நன்னிலம், சன்னாநல்லூர்,
நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை - திருவாரூர்
புகைவண்டி இருப்புப் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக்
கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
புன்னாகவனம், சரண்யபுரம்,
ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும்
மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும்
அகழிசூழ நடுவில் இருக்கிறது. அக்னி பகவான் பூசித்துப்
பேறுபெற்ற தலம். திருநாவுக்கரசர் முத்தி பெற்ற
தலம். முருக நாயனாருடைய அவதார ஸ்தலம். சுந்தரமூர்த்தி
நாயனாருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம்.
மேகங்கள் பூசித்த தலம்.
பெயர்கள்:
இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர்;
இறைவி கருந்தாள் குழலியம்மை. இறைவன் திருநாமம் தேவாரங்களில்
‘கோணப்பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே’
‘கருந்தாள் குழலியும் தாமும் கலந்து’ என்பன அம்மையப்பர்,
திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகள்.
தீர்த்தம்:
அக்னிதீர்த்தம்.
இதற்குப் பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு.
முடிகொண்டான் ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில்
ஓடுகிறது.
தல விருட்சம்:
புன்னை. ‘புன்னைப்
பொழிற்புகலூர்’, ‘புன்நாகம் மணங்கமழும் பூம்புகலூர்’
என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள்.
விழா:
சித்திரைச் சதயத்தைப்
பத்தாம் நாளாகக்கொண்டு விழா நடைபெறுகிறது. பத்துநாளிலும்
அப்பர் சுவாமிகள் வரலாற்றை ஒட்டிய ஜதீகமே நினைவூட்டப்பெறுகின்றது.
வைகாசி மாதம் பருவ இறுதியாகப் பிரமோற்சவம்
நடைபெறுகிறது. சந்திரசேகரர் விசேஷமான மூர்த்தி.
வேளாக்குறிச்சி
ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது. வர்த்த
|