாத பெருமையர்." "நீண்டதொல்புகழார்."
(20) அடியார்
பெருமைகளை அவர்க்கருளும் நம்பர் தாமே
அளக்கிலன்றி வேறு எவரும் அளக்கும் வலியிலர்.
(21) கொலை,
களவு முதலியன தீயனவாம் என்பது நீதி நூல், சமய
நூல், உலக நூல்களின் விதி. ஆயின் அவற்றின் கருத்து நோக்காது
எல்லாவிடத்தும் அவை தீயன என்று கொள்ளுதல் அமையாது.
சிவத்திருத்தொண்டுக்கு இடையூறு செய்தாரைக் கொல்லுதல் பெரு நூல்களில்
விதித்ததேயாம். இங்குக் கொலை தீமையாகாது சிவ புண்ணியமாமென்பது.
என்னை? திருத்தொண்டுக்கு அவ்வாறு இடர் செய்தார் மறுமையிற் கொடிய
நரகத்துன்ப மடையாதபடி அது காக்கும்; இவரைக் கண்டு பிறரும் இடர்
செய்து கெடாதபடி காக்கும்; பணி விடையில் நேரும் இடையூறு கண்டு,
முதிர்ந்த அன்பு பெறாதோர். பயந்து தொண்டு செய்யாது காலங் கழியாதபடி
காக்குமாதலினென்க. உலக நூலிலும் கொலைசெய்தார்க்குக் கொலைத்
தண்டம் விதித்தல் இக்கருத்துப் பற்றியதேயாம். "கொலையிற்கொடியாரை
வேந்தொறுத்தல் பைங்கூழ், களை கட்டதனொடு நேர்" திருக்குறள். பிற
உயிர்களைப் பொருளாசை முதலிய காரணம்பற்றிக் கொலைசெய்வோர்,
களவுசெய்வோர் முதலிய கொடியவர்களினும் அடியார் தொண்டுக்கிடர்
புரிவோர் பெரும்பாவிகள்
என்பது உண்மை நூற்றுணிபு.
எறிபத்தநாயனார்
புராணம் முற்றும்
|