பக்கம் எண் :

100தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


மானீச்சரம் இக்கோயிலுக்குள் உள்ளது.

கல்வெட்டு:

அரசாங்கத்தினர் படி எடுத்த கல்வெட்டுக்கள் 67. அவை இராஜராஜன் I (கி.பி.985-1014) காலத்திலிருந்து காணப்படுகின்றன. இரண்டாம் பிராகாரம் இராஜராஜன் I இராஜ இராஜேந்திரன் I இவர்கள் காலத்திற்குப் பிந்தியதாகும். இக்கோயில் அர்த்தமண்டபத்தைக் கட்டியவன் இறையூர் உடையான் அரையன் கங்கைகொண்டானான சோழ விச்சாதரப் பல்லவரையன். முதல் பிராகாரத்துத் தென்னந் திருவாயிலுக்கு ராஜராஜன் திருவாசல் என்று பெயர்.

கர்ப்பக் கிருகத்தைச் சுற்றியுள்ள நீராழிப்பத்தி மண்டபத்தைத் திருப்பணி செய்தவன் ஆர்க்காடு கிழான் சேதுராயன் என்பவன். இத்தலத்து ‘நரலோக வீரன் திருமண்டபம்’ என்ற ஒன்று இருந்ததாக ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. சிதம்பரம் கோயில் கல்வெட்டில் நரலோகன் என்று கூறப்பட்டவன் கோப்பெருஞ்சி்ங்கன். அக்காலத்து நூற்றுக்கால் மண்டபம் அவனால் கட்டப்பெற்றது.

அதுபோல இத்தலத்தும் நூற்றுக் கால் மண்டபத்தை அவன் கட்டியிருக்கக்கூடும். திருமதில் திருப்பணி வேளாக்குறிச்சி மகாதேவ பண்டாரத்தின் சிஷ்யரான அருணாசலத் தம்பிரானால் செய்யப்பெற்றது. மூன்றாங்குலோத்துங்கன் காலத்திலும் இக்கோயில் அகழால் சூழப்பட்டிருந்தமை அறியலாம்.

இவ்வூர், முதல் இராஜராஜன் காலத்தில் க்ஷத்திரியசிகாமணி வளநாடு என்றும், மும்முடிச்சோழ வளநாடு என்றும் முதற்குலோத்துங்கன் காலத்திலும் அதற்குப்பின்பும், குலோத்துங்க சோழவள நாட்டைச் சார்ந்ததெனவும் கூறப்பெறுகிறது. இது பனையூர்நாட்டுப் பிரமதேயமான திருப்புகலூர் என வழங்கப்பெறுகிறது. இறைவன் கோணப்பெருமான் என்று குறிப்பிடப்பெறுகிறார், இங்குள்ள அம்பிகை நம்பிராட்டியார் என வழங்கப்பெறுகிறார்.

இராஜராஜன் காலத்தில் அம்மைக்கு நிவந்தங்கள் அளிக்கப்பெற்றன. திருநாவுக்கரசு நாயனார் குளிச்செழுந்த நாயனார் எனக் குறிக்கப்பெறுகிறார். இவருக்கு இராஜராஜன் காலத்தில் நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருக்கிறது. முருகநாயனார் திருமடம் நம்பிநாயனார் திருமடம் என்றும், திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தருமபுரத்து நாயனார், யாழ்மூரி நாயனார் என்றும், திருநீலநக்க