பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்304

     மண்டபங்கள் - கோயிலி னுள்ளும் புறம்பும் இறைவரது விழா முதலியவற்றுக்கு
ஆகும் பயன்பற்றி அமைக்கப்படும் இடங்கள்; இவை இந்நாளில் பல பதிகளிலும்
பாழாய்க் கிடத்தலும், அன்றி வியாபார இடங்களாகக் கடைப்படுத்தப் படுதலுமே
காண்கின்றோம். இவற்றைத் தேவாரப் பயிற்சி, வேதப் பயிற்சி புராணப் படிப்பு முதலிய
சமய ஒழுக்க நிலைக்களங்களாகப் பயன்படுத்தினால் அவற்றுக்குச் சாதனமாக
உதவுவதுடன், அவற்றுக்கு வேறிடம் தேடும் நிலையும் உண்டாகாது. திருவொற்றியூரில்
கோயில் சார்பாக கோயில் மண்டபத்துப் புராணம் வாசிக்கப்பட்டு வந்ததென்று
கல்வெட்டுக்களாலறிகின்றோம். பன்னுதல் - பலவாறும் எடுத்துச் சொல்லுதல். பதிக
இசை
- தேவார திருவாசகப் பதிகங்கள்.
 

     தூரியம் - பலவகையால் பெரியனவும் சிறியனவுமாகிய இயங்கள். தூரிய
முழங்கு விழவு
- விழாக்களில் பலவகை இயங்கள் முழக்குதல் வழக்கு. விழவு -
இறைவனது திருவிழாக்கள்.
 

     செந்நெல் - செந்நெல்லரிசியா லமைக்கப்பட்ட ; அடிசிற் பிறங்கல் - அன்னம்
மலை போன்று குவிக்கப்பட்டன என்பது.
 
     திருமடங்கள் - அன்ன சாலைகள்.
 
     மண்டபத்துள் - என்பதும் பாடம்.                           3
 
4025. கெழுமலர்மா தவிபுன்னை கிளைஞாழ றளையவிழுங்
கொழுமுகைய சண்பகங்கள் குளி்ர்செருந்தி வளர்கைதை
முழுமணமே முந்நீருங் கமழமலர் முருகுயிர்க்கும்;
செழுநிலவின் றுகளனைய மணற்பரப்பின் றிருப்பரப்பு.           4
 
     (இ-ள்) கெழுமலர்.......கைதை - நிறைந்த மலர்களையுடைய குருக்கத்தியும்,
புன்னையும், கிளைத்து வளரும் குங்குமமரங்களும், இதழ்கள் அவிழ்கின்ற செழித்த
முகைகளையுடைய சண்பக மரங்களும், குளிர்ந்த செருந்தியும், வளரும் தாழைகளும்
என்ற இம் மரங்கள்; முழுமணமே.....கமழ - கடல் நீரும் முழுமணமே வீச; மலர் முருகு
உயிர்க்கும் - தத்தம் மலர்களின் வாசனையைத் தருவன; செழுநிலவின்...பரப்பு -
செழுவிய சந்திரிகையைத் தூளாக ஆக்கியது போன்று விளங்குவன மணற்பரப்பினது
திருவுடைய பரந்த பண்புகள்.
 
     (வி-ரை) மாதவி - குருக்கத்தி; ஞாழல் - குங்குமமரம்; புலிநகக்
கொன்றையுமாம்; கிளை - சிறு செடியாக பல கிளைகளாகக் கிளைத்து வரும் இயல்பு
குறித்தது.
 
     தளை அவிழும் - இதழ்கள் அவிழ்கின்ற; வளர்கைதை - மேனோக்கி நீண்ட
மடல்களுடன் வளர்வது தாழையினியல்பு; கைதை - தாழை;
 
     முழுமணமே முந்நீரும் கமழ மலர்முருகு உயிர்க்கும் - முன் கூறிய பூக்கள்
எல்லாமும் கூடி முழுதும் மணம் வீசுதலால் கடல் நீரும் அந்த மணங் கமழ உள்ளது
என்பதாம்;முந்நீர் கடல்; கடலடுத்த நகராதலின் இவ்வாறு கூறினார்; முந்நீரும் -
கழிகளின் முடை நாற்ற முடைய கடலின் நீரும் என உம்மை இழிவு சிறப்பு; முருகு -
வாசனை; உயிர்த்தல் - வீசுதல்; திருபரப்புப் பரப்பும் மணல், செழுநிலவின்
றுகள்அனைய
- என்று கூட்டுக. வெண் மணற்பரப்பு செழித்த சந்திரிகையின் சிதறிய
தூள் போன்றது என்பதாம்.
 
     துகள் - தூள்; நிலவின் கதிர் தூளானால் அதுபோல்வது.            4
 
4026. எயிலணையு முகின்முழக்கு மெறிதிரைவே லையின்முழக்கும்
பயிறருபல் லியமுழக்கு முறைதெரியாப் பதியதனுள்