|
மணிதுன்று நீர் - மலைகள் குன்றுகளிலிருந்து மணிகளை வரன்றி
அலைத்துக் கொண்டுவரும் நீர். அழகிய நீர் என்றலுமாம்;
“மணிநீரு மண்ணும்” (குறள்). |
கான்யாறு - இந்நாட்டுப் பகுதிகளின் இயற்கை யமைப்புக்
குறித்தது. |
துறுகற்சுரம் - துறுத்தல் - மேற்செல்ல வொட்டாது
துன்புறுத்துதல்; கற்சுரம் - கற்கள் பொருந்திய
கானங்கள்;இவை நோய்க்கிடமாயுள்ளவை என்பது சுரம் என்ற
சொற்சிலேடையாற் குறிப்பிட்டது கவிநயம். |
குன்ற - வள- நாடு என்றமையால் முன் கடந்து போந்த
நாட்டுப் பகுதிகள் அத்துணை வளமில்லாதன என்பது
குறிப்பு; நலமல்லாதவற்றை வெளிப்படக் கூறாது,
குறிப்பிற் காட்டும் உயர் கவிமரபு பற்றியது. புகுந்தார்
- வினைமுற்று. |
குலவுமடியே னகம்புகுந்தார் - புகுந்தார் - வினைப்பெயர்;
புகுந்தாராகிய நம்பிகள்; இவ்வாறு குறித்தது
மலைநாட்டு இவ்யாத்திரையுடன் நம்பிகளது இந்நிலவுலக
யாத்திரைகள் நிறைவுபெற்று இனிக் கயிலைக்குச் செல்லுநிலை
வருதலால், அவரது வரலாறு கூறவந்த நிலை முற்றுப்
பெறுமிடத்து வணக்கம் செய்யும் மரபுக்குறிப்பு,
அடியேனது வலிய வறிய கற்போன்ற அகத்தினும் புகுந்த அவருக்கு,
அதனை நோக்க மெல்லிய கல் நிறைந்த வளமுள்ள குன்ற
நாட்டிற் புகுதல் எளிது என்றதொரு குறிப்பும்
கண்டு கொள்க; மேல் வரும் கல்லில் நடக்கப் பழகிக் கொள்ள எனது
கல்மனத்தைக் கருவியாக்கிக் கொண்டு எனக்கும் ஓர்
அருளிப்பாடு செய்தது அவரது பெருமை என்பதும்
குறிப்பு. “வரையின்பாற் குஞ்சரி நடந்தசெயல் கூறுபுது மைத்தோ?...செம்மலடி
தீயே னெஞ்சக வடுக்கலினு நின்றுலவு மென்றால்” (தெய் -
திருமணப் - 231) என்ற கந்த புராணம் காண்க.
குலவும் - விளங்கும்; விளக்கமாவது நம்பிகளை வணங்கும்
வாய்ப்புடையதன்மை; அகம் - இரண்டனுள் முன்னையது ஏழனுருபு;
பின்னையது மனம்; சொற்பின் வருநிலை. 15
|
திருப்புக்கொளியூர் (அவிநாசி)
|
திருச்சிற்றம்பலம் (பண்- குறிஞ்சி - 7-ம்திருமுறை)
|
முதலைவாய்ப் பிள்ளையழைத்த திருப்பதிகம்
|
எற்றான் மறக்கே னெழுமைக்கு மெம்பெரு மானையே
உற்றாயென் றுன்னையே யுள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே!
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
|
1
| |
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாமணிநீ
ஒழிவ தழகோசொல் லாயரு ளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
யிழியாக் குளித்த மாணியென் னைக்கிறி செய்ததே.
| 2
| |
எங்கேனும் போகினு மெம்பெரு மானை நினைந்தக்காற்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலைப்
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே!
யெங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.
| 3
| |
உரைப்பா ருரையுகந் துள்கவல் லார்தங்க ளுச்சியாய்!
அரைக்கா டரவா! வாதியு மந்தமு மாயினாய்!
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே!
கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே. | 4
| |