பக்கம் எண் :

பெரியபுராணம்307

     (இ-ள்) எண்ணில்......வர - எண்ணில்லாத திருவிளக்கு நீண்ட நாட்கள்
முழுமையும் எரித்து வரவே; புண்ணிய.....அருளாலே - சிவ புண்ணியத்தின்
உறைப்புடைய அந்த மெய்த் தொண்டரின் செயலை உலகறியச் செய்வாராகிய
இறைவரது திருவருளினாலே; உண்ணிறையும்...ஓவி - உள்ளே நிறைந்து மீக்கூர்ந்த
பெரிய செல்வமானது மேலும் பெருக நிகழும் தொழில்செய்தல் நீங்கவே;
மண்ணில்....மாட்சிமைத்தாக - உலகில் அவரது இருவினைகளும் மாண்டொழிந்தன
போலச், செல்வம், மாட்சிமை யடையும்படி மாண்டது.
 

     (வி-ரை) எண்ணில் - விளக்குக்களின் அளவற்ற தன்மையும்; நெடுமை -
அனேகம் என்ற தன்மையும்; நாள் எல்லாம் - நாள் முழுதும் அல்லும் பகலும் என்ற
நிலையும் உணர்த்தின.
 

     செயல் புலப்படுப்பார் - செயலினை உலகமறியச் செய்வாராகிய இறைவருடைய;
புலப்படுத்தல் - அன்பின் நெறியினை உலகுக் கறிவித்துக் காட்டியுய்வித்தல்;
இளையான்குடி மாறனார் சரித முதலியவை காண்க.
 
     புலப்படுப்பார் - வினைப்பெயர் ; ஆறனுருபு தொக்கது.
 
     உயர்த்தும் வினைச்செயல் ஓவி - “நின்று தின்றாற் குன்றும் மாளும்” என்பது
பழமொழி; எத்துணைப் பெருஞ் செல்வமாயினும் மேல் உயர்த்தும் செயலின்றி
உள்ளதனையே செலவிட்டு வந்தால் ஒருநாள் மாய்வது திண்ணம். உயர்த்தும்
வினைச்
செயலாவது மேலோங்குவிக்கும் வருவாய் செய்யும் தொழில்; ஓவுதல் -
நீங்குதல்.
 
     இருவினை மாண்டதுபோல என்க. வினைபற்றி வந்த உவமம். மெய்ச் சிவ
புண்ணியத்தினால் இருவினையும் போயொழியும்; அதுபோல அவரது செல்வமும்
மாண்டது. மாளுதல் - ஒழிதல்; மாண்டது மாட்சிமைத்தாக - சொற்சிலேடை;
மாண்டது - மாண்புடைத்தாயிற்று என்றதொரு தொனிக் குறிப்பும் தருதல் காண்க.
சிவநெறிச் செல்லா ஏனையோர் செல்வம் மாளும்போது அல்லற்படுத்துப் பவநெறியில்
ஒழியும். இங்கு அவ்வாறன்றிச் சிவபுண்ணியப் பேற்றினால் செல்வமாளினும்
மாட்சிமைத்தாகவே - பெருமை தருவதாகவே - மாண்டது என்பதாம்.,           8
 
4030. திருமலிசெல் வத்துழனி தேய்ந்தழிந்த பின்னையுந்தம்
பெருமைநிலைத் திருப்பணியிற் பேராத பேராளர்
வருமரபி லுள்ளோர்பா லெண்ணெய்மா றிக்கொணர்ந்து
தருமியல்பிற் கூலியினாற் றமதுதிருப் பணிசெய்வார்.                      9
 
4031. வளமுடையார் பாலெண்ணெய் கொடுபோய்மா றிக்கூலி
கொள முயலுஞ் செய்கையுமற் றவர்கொடா மையின்மாறத்
தளருமன முடையவர்தாஞ் சக்கரவெந் திரம்புரியுங்
களனில்வரும் பணிசெய்து பெறுங்கூலி காதலித்தார்,                 10
 
4032. செக்குநிறை யெள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழன்றும் பாண்டியல்வரு மெருதுய்த்தும்
தக்கதொழில்பெறுங்கூலி தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்.          11
 
     4030. (இ-ள்) திருமலி....பின்னையும் - திருநிறைந்த தமது செல்வப் பெருக்குத்
தேய்ந்து அழிந்த பின்னும்; தம்...பேராளர் - தமது பெருமைத்தன்மை