சூழ்ந்து
- சூழப்பட்டு.
எண்திசையும்
ஏறிய சீர் - எல்லாத் திசைகளிலுமுள்ளார்க்கும் இறை
திரு நீற்றின் சிறப்பினை எடுத்துக்காட்டி வழிபடுத்தும் சிறப்பு. ஏறிய
- எண்திசையுள்ளாரும் ஏறுதற்கு - அறிந்து உய்வதற்குக் - காரணமாகிய
சிறப்பு என்றலுமாம்.
எயின்மூதூர்
- என்பதும் பாடம். 1
609.
|
வேழக்
கரும்பினொடு மென்கரும்பு தண்வயலிற்
றாழக் கதிர்ச்சாலி தானோங்குந் தன்மையதாய்
வாழக் குடிதழைத்து மன்னியவப் பொற்பதியி
லீழக் குலச் சான்றா ரேனாதி நாதனார். 2
|
(இ-ள்.) வெளிப்படை. குளிர்ச்சி பொருந்திய வயல்களில்
நாணற்கரும்பினோடு மென்கரும்பும் தாழும்படி கதிர்ச்சாலிதான் ஓங்கிவளரும்
தன்மையுடையதாக (அதனால்) வாழ்வு பெறும்படி பெருங்குடிகள் தழைத்து
நிலைபெற்ற அந்த அழகிய நகரிலே ஈழக்குலச்சான்றார்
மரபிலே வந்தவர்
ஏனாதிநாதனார் என்ற பெரியார்.
(வி-ரை.)
வேழக்கரும்பு - மென்கரும்பு - கரும்புவகைகள்.
வேழக்கரும்பு - நாணற்கரும்பு என்று வழங்குவர்.
இவை கடினமான
தண்டுடையனவாம். நரி முதலிய பிராணிகள் நாசம் செய்யக்கூடாதனவாகி
நாணல் போன்ற சிறிய தண்டுடையன. இவற்றின் கடினத்தன்மையைக்
"கருஞ்சகட மிளகவளர் கரும்பு" (மேகராகக் குறிஞ்சி - திருக்கழுமலம் 6)
என்றருளினர் ஆளுடைய பிள்ளையார். மென்கரும்பு -
மெல்லிய
கரும்புவகை. இவற்றின் மேல்பாகம் இலகுவில் உடைந்து சாறுதரக்கூடியன;
இவை சாறுமிகவுடையன; இவற்றைச் சாறுபிழிந்து பயன்படுத்துதலோடு
மக்கள் நேரே பல்லினாற் கடித்தும் உண்டு சுவைப்பர். மென்
என்றது
இலகுவில் உடைத்துச் சாறுபெறுதற்குற்ற மென்மைத் தன்மை குறித்தது.
"விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள் - கரும்பு தேன் பொழியுங்
கணமங்கலம்" (அரிவாட்டாயர் - புரா - 1) என்றது காண்க. மென் கரும்பை
ஒடு விகுதி தந்து வேழக்கரும்பினைச்சார வைத்தது பெரும்பான்மை
இந்நாட்டின் இவ்வகையே மிகும் சிறப்புப்பற்றி. கரும்பின் வகை
விசேடங்களைப் பயிர் நூலுடையார் பாற்றெரிக.
தண்வயலில்
- வயன்
மருதத்தண்பணை என்று மேற்பாட்டிற்
கூறியதனையே தொடர்ந்து குறித்தபடி.
கரும்புதாழக்
கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மை -
கரும்புதாழும்படி நெல் ஓங்குவன. கரும்பல்ல நெல்லென்ன (65) என்ற
பாட்டில் உரைத்தவற்றை நினைவுகூர்க. நிந்தையணி, கதிர்ச்சாலி
-
விட்டபருவத்துள்ள நெற்பயிர். இவை தழைத்தோங்கி நிமிர்ந்து பரந்து
நிற்கும் இயல்புடையன; நீர் - நிலம் - உரம் - விதை வலிமை - முதலிய
வளங்களால் சாலியின் தண்டுகள் பருத்து நிமிர்ந்து மென்கரும்பின் றண்டு
போல்வன. நெல்லும் கரும்பும் இந்நாட்டு வயல்களில் அடுத்துக்காண
உள்ளன. இரண்டும் மருதத்துக்குரியன. நெல் நிமிர்ந்து கதிருடன் நிற்கும்
பருவத்தே கரும்பு சாய்ந்து கிடக்கும் காட்சியினாலே கரும்பு
தாழச் சாலி
ஓங்கும் தன்மையதாய் என்றார். தாழ -
வீழ்ந்து தாழ்ந்து கிடக்க என்றும்,
குறைந்து காட்ட என்றும் இருபொருளும்பட வைத்த தன்மைநவிற்சியணியின்
அழகு காண்க. நெல் இன்றியமையாத உணவுப் பொருளாதலும், கரும்பு
அவ்வாறன்றி உருசிவேண்டுவார்க்கு அமுதுக்கு உருசிதரும் அறுவகையினுள்
ஒன்றாகி ஒரோ வழி வேண்டப்படுதலின் அத்துணைச் சிறப்பில்லாது
அதனினும் தாழ்தலும், அதனால் மேலே மிகுதலும் குறித்த நாயமும்
காண்க. மேற்பாட்டில் வயன்மருதம் - என்றார்.
இங்கு வயலின்
விளைபொருள்களுள் உயர்ந்த இருவளங்கள் கூறினார். வலிய கரும்பு
தாழ மெல்லிய சாலி ஓங்கும்.
|