பக்கம் எண் :


எறிபத்தநாயனார்புராணம்769

 

     (4) மகாநவமியில் நாடு விழாக்கொண்டாடுதல் சிறப்புத் தரும்.

     (5) விலங்கு முதலிய குறைந்த அறிவுடைய பிராணிகளேயாயினும்
சிவாபராதஞ் செய்தல் தீது. அவ்வாறு செய்யின் அவையுந் தண்டிக்கப்பட்டுச்
சீராக்கற்பாலன. அவை அவ்வாறு செய்யாது காத்தல் அவற்றைச்
செலுத்துவோர் கடமை. அக்கடமையினின்றும் வழுவுதல் சிவாபராதமும்
பெருந்தண்டனைக்குள்ளாகும் பெரும் பாவமுமாம். குறைந்த அறிவுடைய
பிராணிகளைக் காப்போரும் அவற்றை உடையோரும் அவற்றால் நேரும்
ஏதங்களுக்குப் பொறுப்புடையோர் என்பது இந்நாட் குற்றத்தண்ட நீதியினும்
விதித்தது.

     (6) தாம்செய்யும் சிவப்பணிவிடைகளுக்கு இடையூறு நேர்ந்தபோது
சிவனிடத்தே முறையிடுவது பெரியோர் செய்கை.

     (7) யானை சிவனடியார்களுக்கு வழிப்பகை. கோச்செங்கட்சோழ
நாயனார் சரிதமும் உன்னுக.

     (8) தம்மால் அன்பு செய்யப்பட்டார்க்குக் கெடுதி நேருங்கால், அதனை
விலக்க முற்படுவதில் தமக்கு எவ்வகைப் பெருங்கேடு வருவதாயினும்
அஞ்சாது மேற்சென்று காவல் புரிவது தலையன்புடையோர் தன்மை. தாயினது
தலையன் பின் முன்பு அச்சம் நிற்குமோ? நில்லாது.

     (9) சிவனது திருவடிச் சார்பு பெற்ற உறைப்பினாலே சிவனடியார்கள்
பெரு வீர முடையார். அஞ்சாநெஞ்சுடன் எதையுஞ் செய்யவல்லவராவர்.
"வானந் துளங்கிலென்? ............ஒருவனுக்காட்பட்டவுத்தமர்க்கே" என்பது
அப்பர் சுவாமிகள் திருவிருத்தம். அவர்கள் தமது செயலைக் கூறும்
சொல்லும் வீரமுடையன. 590 - 591 - வீரச்சுவை காண்க.

     (10) பெருங் கோபத்தால் விழுங்கப்பட்டார், தீரவிசாரிக்கும்
மனநேர்மையை யிழப்பார். "காய்த் லுவத்த லகற்றி யொருபொருட்கண்,
ஆய்தலறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண், உற்ற குணந்தோன்றா தாகு
முவப்பதன்கட், குற்றமுந் தோன்றாக் கெடும்" என்பது நீதிநூல். மிக்க
கோபத்தினைப் போலவே மிக்க மகிழ்ச்சியினையும் தம் துள்ளங் கவர்ந்து
மேலெழாதபடி காத்தல் அறிவு பெற்ற பயன்.

     (11) மன்னன் குறிப்பின்வழி ஒழுகி உலகங் காத்தலில் அமைதல்தந்திரத்
தலைவர் கடன்.

     (12) சிவனடியார்களான அன்பர்கள் குணமிக்கவர்கள்;
பிழைகாணிலல்லது வெகுளி கொள்ளார்; பிறவுயிர்க்ளுக்குத் தண்டமுஞ்
செய்யார்.

     (13) தம்மா லன்புசெய்யப்பட்ட அடியார்களைக் கண்டபோது தாம்
அன்பு கொண்ட ஏனை உலகப் பொருள் எவையேயாயினும் அவற்றின்மேல்
வைத்த காதலினும் பன்மடங்கு காதல் பெருகுதல் உண்மையன்பர் தன்மை.

     (14) தாம் அன்பு வைத்த பொருள் வேறு எதுவேயாயினும் அதனுக்கு
ஓர்சிவனடியாரால் ஊறு நேரக்காணில் பிழை தம் பொருளின்மேலதே என்று
கொண்டு அஞ்சுதல் உண்மையன்பர் தன்மை. தமது பெருந்தேவியின்
மூக்கினைச் செருத்துணையார் வார்ந்தனர் என்று தெரிந்தபோது அரசராகிய
சுழற்சிங்கதேவர் தேவியாரது கைதடிந்த செயலையும் இங்கு வைத்துக் காண்க.

     (15) தம்முடையப் பொருள்களாற் பிறருக்கு ஏதம் நேரிடா வண்ணங்
காத்தலும், அவ்வாறு நேர்ந்தவழி அதற்குத் தாமும் பொறுப்பேற்றலும்