| வெயிலணிபன் மணிமுதலாம் விழுப்பொருளா வனவிளக்கும் தயிலவினைத் தொழின்மரபிற் சக்கரப்பா டித்தெருவு 5 |
(இ-ள்) எயிலணையும்.....பதியதன்கண் - மதில்களை அணைகின்ற மேகங்களின் ஓசையும், எறிகின்ற அலைகளையுடைய கடலினது ஓசையும், பயிலப்படுகின்ற பல இயங்களின் ஓசையும், ஆகிய இவைகூடிப் பிரித்தறிய முடியாதபடி சத்திக்கின்ற அப்பதியில்; தயிலவினை.......சக்கரப்பாடித் தெருவு - எண்ணெய் ஆட்டும் செக்குத் தொழிலுடைய மரபினர் வாழ்கின்ற சக்கரப்பாடித் தெரு என்பது; வெயிலணி...விளக்கும் - ஒளி வீசுகின்ற பலவகை மணி முதலாகிய தூய பொருள்கள் விளக்குந் தன்மையுடையது. |
(வி-ரை) பொருள் - தெரு - விளக்கும் என்று கூட்டுக. |
முறை தெரியா - மூன்று முழக்கங்களும் இவை இன்னவென வேற்றுமை காண முடியாத நிலை. |
விழுப்பொருளாவன - பொருள், தெருவு விளக்குதலாவது அவ்விழுப்பொருள்கள் வீசும் ஒளியினால் தெரு விளங்குதல். இத்தெருவில் வாழ்வோரது செல்வநிலை; அத்தெருவில் தயிலவினையாளர் வைக்கும் பெருவிளக்குகளால் அப்பொருள்கள் இரவினும் விளக்கம் வெபறுவன என்பதுமாம். தயிலவினைத் தொழிலாவது செக்கு உழன்று எண்ணெய் எடுத்து விற்கும் செக்கார் என்னும் மரபின் குலத்தொழில். (செக்கார் - செக்கின் றொழிலுடையவர்) |
சக்கரப்பாடி - சக்கர எந்திரத்தாற் றொழில் செய்து வாழும்மரபினர் வாழுமிடம். சக்கிரி - செக்கான் - செக்கையுடையவர் என்பது நிகண்டு. |
5 |
4027. | அக்குலத்தின் செய்தவத்தா லவனிமிசை யவதரித்தார் மிக்கபெருஞ் செல்வத்து மீக்கூர விளங்கினார்; தக்கபுகழ்க் கலியனா ரெனுநாமந் தலைநின்றார்; முக்கணிறை வர்க்குரிமைத் திருத்தொண்டி னெறிமுயல்வார்; 6 |
4028. | எல்லையில்பல் கோடிதனத் திறைவரா யிப்படித்தாம் செல்வநெறிப் பயனறிந்து திருவொற்றி யூரமர்ந்த கொல்லைமழ விடையார்தங் கோயிலினுள் ளும்புறம்பும் அல்லுநெடும் பகலுமிடுந் திருவிளக்கி னணிவிளைத்தார். 7 |
4027. (இ-ள்) அக்குலத்தின்......அவதரித்த அந்தக் குலம் செய்த முன்னைத் தவத்தின் பயனாக அதில் வந்து அவதரித்தார்; மிக்க....விளங்கினார் - மிகுந்த பெரியசைவத்தில் மேலோங்க விளங்கினார்; தக்க....தலை நின்றார் - தகுதியாகிய கலியனார் என்னும் பெயர் பூண்டு சிறந்து நின்றார்; முக்கண்.....முயல்வார் - மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு உரிமையாகிய திருத்தொண்டின் நெறியிலே ஒழுகுவாராகி; |
4028. (இ-ள்) எல்லையில்.....இறைவராய் -அளவற்றதாகிய பலகோடி செல்வத்துக்கு அதிபராகி; இப்படித்தாம்.....அறிந்து - இத்தன்மைத்தாகிய செல்வம் வந்த வழியின் பயனை அறிந்து; திருவொற்றியூரமர்ந்த - விளைத்தார். - திருவொற்றியூரில் விரும்பி எழுந்தருளிய கொல்லை யிள விடையினையுடைய இறை |