பக்கம் எண் :

 103. திருக்கழுக்குன்றம்1009


1110. மலையார்மாட நீடுயரிஞ்சி

மஞ்சாருங்

கலையார்மதியஞ் சேர்தருமந்தண்

கலிக்காழித்

தலைவாசமணர் சாக்கியர்க்கென்று

மறிவொண்ணா

நிலையாயென்னத் தொல்வினையாய

நில்லாவே. 10

1111. வடிகொள்வாவிச் செங்கழுநீரிற்

கொங்காடிக்

கடிகொள்தென்றல் முன்றினில்வைகுங்

கலிக்காழி

___________________________________________________

மாகிய செழிப்புமிக்க சீகாழியில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் வந்துபரவும் அரசனாக விளங்கும் பெருமானே என்று சொல்ல நம் வினைகள் போகும்.

கு-ரை: அயனும் மாலும் வணங்கும் அரசே என்று சொல்ல வினைபோம் என்கின்றது. பொய்கைகளிலுள்ள தாமரைகளில் அன்னம் நடமாடுகின்ற உப்பங்கழிகளைச் சுற்றிலும் மகளிர் மங்கல ஒலி நீங்காத காழி என்க. ஆவி - வாவி. காவிக்கண்ணார் - நீலமலர் போலும் கண்ணையுடைய பெண்கள். பூவில்தோன்றும் புத்தேள் - பிரமன். மேவி - விரும்பி.

10. பொ-ரை: மலை போலுயர்ந்த மாட வீடுகளின், மேகங்கள் தவழும் நீண்டுயர்ந்த மதில்களில் கலைகள் நிறைந்த மதி வந்து தங்கும் அழகிய குளிர்ந்த ஒலிமிக்க காழிப் பதியின் தலைவனே! சமண புத்தர்களால் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே! என்று போற்ற நம் தொல்வினைகள் நில்லா.

கு-ரை: காழித்தலைவா, புறச்சமயிகளால்அறியப்படாதவனே என்று சொல்ல, பழவினை நில்லா என்கின்றது. மலையார் மாடம் - மலையையொத்த மாடங்கள். நீடு உயர் இஞ்சி - நீண்ட உயர்ந்த மதில். மஞ்சு - மேகம்.

11. பொ-ரை: தேன் மணங் கொண்ட வாவியில் மலர்ந்த செங்கழு நீர்ப் பூவின் மகரந்தங்களில் படிந்து அவற்றின் மணத்தைக்