பக்கம் எண் :

1008திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


* * * * * * 7

1108. உலங்கொள்சங்கத் தார்கலியோதத்

துதையுண்டு

கலங்கள் வந்து கார்வயலேறுங்

கலிக்காழி

இலங்கைமன்னன் றன்னையிடர்கண்

டருள்செய்த

சலங்கொள்சென்னி மன்னாவென்னத்

தவமாமே. 8

1109. ஆவிக்கமலத் தன்னமியங்குங்

கழிசூழக்

காவிக்கண்ணார் மங்கலமோவாக்

கலிக்காழிப்

பூவிற்றோன்றும் புத்தேளொடுமா

லவன்றானும்

மேவிப்பரவு மரசேயென்ன

வினைபோமே. 9

__________________________________________________

7. * * * * * *

8. பொ-ரை: வலிய சங்குகளை உடைய கடலினது வெள்ளத்தால் மோதப்பட்டுத் தோணிகள் வந்து கரிய வயலின்கண் சேரும் ஒலி மிக்க சீகாழியில் எழுந்தருளிய, இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புறுத்திப்பின் அருள் செய்த, கங்கை சூடிய திருமுடியினை உடைய மன்னவனே! என்று சிவபிரானைப் போற்றத் தவம் கைகூடும்.

கு-ரை: இலங்கை மன்னர்க்கு அருள் செய்த அரசே! என்று சொல்லத் தவம் உண்டாம் என்கின்றது. ஓதத்தால் உந்தப்பட்டு மரக் கலங்கள் வயலைச் சாரும் காழி என்க. ஆர்கலி - கடல். கலங்கள் - தோணிகள். சலம் - கங்கை.

9. பொ-ரை: ஓடைகளில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்திருப்பதும், நீலமலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல ஒலி ஓவாது கேட்பது