யின் நிலைத்த திருப்பணியி்னின்றும் பெயராத பெருமையுடையவர்; வரும் மரபில்...இயல்பில் - தாம் வரும் அந்த மரபில் செல்வமுள்ளோர்களிடத்தில் எண்ணெய் வாங்கிக்கொண்டு போய் விற்றுக்கொடுத்து அதனியல்பினால்; கூலியினால்....செய்வார் - அவர் தரும் கூலியினைக் கொண்டு தமது திருப்பணியைச் செய்வாராகி, |
4031. (இ-ள்) வளமுடையார்.....மாற - செல்வ வளமுடையவர்களிடம் எண்ணெய் கொண்டுபோய் விற்றுக்கொடுத்து அதனாற் பெறும்கூலியினைக் கொள்ள முயலுகின்றஅச்செய்கையும் மற்று அவர்கள் எண்ணெய் கொடாமையில் இல்லையாக; தளரும்.....காதலித்தார் - (திருப்பணி முட்டவருதலால்) தளரும் மனமுடைய அந்நாயனார் தாம் செக்கு ஆடும் இடத்தில் வரும் பணிசெய்து அதனாற் பெறும் கூலியினைப் பெற விரும்பியவராய், 10 |
4032. (இ-ள்) செக்குநிறை.....உழந்தும் - செக்கு நிறையும் அளவுப்படி எள் இட்டு ஆட்டிப் பதம் தெரிந்து எள்ளினின்றும் எண்ணெய் பக்கங்களில் எழுதல் கண்டு மிகவும் வருந்தி உழைத்தும்; ஆண்டில் வரும் எருதுய்த்தும் - செக்கினை வட்டமாக சுற்றிவரும் எருதுகளைச் செலுத்தியும்; தக்க.......கொண்டு - தக்கபடி செய்யும் தொழிலினால் பெறும் கூலியினைத் தாம் கைக்கொண்டு; தாழாமை....விளக்கிட்டார் - வழுவாமல் மிக்க திருவிளக்குக்களை எரித்தனர், (அதனால் )தூய திருத்தொண்டினை உலகில் விளக்கியிட்டனர். |
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. |
4030. (வி-ரை) திருமலி செல்வத்துழனி - திரு - வகையும், செல்வம் - தொகையும் குறித்தன. துழனி - முழக்கம் ; பெருக்குக் குறித்தது. |
பின்னையும் - உம்மை உயர்வு சிறப்புநிலை. |
பேராத பேராளர் - பேராத - பெயராத; பிறழாத; பேராளர் - பெருமையினை உடையார். |
வருமரபு - தாம் வரும் தயில வினையாளர் மரபு. மாறி - பெற்றுவிற்று; உள்ளோர் - செல்வமுடையார். |
கொணர்ந்து தரும் - விற்று வந்த தனத்தைக் கொண்டுபோய் கொடுக்கும்; இயல்பாவது அவ்வகையினருக்குக் கொடுக்கும் நியமம். |
செய்வார் - மாற - காதலித்தாராகிப் - பெரும்கூலி கொண்டு விளக்கிட்டார் என்று கூட்டி முடிக்க. |
4031. (வி-ரை) வளமுடையார் - “உள்ளோர்” என்ற முன்கூறிய கருத்து. |
கூலிகொள முயலும் செய்கை - கூலிகொண்டு பணிசெய்ய முயலும் செய்கை. |
மற்று அவர் - வளமுடையார்; கூலிக்கு மாறவும் கொடாமையின் அவர்கள் அருளுக்கு வேறானவர் என்பது குறிப்பு. இவ்வாறு உபகரிக்கவும் மறுக்கும் செல்வர் சிலருடைய வண்கண்மை கூறியவாறு. |
தளரு மனம் - திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்த நிலையினைப் பற்றி மனந்தளர்ந்தனர். |
சக்கர எந்திரம் புரியும் - களன் - செக்கு ஆடும் இடம். பணி - அங்கு அதற்கு உரிய அவ்வேலைகள். |
காதலித்தார் - காதலித்தாராகி; முற்றெச்சம். 10 |
4032. (வி-ரை) செக்குநிறை....உழந்தும் - செக்கில் எண்ணெய் எடுப்போர் அது பற்றிச்செய்யும் தொழில் வகைகள். |