| | நள்ளாறு தெள்ளா றரத்துறை வாயெங்க ணம்பனே! வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் றோலை விரும்பினாய்! புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை யுள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே. 9 | |
| | நீரேற வேறு நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியைப் போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக் காரேறு கண்டனைத் தொண்டனா ரூரன் கருதிய சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே. 10 | |
| திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு;- இறைவரிடம் வேண்டி முதலை வாயினின்றும் மகனை மீண்டுப் பெறுதல்; பதிகம் 2-4-9. பாட்டுக்கள் பார்க்க. |
பதிகப்பாட்டுக் குறிப்பு ;- (1) எற்றான் மறக்கேன் - “எத்தான் மறவாதே” (நம்பி - தேவா) என்றபடி எவ்வாற்றாலும் மறக்ககில்லேன் என்பதாம்; எழுமை - ஏழுபிறப்பு; ஏழு வகைப் பிறப்பு என்றலுமாம்; உற்றாய் - உற்றவர்; உறவு எஞ்ஞான்றும் விடாது உடனாகிப் பொருந்தியவர்; ஆதலின் எழுமையும் மறக்கேன் என்றார்; உணர்ந்து - உணர்ச்சியிற் கொண்டு; புற்றாடு அரவு - அரவுக்கு இயற்கை யடைமொழி; இறைவர் அணிந்த அரவு புற்றில் உள்ளதென்பதன்று; அவிநாசியே - விநாசமில்லாதவரே! அவிநாசி - இறைவர் பெயர்; புக்கொளியூரில் எழுந்தருளிய நாசமில்லாத இறைவரே; மேல்வரும் பாட்டுக்களிலும் இவ்வாறே விளிப்பது காண்க. அவிநாசியைக் - காரேறு கண்டனை (10) என்றதும் காண்க. அவர் இருக்கும் இடமாதலின் ஆகுபெயராய் ஊரும் அப்பெயரால் வழங்கலாயிற்று; ஊர்ப் பெயராகவே கொள்ளும் வழக்குத் தவறு; புக்கொளியூர் - ஊர்ப்பெயர்; சிவபெருமான் ஊழிக்காலத்தில் அக்கினிதாண்டவம் செய்தபோது அரியயன் முதலிய தேவர்கள் அஞ்சிப் புக்கு இங்கு ஒளித்தமையால் இப்பெயரெய்தியதென்பது தலபுராணம்; பற்றாக - உம்மையே பற்றாகக் கொண்டு; அவ்வாறு பற்றாதற்குக் காரணம் நீர் பசுபதியாயும் பரமேட்டி யாயும் உள்ள தன்மையேயாம் என்றது; எத்தான் - என்பதும் பாடம்; - (2) வழிபோவார்..அழகோ - இது முதலைவிழுங்கிய சிறுவனது வரலாறு என்றும், அருளோங்கு சடையான் என்பது அவன் பெயர் என்றும், வரலாறு கர்ன பரம்பரை; இது அவனை விளித்துக் கூறியருளியதாகப் பொருளுரைப்பார்; இழியா - இழிந்து - இறங்கி; மாணி - பிரமசாரி; அச் சிறுவன். என்னை கிறி செய்தது - மாணியே இவ்வாறு அழித்தது என்னை?- (3) கொங்கே...இலை -இது நம்பிகளது திருமுருகன்பூண்டி வேடுபறி வரலாற்றின் அகச்சான்று; (3911 - 3918). வேடர்களாய் வந்தவர்கள் சிவனருள் வழியே வந்த சிவகணங்கள் என்பதும் போதருதல் காண்க; சிவனருள் நினைவுடனிருப்பார்க்கு எத்துன்பங்களும் வாரா என்பதும் அறிவுறுத்தி யருளப்பட்டவாறும் காண்க. கொங்கே - தீய குணமுடையார் வாழும் கொங்கு நாட்டினிலே என்பது குறிப்பு; அவர் குணஞ் செயல்களைப் பற்றித் திருமுருகன் பூண்டிப் பதிகத்துட் கூறியவை பார்க்க. உனை...பிறவாமையே - நான் வேண்டும் வரம் ஒன்றிருக்குமாகில் அது பிறவா வரமொன்றே என்பது. “வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை” (குறள்) என்றதும், அதனை எடுத்தாண்டு விரித்தருளிய திருக்களிற்றுப்படியாரும் (40) இங்கு நினைவு கூர்தற்பாலன. “வேண்டினஃ |