ஈடா - ஒப்ப - சமமாக; உடல் உதிரமொடு - தமது உடலின் உதிரத்தினையே எண்ணெயாகக் கொண்டு; கருவி - வாள்; மிடறரிகருவி. அரிய - அரிந்திடவே. |
அக்கையை - அகரம், மிடறு அரியும் அந்த என முன்னறிசுட்டு. |
பிடித்தருளி எழுந்தருள - முன்னே பிடித்தருளிப் பின்பு விடைமேல் எழுந்தருள. |
எண்ணெய்க் குடமா - என்பதும் பாடம். 15 |
4037. (வி-ரை) உற்ற ஊறு - அரிதலால் உற்ற புண்; ஒளி விளங்க - ஊறுபோய் முன்னையிலும் ஒளிபெற்று விளங்க. |
அஞ்சலி - அஞ்சலியாகக் கூப்பிய கை. |
பொலிந்திருக்க - திருவிளக்குப் பணி செய்தாராதலின் அதன் பயனாக ஞான விளக்கத்துடன் பொலிய. |
ஒளிவிளங்கும் - என்பதும் பாடம். 16 |
4038. | தேவர்பிரான் றிருவிளக்குச் செயன்முட்ட மிடறரிந்து மேவரிய வினைமுடித்தார் கழல்வணங்கி வியனுலகில் யாவரெனா தரனடியார் தமையிகழ்ந்து பேசினரை நாவரியுஞ் சத்தியார் திருத்தொண்டி னலமுரைப்பாம். 17 |
(இ-ள்) தேவர்பிரான்.....வணங்கி - தேவர்கள் பெருமானாராகிய இறைவரது கோயிலினில் எரிக்கும் திருவிளக்குப்பணி முட்டியதனால் தமது மிடற்றினை அரிந்து பொருந்துதற்கரிய வினையினைச் செய்து முடித்த கலிய நாயனாரது திருவடிகளை வணங்கி (அத்துணையானே); வியனுலகில் .......பேசினரை - பரந்த உலகத்தில் யாவரே யாயினும் சிவனடியார் தம்மை இகழ்ந்து பேசினவர்களை; நா அரியும்...நலமுரைப்பாம் - நாக்கினை அரியும் சத்தியார் என்னும் நாயனாரது திருத்தொண்டின் நன்மையாகும் வரலாற்றினைச் சொல்வோம். |
(வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது மரபின்படி, இதுவரை கூறி வந்த சரிதத்தை முடித்துக் காட்டி மேல்வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். |
திருவிளக்கு....மிடறரிந்து - கலியநாயனாரது சரித சாரம்; மேவரிய வினைமுடித்தார் - “வினை முடிக்க” (4035) என முன்னருங் கூறியது காண்க. மேவரிய - யார்க்கும் செய்தற்கு அரிதாகிய. |
யாவரெனாது....நாவரியும் - சத்தி நாயனாரது சரிதக் குறிப்பு. யாவரெனாது - உலகநிலையில் யாவரே யாயினும் பாராது. 17 |
சரிதச் சுருக்கம் ;- கலிய நாயனார் புராணம் - தொண்டை நன்னாட்டில் வளமிக்க திருவொற்றியூரில் திலதயில வினையாளர் மரபினர் வாழும் சக்கரப்பாடித் தெருவில் அந்தக் குலத்தில் அவதரித்தவர் கலிய நாயனார். அவர் மிகுந்த செல்வ முடையரா யிருந்தார். தமது மரபின் உரிமைத் திருத்தொண்டினெறி நின்று படம் பக்க நாயகரது திருக்கோயிலினுள் அல்லும் நெடும்பகலும் உள்ளும் புறம்பும் திருவிளக்கின் அணி விளைத்து வந்தனர். |
இவ்வாறு நீண்ட நாட்கள் எரித்துவர, அவரது திருத்தொண்டின் பெருமையினை உலகுக்குப் புலப்படுப்பாராகி, இறைவர் திருவுளங்கொண்டமையால் செல்வம் மேலும் உயரும் நிலை நீங்கியது; அதனால் உண்ணிறையும் பெருஞ் செல்வம் |