பக்கம் எண் :

பெரியபுராணம்303

ஆடுகொடி மணிநெடுமா ளிகைநிரைக ளலைகமுகின்
காடனைய கடல்படப்பை யெனவிளங்குங் கவின்காட்டும்.       2
 

     (இ-ள்) பீடு....தெருவும் - இந்நகரத்தின் பெருமை நிறைந்த பெருவீதிகளும்;
புத்தருடன்...மறைக்கும் - பௌத்தர்களுடனே, மயிற்பீலியை ஏந்தும் சமண
வேடத்தவர்களும் கூறும் பொருள்போல ஆகாய (வெளியினை)த்தை இல்லையென்று
சொல்லும்படி மறைக்கும்; ஆடு...நிரைகள் - ஆடுகின்ற கொடிகளையுடைய அழகிய
நீண்ட மாடங்களின் வரிகைள் அசைவுள்ள கமுகஞ் சோலையினை ஒத்தன; கடல் -
நகரத்தை அடுத்த கடலானது; படப்பை...காட்டும் - பயிர்களையுடைய தோட்டம்
போலும் விளங்கும் அழகினைக் காட்டும்.
 

     (வி-ரை) இப்பாட்டுப் பல பிரதிகளில் இல்லை. இது வெள்ளிபாடல் என்னும்
ஐயப்பாடுள்ளது. எனது சேக்கிழார் பக்கம் 213 பார்க்க.
 

     புத்தர் - அமண் பொருள் போல் - புத்த சமணர்கள் ஐம்பூதங்களுள்
ஆகாயத்தை ஒப்பாமல் நான்கு பூதங்களே கொள்வர். பொருள் - கூறும்
பொருணிச்சயம் - கொள்கை. மறைத்தல் - (சிலேடையால்) மறுத்தல் என்பதாம்.
 
     அவர் பொருள் போல் தெருவும் ஆகாச வெளிமறைக்கும் என்றது
தெருக்களிலும் மேலே பந்தர் -நடைக் காவணம் - தோரணம் - மேற்கட்டி
முதலியவற்றாலும், கீழே சன நெருக்கம் பொருட் பெருக்க முதலியவற்றாலும் இடை
வெளி தோன்றப்படாதாயிற்று என்பதாம். வினைபற்றி வந்த சிலேடை யுவமம்; கொடி -
கமுகின் காடு அனைய
- நிரையாகத் தூக்கிக்கட்டிய கொடிகள் அசைதல் கமுகு
வரிசைகள் சோலைகளில் அசைவது போலும்; மெய்யும் வினையும்பற்றி எழுந்த உவமம்;
காடு - செறிவு குறித்தது.
 
     கடல் - நகர் கடற்கரையில் உள்ளது; அடுத்துள்ள கடல் படப்பை - சிறு பயிர்
நிறைந்த செழிப்புடைய நிலம். நிறம் - அலைகளை யுடைமை - பரப்பு முதலியன
உவமை; பண்புபற்றி வந்த உவமம்.                              2
 
4024. பன்னுதிருப் பதிகவிசைப் பாட்டோவா மண்டபங்கள்;
அன்னநடை மடவார்க ளாட்டோவா வணியரங்கு;
பன்முறைதூ ரியமுழங்கு விழவோவா பயில்வீதி;
செந்நெலடி சிற்பிறங்க லுணவோவா திருமடங்கள்              3
 
     (இ-ள்) பன்னு......மண்டபங்கள் - யாவராலும் பன்முறையும் ஓதப்படுகின்ற
திருப்பதிகங்களின் இசைப்பாட்டுக்களை மண்டபங்கள் ஓவாமல் உடையன;
அன்ன...அணியரங்கு - அழகு செய்யப்பட்ட ஆடரங்குகள் அன்னம் போன்ற
நடையினையுடைய பெண்களின் ஆடல்களை நீங்காமலுடையன; பன்முறை....பயில் வீதி
- மக்கள் பயில்கின்ற வீதிகள் பலமுறையாகச் சத்திக்கும் இயங்களின் முழக்குடன்
கூடிய விழாக்களை உடையன; செந்நெல்...திருமடங்கள் - திருமடங்கள்
செந்நெல்லரிசியாற் சமைக்கப்பட்டு மலைபோலக் குவியலாக்கிய உணவுப்
பெருக்கத்தினை நீங்காமலுடையன.
 
     (வி-ரை) மண்டபங்களுள் பதிகப்பாட்டு ஓவாதுள்ளன என்றும், அரங்குகளுள்
ஆட்டோவா; வீதிகளில் விழவோவா; மடங்களில் உணவு ஓவா என்றும் கூட்டி
உரைத்தலுமாம்.
 
     ஓவுதல் - நீங்குதல் - ஒழிதல். “ஓவுநாள் உணர்வழியுநாள்” (தேவா - நம்பி);