102. சீகாழி
பண் : குறிஞ்சி
பதிக எண் :102
திருச்சிற்றம்பலம்
1102. உரவார்கலையின் கவிதைப்புலவர்க்
கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங்
கலிக்காழி
அரவாரரையா வவுணர்புரமூன்
றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத்
தலையாரே. 1
1103. மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய்
முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங்
கலிக்காழி
___________________________________________________
1. பொ-ரை: ஞானம் நிறைந்த கலை
உணர்வோடு, கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு
நாளும் கரவாத வள்ளன்மை மிக்க கைகளை உடைய
கற்றவர்கள் வாழும் ஒலி மிக்க காழி மாநகரில்
விளங்கும் பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே!
அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை
ஏந்தியவனே! என்று போற்றுபவர், தத்துவ ஞானத்தில்
தலையானவராவர்.
கு-ரை: கவிவாணர்க்கு ஒருநாளும்
கரவாதபடி வழங்குங்கற்றவர்சேரும் காழியரசே!
திரிபுரம் எரித்த செல்வா என்பவர்களே
தத்துவஞானத்தில் தலையானவர்கள் என்கின்றது. உரவு
- ஞானம். கரவா - மறைக்காத. கலி - ஒலி. அரவு ஆர்
அரையா எனப்பிரிக்க. சரவா - அம்பை உடையவனே.
2. பொ-ரை: சூழ்ந்து மொய்த்தலை
உடைய வண்டுகள் தங்கி உண்ணும் மும்மதங்களையும்,
தொங்குகின்ற வாயையும், முரண்படுதலையும் உடைய
களிற்று யானையின் கை போல வாழை மரங்கள்
|