பக்கம் எண் :

 102. சீகாழி1005


மைசேர்கண்டத் தெண்டோண்முக்கண்

மறையோனே

ஐயாவென்பார்க் கல்லல்களான

வடையாவே. 2

1104. இளகக்கமலத் தீன்களியங்குங்

கழிசூழக்

களகப்புரிசைக் கவினார்சாருங்

கலிக்காழி

அளகத்திருநன் னுதலிபங்கா

வரனேயென்

றுளகப்பாடு மடியார்க்குறுநோ

யடையாவே. 3

____________________________________________________

காய்களை ஈனும் ஒலி நிறைந்த காழிப் பதியில், நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனாய் விளங்கும் மறையோனே! தலைவனே! என்பவர்களை அல்லல்கள் அடையா.

கு-ரை: காழிமறையோனே ஐயா என்பவர்களுக்கு அல்லல்கள் அடையா என்கின்றது, யானையின் கையைப்போல வாழைக்குலை ஈனும் காழி என வளம் உரைத்தவாறு. மும்மதம் - கபோலம், கரடம், கோசம் என்ற மூன்றிடத்திலும் பொருந்திய மதம் நால் வாய் - தொங்குகின்ற வாய். மை - விடம்.

3. பொ-ரை: முறுக்கவிழ்ந்த தாமரை மலர்கள் பிலிற்றிய தேன் ஓடுகின்ற கழிகள் சூழப் பெற்றதும், சுண்ணாம்பினால் இயன்ற அழகு பொருந்திய மதில்களை உடையதுமான, ஆரவாரம் மிக்க காழிப்பதியில் அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய உமையம்மையின் கணவனே, அரனே! என்று மனம் உருகிப்பாடும் அடியவர்களை மிக்க துன்பங்கள் எவையும் அடையா.

கு-ரை: காழியில் எழுந்தருளியிருக்கின்ற உமையொரு பாகனை அரனே என்று மனம் இளகப் பாடுகின்ற அடியார்கட்குத் துன்பம்சேரா என்கிறது. இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி - முறுக்கவிழ தாமரையிலிருந்து உண்டான கள் ஓடுகின்ற கழி. களகப்புரிசை - சுண்ணாம்புச்சாந்து பூசப்பெற்ற மதில். கவின் - அழகு.