1105. எண்ணார்முத்த மீன்றுமரகதம்
போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங்
கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே
யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம்
நணுகும்மே. 4
1106. மழையார்சாரற் செம்புனல்வந்தங்
கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக்
கலிக்காழி
உழையார்கரவா வுமையாள்கணவா
வொளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள்
குணவோரே. 5
___________________________________________________
அளகம் - கூந்தல், நல்நுதலி - நல்ல
நெற்றியை யுடையாளாகிய பார்வதி. உள் அகப்பாடும்
- மனம்பொருந்தப் பாடுகின்ற.
4. பொ-ரை: அழகிய கமுக மரங்கள்,
எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல
அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம்
போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப்
பதியில் விளங்கும் பெண்ணோர் பாகனே! பித்தனே!
பிரானே! என்பவர்களை வினைகள் நண்ணா.
நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்.
கு-ரை: காழியின்கண்ணுள்ள
பெண்ணொருபாகனே பித்தா என்பார்க்கு வினைகள்
நண்ணா, இன்பம் நணுகும் என்கின்றது. எண்ணார்
முத்தம் - எண்ணுதற்கரிய முத்தம். கமுகு முத்தம் போல
அரும்பி, மரகதம்போல் காய்த்து, பவளம்போல்
கனியும் காழி என வளங்கூறியது.
5. பொ-ரை: மேகங்கள் தங்கிய
குடதிசை மலைக் சாரல்களிலிருந்து சிவந்த நிறமுடைய
தண்ணிர் வந்து அடிகளை வருட, அதனால்
|