1107. குறியார்திரைகள் வரைகணின்றுங்
கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங்
கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா
வென்பாரை
அறியாவினைக ளருநோய்பாவம்
மடையாவே. 6
____________________________________________________
மூங்கில் போன்று பருத்த கரும்புகளில்
கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலிமிக்க
சீகாழிப் பதியில் எழுந்தருளிய மானேந்திய
கையனே, உமையம்மையின் கணவனே! ஒளி பொருந்திய
சங்கக் குழையை அணிந்தவனே என்று கூறிப் போற்ற
வல்லவர்கள் குணம் மிக்கவராவர்.
கு-ரை: மான் ஏந்தி, மங்கை கணவா,
சங்கக் குழையா எனக் கூறவல்லவர்கள் குணமுடையராவர்
என்கின்றது. மலைச்சாரலில் மழைபெய்து, செந்நீர்
வந்து அடிவருட கரும்பு தூங்கும் சோலைக் காழி என
வளங்கூறிற்று. கழையார் கரும்பு - கரும்பினுள்
ஒருசாதி. மூங்கிலை ஒத்த வளமான கரும்பெனினும் ஆம்.
உழை - மான். கரவா - கையை உடையவனே.
6. பொ-ரை: தாள ஒலிக் குறிப்போடு
கூடிய அலைகளை உடைய, மலைகளிலிருந்து வரும் அருவிகள்
இரு கரைகளுக்கும் உள்ளடங்கிய ஆறாக அடித்துக்
கொண்டுவரும் மிளகின் கொடித் தண்டுகளின்
சுவையைத் தன் தண்ணீருக்கு வழங்கும். ஆரவாரம்
மிக்க காழிப் பதியில் எழுந்தருளிய மணம் கமழும்
கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினனே! விடையை
ஊர்ந்து வருபவனே! என்று கூறுபவரை வினைகள் அறியாது
அகலும். அவர்களை அரிய நோய்கள் பாவங்கள் அடைய
மாட்டா.
கு-ரை: கொன்றைச் சடையா, விடையா
என்பாரை வினைகள் அறியவேமாட்டா; நோய்களும்
பாவங்களும் அடையா என்கின்றது. மலைகளிலிருந்து
குறித்தலை உடைய அலைகளோடு கூடிய கரையையுடைய ஆறுகள்,
மிளகில் இருந்து கழிக்கப்பட்ட சம்பிரசத்தைக்
கொடுக்கும் என காழிச் சிறப்பு தெரிவித்தது. வெறி
- மணம். சம்பு - தண்டு இரசம் - சுவை.
|